ஹாய் தோழிகளே அரட்டையை இங்கே தொடங்குவோம் வாங்க (பாகம் 59)

ஹாய் தோழிகளே எல்லோரும் ஜாலியா பேச இங்கே வாங்க,அரட்டையை போடுங்க.புது வரவுகளும் இங்கே வந்து அரட்டையை களை கட்ட வைக்க வாங்க!!! நானும் ரொம்ப நேரமா ட்ரை பண்ணுகிறேன் பழைய பதிவை பார்க்க கூட முடியல எல்லோரும் இங்கே வாங்க

தனிஷா

எல்லோரும் இங்கே வாங்க. இதுவே ஒபன் ஆகமாட்டேங்குது. சுகன், கவி எங்கே காணோம். கீதா வந்தீங்க உங்களுக்கும் ஓபன் ஆகாம போயிடீங்களா

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

தனீஷா எப்படியிருக்கீங்க?என்னப்பா......அரட்டையடிக்க ஆளே வரமாட்டேங்கராங்க.....ரொம்ப லேட்டா ஆகுது இல்லையா த்ரெட் ஓபென் ஆக....அப்படித்தான் இருக்கு எனக்கும்...உங்ககூட அரட்டையடிக்க வருவாங்க எல்லாரும் ......

அடக்கடவுளே அரட்டை பக்கம் என்ன இப்படி தூங்குது. தூங்கி கொண்டிருக்கும் சிங்கங்களா(சைலண்ட்டா பார்த்துக்கொண்டிருக்கும் சிங்ககளும்)சீக்கிரம் வாங்க என் கூட பேச,என் பையன் எழுந்தரிக்கறதுக்குள வந்துடுங்க பார்க்க்கலாம்.

தனி எப்படி இருக்கீங்க,
தனு நல்லா இருக்கீங்க்கலா?

ஹாய் எல்லோரும் எப்படி இருக்கிங்க?

ஹாய் தனிஷா!
இப்ப கைவலி ரொம்ப பரவாயில்லை. 4 நாளாக டச் விட்டதில்தான் கைவலியோன்னு தோணுது. நீங்க கண்டிப்பா யோகாவில் புஜங்காசனம் செய்து பாருங்க! ரொம்ப நல்ல பலன் தெரியும் இதில் வயிறு தொப்பையும் சேர்த்து குறையும். உங்களூக்கு தொப்பை இருக்கா,இல்லியா தெரியல. ஆனா அதுவும் சேர்த்து சரியாகும்.

ஹய் இமா!
எனக்குகூட பல நேரங்களில் ஒரு பதிவு போட்றதுக்குள்ளேயே போதும் போதும்னு ஆய்டுது. இருந்தாலும் "விடாமுயற்சி வெற்றி தரும்" நு மனசுக்குள்ளே சொல்லிட்டே ரெஃப்ரெஷ் பண்ணிட்டே இருக்க வேண்டியதா இருக்கு.

என்ன ஜெயா,
வந்திட்டு கிளம்பிட்டீங்க போல தெரியுது. உங்க மெயில் கிடைச்சுது. பதில் அனுப்பறேன் அப்பறம். குழந்தைகளூக்கு ஸ்வாமி பெயர் வைப்பதே அந்த பெயரை கூப்பிட்டு புண்ணீயம் தேடத்தான். ஆனா அவங்க குறும்பு பண்றப்பதான் திட்டும்போது கஷ்டமா இருக்கு. " விக்னேஷ்,அபிராமியை பெரும்பாலும் " வாடாக்கண்ணு, இப்பிடிதான் சொல்வோம். ஆனால் சில சமயங்களீல் ரொம்ப குறும்பு பண்றப்ப, விக்னேஷ் ஏண்டா இப்பிடி ப்ண்ரேன்னு சொல்லிட்டு அப்பறம் "பக்குனு" இருக்கும். வினாயகர்கிட்டே அப்பறம் மன்னிப்பு கேட்டுக்க வேண்டியதா இருக்கும்.

கவி,
என்னப்பா மறுபடியும் பையன் எழுந்திட்டரா? ஓக்கே, குழந்தைகள் இருக்க வாழ்க்கையில் இதெல்லாம் சகஜம்ப்பா! என்னப்பாருங்க, யார் லைனில் இருக்காங்க,இல்லன்னு ஆராய்ச்சியெல்லாம் பண்ணாம் வந்தமா பதிவு போட்டமா போனமான்னு இருப்பேன். பழகிக்க வேண்டியதுதான் தனியா பேச!

