செளசெள கேரட் கூட்டு

தேதி: March 3, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

Average: 5 (1 vote)

 

செளசெள - ஒன்று
கேரட் - 2
துவரம் பருப்பு - ஒரு கப்
பச்சை மிளகாய் - 4
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
தேங்காய் - 3 துண்டு
சீரகம் - 1 1/2 தேக்கரண்டி
எண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி
கடுகு - ஒரு தேக்கரண்டி
கடலைப்பருப்பு - 1 1/2 தேக்கரண்டி
பெருங்காயம் - ஒரு சிட்டிகை
கறிவேப்பிலை - ஒரு கொத்து
உப்பு - தேவையான அளவு


 

மேலே குறிப்பிட்டுள்ள தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
செளசெள, கேரட் இரண்டையும் தோல் நீக்கி பொடியாக நறுக்கிக் கொள்ளவும். தேங்காயை துண்டுகளாக நறுக்கி வைக்கவும். துவரம் பருப்பை வேக வைத்து தயாராக வைத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் நறுக்கின செளசெள, கேரட், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும்.
மிக்ஸியில் தேங்காய், சீரகம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை போட்டு அரைத்து விழுதாக எடுத்துக் கொள்ளவும்.
காய்கள் நன்கு வெந்ததும் அரைத்த விழுதை போட்டு கிளறி விடவும்.
5 நிமிடங்கள் கழித்து வேக வைத்து எடுத்து வைத்திருக்கும் பருப்பை ஊற்றி கிளறவும். இந்த கலவை நன்கு 10 நிமிடம் வரை கொதித்ததும் இறக்கி வைத்து விடவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கடலை பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயம் போட்டு தாளித்து இறக்கி வைத்திருக்கும் கூட்டில் கொட்டவும்.
சுவையான செளசெள கேரட் கூட்டு தயார். இதை பூரி, சப்பாத்தி மற்றும் சாதத்துடன் சேர்த்து சாப்பிடலாம். இதே கூட்டை செளசெளவிற்கு பதிலாக கோஸ் அல்லது புடலங்காய் போட்டும் செய்யலாம்.
அறுசுவை உறுப்பினரான <b> திருமதி. மைதிலி பாபு </b> அவர்கள் இந்த செளசெள கேரட் கூட்டு குறிப்பினை அறுசுவை நேயர்களுக்காக வழங்கியுள்ளார். செய்து பார்த்து உங்கள் கருத்தினை பகிர்ந்துக் கொள்ளவும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

மிகவும் நன்றாக இருக்கின்றது. நான் எப்பொழுதும் கூட்டு என்றவுடன் பாசிபருப்போ அல்லது கடலை பருப்போ வைத்து தான் செய்துள்ளேன்.
இரண்டவது படத்தினை பார்த்த பொழுதே இது மைதிலி உடையது என்று நினைத்தேன். எப்படி தான் இவ்வளவு அழகாக காய்கள் எல்லாம் வெட்டி முடியுதோ(இரண்டு குழந்தைகளை வைத்து கொண்டு..)மிகவும் பொருமை தான் போங்க.
அன்புடன்,
கீதா ஆச்சல்

Hi,

Could you please tell me shat is sowsow? and where can i buy it?

thanks
Esan

ஹாய் கீதா,
நான் குழந்தை தூங்கும் போது சீக்கரம் சமயல் செய்து விடுவேன், இது தான் என்னுடய சீக்ரட். காய் வெட்ட தான் கொஞ்சம் நேரம் பிடிக்கும். உங்களுடய வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி.

HI,

Chow Chow is a Chinese name also its called 'Chayote' or vegetable pear. You can get this any Oriental/Indian grocery shop.

என்றும் அன்புடன்,
மைதிலி.

Mb

Hi Mythilibabu

Thank you for informing what is chowchow.

thanks again

loving
Esan

மைதிலி,
இன்று உங்களின் இந்த செள செள கேரட் கூட்டு செய்தேன் மிகவும் நல்ல டேஸ்ட்
தாளிப்பை 2 டீஸ் ஸ்பூன் நெய்யில் தாளிதம் செய்துப்போட்டேன் மிகவும் மணம் மற்றும் அருமையான டேஸ்ட்

Think Positively U will achieve everything
மஹாபிரகதீஸ்,China

Think Positively U will achieve everything
மஹாபிரகதீஸ்,China

ஹாய் மஹாபிரகதீஸ்,
அப்படியா நெய் சேர்த்து பண்ணிங்கள அப்பொ அருமையான சுவைதான் சொலுங்க...
ரொம்ப சந்தோஷம் பா. பின்னூட்டம் அனுப்பியதற்கு மிகவும் நன்றி.

என்றும் அன்புடன்,
மைதிலி.

Mb

மைதிலி,
உங்க சௌசௌ கேரட் கூட்டு செய்தேன்.முதன்முறையாக துவரம்பருப்பில் கூட்டு செய்தேன்.நன்றாக வந்தது.குறிப்புக்கு நன்றி.

நானும் இதுபோல்தான் செய்வேன்..ஆனால் அரைப்பில் கறிவேப்பிலை மட்டும் சேர்த்ததில்லை...உங்கள் முறைப்படி அதையும் சேர்த்ததில் இளம்பச்சை நிறத்தில் அருமை...நன்றி

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

நன்றாக இருத்தது