கிங் ஃபிஷ் ரோஸ்ட்

தேதி: March 3, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.5 (2 votes)

 

கிங் ஃபிஷ் - 1/2 கிலோ
மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
மிளகாய் தூள் - 1/2 ஸ்பூன்
உப்பு - 3/4 ஸ்பூன்
வதக்க:
வெங்காயம் - 2
மிகப்பொடியாக நறுக்கிய இஞ்சி - ஒரு சிறிய துண்டு
பூண்டு - 4 பல்
பாதியாக கீறிய பச்சை மிளகாய் - 2
தக்காளி - ஒன்று
பொடியாக நறுக்கிய மல்லி இலை - சிறிதளவு
கறிவேப்பிலை - 6 இலைகள்
மிளகாய் தூள் - 1/2 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - மீன் பொரிக்க


 

மீனில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு தூள் சேர்த்து 30 நிமிடம் ஊற வைக்கவும்.
பிறகு ஊறவைத்த மீனை எண்ணெயில் வறுத்து எடுக்கவும். மொறுக வறுக்காமல் முக்கால் அளவு வறுக்கவும்.
வறுத்த மீதி எண்ணெயில் இஞ்சி பூண்டினையும், பச்சை மிளகாயும் சேர்த்து வதக்கி வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.
பின்பு தக்காளி, மல்லி இலை, கறிவேப்பிலை மற்றும் மஞ்சள்தூள், மிளகாய் தூள் கலந்து கூட்டாக வரும் வரை வதக்கவும்.
தேவைக்கு உப்பும், 3/4 கப் தண்ணீரும் சேர்த்து கொதித்ததும் வறுத்த மீனை சேர்த்து தீயை குறைத்து 15 நிமிடம் மூடியிட்டு வேக விடவும்.
திறந்து பார்த்தால் கிரேவி வற்றி திக்காக வந்திருக்கும். அபார சுவையான மீன் ரோஸ்ட் தயார்.


கடுகு, சீரகம், சோம்பு, வெந்தயம் எதுவும் சேர்க்காத எளிமையான குறிப்பு ஆனால் கட்டாயம் பாராட்டை பெற்றுத் தரும் என்பதில் சந்தேகமே இல்லை.

மேலும் சில குறிப்புகள்


Comments

ஹாய் தளிகா எப்படி இருக்கீங்க? நான் வழமையாக செய்வது இது மாதிரி கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும். இதே மெதடிலும் செய்து பார்த்தேன் நல்ல டேஸ்ட்டாக வந்தது. இரண்டாவது குழந்தைக்குத் தாயாகப்போகும் உங்களுக்கு என் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

அன்புடன் ரிகா.

மிக்க நன்றி..வாழ்த்துக்களுக்கும் நன்றி:-)
வழமையாக எப்படி சமைப்பீர்கள்..அனேகமாக பொரிக்காமல் ரோஸ்ட் செய்வீர்கள் இல்லையா.