அடடா... நான் 2 நாள் வரலன்னா, 2 அரட்டை இழை முடிஞ்சி போது... :( சரி.... என்னை யாராச்சும் தேடினீங்கலா??? தேடாத துரோகிகளுக்கும், தேடிய தோழிகளுக்கும்.... வணக்கம்... நான் நலம். நீங்க எல்லாரும் நலமா?! சாய் கீதா, வீடெல்லாம் மாத்தி முடிச்சாசா?

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஹாய் தனு எப்படியிருக்கிறீங்க? நேற்றே பதிவு போட நினைத்தேன் அறுசுவை ஓபன் ஆக மறுத்ததில் வெறுத்து போய் விட்டேன். நான் தற்போது வீட்டில் தான் இருக்கிறேன். வேலைக்கு எல்லாம் போகவில்லை போகவேண்டும் என்ற ஆசை இருக்கிறது ஆனால் என்னுடைய அக்கவுண்ட்ஸ் மூளைக்கு இங்கு வேலையில்லை (நமது அக்கவுண்ட்ஸ் மெத்தடும் இங்கும் வித்தியாசம்)எ.கா சொன்னால் இங்கு செலவு செய்வதற்க்கு வரி கணக்கு பார்ப்பார்கள் (புரிந்தாலும் புரியாவிட்டாலும் அப்படியா என்ற ஒரு முகத்தை வைத்து கொள்ளுங்கள் தனு ஓ.கே வா)நம்முடைய இந்தியாவில் வரவுக்கு பார்ப்போம் அதிலும் முக்கியம் சைனீஸ் தெரியவேண்டும் என்னச்செய்ய எனக்கு
நீ காவ் (நலமா)தவிர எதுவும் தெரியாதே....................பார்ப்போம் ஏதாவது இந்தியன் கம்பெனியை டிரை பண்ணுவோம் என்ன ஏதோ சத்தம் கேட்குது தனு புலம்புகிற மாதிரி ///வேலைக்கு போரீங்களா/// என்ற வார்த்தைக்கு இவ்வளவு விரிவாக்கமா என்று என்ன செய்ய தனு என்னிடம் வேலைக்கு போகவேண்டும் என்ற சிங்கம் தூங்கி கொண்டு இருந்ததை தெரியாமல் தட்டி எழுப்பி விட்டேர்களே?...................

செல்விம்மா எப்படியிருக்கிறீங்க? உங்கள் மகன் மற்றும் மகள் நலமா( உண்மையில் உங்களுக்கு எத்தனை பிள்ளைகள், அவர்களின் பெயர் கூட தெரியாது)

ஆமாம் சுகன்யா இந்தியாவைப்போல் வருமா? ஆமா என்ன இடையிலேயே ஒரு பிட்டை போட்ட மாதிரி தெரியுது///அதிலும் எங்க சிங்கார சென்னை இருக்கே!அதை அடிச்சிக்க யாராலும் முடியாதுபா/// ஆஹா சரி விடுங்க?வீட்டில் எல்லாரும் நலமா?

சுஹைனா என்ன எப்படி மறக்கமுடியும் நீங்க வந்து எல்லாம் விவரமாகா சொல்லுவீங்க என்ற நம்பிக்கையில் அல்லாவா நாங்கள் காத்து இருந்தோம். என்ன ஸ்பெஷல் உணவுகள் செய்தீர்கள்...சொல்லுங்க விவரமாக

ஹாய் உத்தமி நலமா தற்ப்போது உங்கள் உடல் நிலை, வீட்டில் அனைவரும்நலமா? ஆமாம் முக்கியமாக நம்ம குழந்தைகளின் மனதில் அந்த விஷயத்தை நல்லபடியாக தெளிவு படுத்த வேண்டும் இல்லை என்றால் எனக்கு தெரிந்த ஒருவரின் மகள் கூறியதுப்போல் டாடி ஐ டோண்ட் லைக் திஸ் டேட்டி ஹவுஸ் (இதற்க்கு அந்த வீட்டு ஒரு பங்களா) அவங்க பொண்ணு அடுத்து டேட்டி இந்தியா என்று சொல்லிவிட்டால் என்னச்செய்ய என்று உடனடி தீர்வு கண்டார்கள் தற்ப்போது அவர்கள் டிரான்ஸ்வர் டூ சென்னை மாந்கரம்

ஹாய் ஜெயலஷ்மி எப்படியிருக்கிறீங்க? வீட்டில் குழந்தைகள் நலமா? எனக்கு தெரியுமே உங்கள் குழந்தைகள் பெயர்கள் நான் சுருக்கமாக விசாரித்தேன் மார்ச் 2 என் பழைய பதிவு///ஹாய் ஜெயலஷ்மி எப்படியிருக்கிறீங்க?ராதா மற்றும் ஹரி எப்படியிருக்கிறாங்க?/// மார்ச் 3 உங்கள் பதிவு ///ஹாய் ம்ஹா எப்படி இருக்கிங்க?என் மகள் பெயர்.ராதை பவதாரணி.மகன் ஹரிசுதன் பா/// என்ன சும்மா எழுதினேன் அதை எல்லாம் காப்பி மற்றும் பேஸ்ட் எதற்க்கு என்பது போல் என் பதிவினை பார்க்கிறீங்க சரி , சரி.......

