தேதி: March 3, 2009
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
மில்க்மெயிட் - 1 ரின்
தண்ணீர் - 2 ரின்
ஜெலற்றீன் - 1 மேசைக்கரண்டி
வெனிலா எசன்ஸ் - 3 மேசைக்கரண்டி
சீனி - ருசிக்கேற்ப
ஒரு பாத்திரத்தில் மில்க்மெயிட்டை ஊற்றவும்.
அதே ரின்னில் இரு முறை தண்ணீர் எடுத்து ஊற்றி சீனியும் சேர்த்து கரைத்து அடுப்பில் வைத்து காய்ச்சவும்.
2 தரம் பொங்கியவுடன் இறக்கி நன்கு ஆறவிடவும்.
1/4 கப் சுடுநீரில் ஜெலற்றீனைக் கரைத்து ஆறிய பாலில் விடவும்.
வெனிலா எசன்ஸ்சைச் சேர்த்து பீட்டரால் அல்லது கரண்டியால் நுரை பொங்க அடிக்கவும்.
அதை ஒரு பாத்திரத்தில் ஊற்றி ஃப்ரிசரில் 6-7 மணி நேரம் வைக்கவும்.
பின்பு அதை வெளியே எடுத்து 2 மடங்கு பொங்கிவரும் வரை அடிக்கவும்.
மீண்டும் ஃப்ரிசரில் ஒரு மணி நேரம் வைக்கவும்.
தேவையான போது எடுத்து பரிமாறவும்.
Comments
திருமதி வத்சலா நற்குணம்
அக்கா உங்களுடைய குறிப்பில் இருந்த வனிலாஐஸ் கிறீம் மிக மிக சுவையாக இருந்தது அத்துடன் இப்படி ப்பட்ட சுவையான குறிப்பை தந்ததிற்கு உங்களுக்கு என் நன்றியை தெரிவிக்கின்றேன் .
அன்புடன்
துஷ்யந்தி கலைவேந்தன்
"முயற்சியுடையோர் இகழ்ச்சியடையார்"
துஷ்யந்தி
துஷ்யந்தி,வனிலாஐஸ் கிறீம் செய்து பின்னூட்டம் அனுப்பியமைக்கு மிக்க நன்றி.
நன்றி,
"அன்பான சொல் மருந்தாக இருப்பதோடு வாழ்த்தவும் செய்கிறது"