ஸாதிகா அக்கா நான் நலம் தான் யுவனும் நலம் தான் ///எக்ஸாமுக்கு அனுப்பி விட்டு அவர் வீடு திரும்பியதும் முகத்தைப்பார்த்ததும் தான் எனக்கு நிம்மதி வந்தது.ஐய்யொ வரும் நேரம் பால்கனியிலே நின்று வழிமேல் விழிவைத்து காத்திருந்து..சிரித்த முகத்துடன் வரும் பிள்ளைகளை காணும் சந்தோஷம் உள்ளதே..அதை எழுத்தில் வடிக்க முடியாது.///தற்ப்போது நான் யோசிக்கிறேன் நம்ம அம்மாவும் இப்படிதான் இருந்திருப்பாரோ என்று,

ஹாய் ஹாயு நலமா? இங்கு நாங்கள் நலம், ஆஹா ஹாயு 3 முறை படித்தீங்களா? கேட்க மிகவும் சந்தோஷமாக இருக்கிறது நான் வாசிக்கும் போது சில பிழைகள் சில விஷயம் எனக்கு புரிகிறமாதிரி இருந்தது ஆனால் உங்கள் எல்லாரும் புரிந்ததா இல்லாயா என்றே தெரியவில்லை ஏதோ சீனத்தில் ஒரு பயணம் மஹா என்றதுப்போல் ஏதேதோ எழுதியிருந்தேன். ஹாயு என் ஐ.டி ரஸியா அக்கா, தளிகா, விஜிசத்ய, ப்ரடேபல, மர்ழி, கதேஜா, இவர்களிடம் தான் இருக்கிறது ஆனால் நான் மர்ழி மற்றும் ப்ரடேபல ரஸிஆ அக்கா விடம் மட்டுமே சாட் பண்ணி இருக்கிறேன் வேறு யார் மூலமாவது வாங்கலாம் பொருங்கள்

ஹாய் தனிஷா நலமா, அஃப்ரா நலமா? இன்னமும் கிண்டர் கார்டனில் இருந்து ஒரு நீயூஸ் வரவில்லை எப்போது ஸ்டார்ட் ஆகும் என்று

மிகவும் சந்தோஷம் சாய்கீதா உங்கள் புதுவீடும் நலம் என்ற வார்த்தை பார்த்த போது, வேலை ஒதுங்காது இன்னமும் 1 மாதம் ஆகும் நாம் செட் ஆகிவருவதற்க்குள்

ஹாய் மேனகா நலமா?உங்கள் உடம்புக்கு இப்போது பரவாயில்லையா? ஷிவானி குட்ட்ய் நலமா?

தாமரை நலமா உங்கள் வயிற்று வலி எல்லாம் பராவாயில்லையா? சந்தோஷ் நலமா?

பரவாயில்லை இலா இந்த த்ரெட் முடிவதற்க்குள் என்னை விசாரித்தமைக்கு? நான் அப்படி எல்லாம் நினைக்க மாட்டென், எல்லாரையும் கெட்ப்பது போல் உங்களையும் கெட்டுக்கொள்கிறேன் அவ்வளவு தான். நீங்க விசாரித்தால் தான் நான் விசாரிக்க வேண்டும் என்று எல்லாம் நான் எண்ணுவதில்லை. ஆனால் தற்போது அதிகம் டைம் கிடைக்க மாட்டேங்குது அறுசுவையில் வந்து பதிவு போட டைம் கிடைக்கும் போது வந்து படித்து விட்டாவது போவேன்.

ஹாய் கவி நலமா? ஷாம் நலமா?

வனித எப்படியிருக்கிறீங்க? யாழினி சுகமா?

உத்ரா, அமர், இமா, எல்லாருக்கும் ஒரு ஆஜை கொடுத்துவிடுகிறேன்

Think Positively U will achieve everything
மஹாபிரகதீஸ்,China

Think Positively U will achieve everything
மஹாபிரகதீஸ்,China

மேலும் சில பதிவுகள்