இஞ்சி தொக்கு

தேதி: March 4, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 3 (1 vote)

 

சன்னமாகத் துருவிய இஞ்சி- 4 மேசைக்கரண்டி
தேங்காய்த்துருவல்- 8 மேசைக்கரண்டி
புளி- சிறிய நெல்லி அளவு
பொடியாக அரிந்த தக்காளி- ஒன்றரை கப்
பொடியாக அரிந்த சின்ன வெங்காயம்- அரை கப்
மிளகாய்த்தூள்- 1 ஸ்பூன்
தேவையான உப்பு
நல்லெண்ணெய்- கால் கப்
மஞ்சள் தூள்- அரை ஸ்பூன்


 

தேங்காய்த்துருவலையும் இஞ்சித் துருவலையும் சிறிது எண்ணெயில் பொன்னிறமாக வறுத்தெடுத்துக் கொள்ளவும். புளி சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
வாணலியில் மீதமுள்ள எண்ணெய் விட்டு சூடாக்கவும்.
முதலில் வெங்காயத்தைச் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
பின் தக்காளி, மஞ்சள் தூள் சேர்த்து தக்காளி குழைந்து மேலே எண்ணெய் தெளியும் வரை வதக்கவும்.
பின் அரைத்ததைச் சேர்த்து தேவையான உப்பு சேர்த்து குழைய கிளறிக் கிளறி வதக்கி எடுக்கவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

நான் செய்து பார்க்கலாம் என்று நினைக்கிறேன்.இதனை ஊற்காய் மாதிரி பயனபடுத்தனுமா?அல்லது சைட் டிஷா ?இதனை எப்படி எதனோடு சாப்பிட்டால் நன்றாக இருக்கும்?மனோ அக்கா நீங்க இதனை பார்க்கும் போது பதில் தாங்க.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

அன்புள்ள ஆசியா!

இந்த இஞ்சித் தொக்கு ஒரு சட்னி மாதிரி தோசைக்கும் தொட்டுக்கொள்ளலாம், ஊறுகாய் மாதிரி தயிர் சாதத்துக்கும் ஏற்றது.

மனோ அக்கா உடன் பதிலுக்கு மிக்க நன்றி.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

மனோ மேடம் இஞ்சி தொக்கு ரொம்ப நல்லா இருந்தது. தயிர் மற்றும் ரசம் சாதத்திற்கு நல்ல காம்பினேசனாக இருந்தது. தேங்காய் போடுவதால் அதிக நாள் வைத்திருக்க முடியாதில்ல மேடம். அதனால் நான் கொஞ்சமாகத்தான் செய்தேன். மேலும், ஈசியாக இருப்பதால் தேவையான போது செய்து கொள்ளலாம்.

indira

அன்புள்ள இந்திரா!

இஞ்சித் தொக்கு செய்து பார்த்து ரொம்பவும் நன்றாக இருந்ததென எழுதிய உங்களின் அன்பான பின்னூட்டத்திற்கு நன்றி!! நீங்கள் எழுதியிருப்பது சரியே. தேங்காய் சேர்த்திருப்பதால் ஒரு சில நாட்களிலேயே அதை சாப்பிட்டு முடிப்பதுதான் நல்லது.

மனோ அக்கா
இஞ்சித் தொக்கு செய்து உடனே பின்னூட்டமும் அனுப்பினேன், ஆனால் எரர் ஆகிவிட்டது. இப்போ மீண்டும்....

இன்னுமொன்று உங்கள் குறிப்பில் தலைப்பைப் பார்த்துவிட்டு ஆசையாகத் திறப்பேன், ஆனால் தக்காளி சேர்த்திருப்பீங்கள் அதனால் விட்டு விடுவேன். இனிமேல் தக்காளி குறைத்து புளி, எலுமிச்சை சேர்த்ததாக குறிப்புக்கள் அதிகம் போடுவீங்களா?, நல்ல நல்ல குறிப்புக்கள் கொடுக்கிறீங்கள் ஆனால் அதிகம் தக்காளிக்கு முதலிடமாக இருக்கு.(குறை நினனக்க வேண்டாம்).

இதற்கு நான் தக்காளி சேர்த்துத்தான் செய்தேன், எனக்கு புளிப்பு பிடிக்கும், இது இஞ்சியும் சேருகிறபோது நன்றாக இருந்தது.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

அன்புள்ள அதிரா!

இஞ்சித் தொக்குக்கான பின்னூட்டத்திற்கு அன்பு நன்றி!!

தக்காளி உங்களுக்கு அதிகம் பிடிக்காதா? பொதுவாய் என் சமையலில் தக்காளி அதிகமிருக்கும், தேங்காய் உபயோகிப்பது குறைவாக இருக்கும். அதுவும் தக்காளி சேர்ப்பது உடல் நலத்திற்கு நல்லது என்பதும் தேங்காய் அதிகம் உபயோகிப்பது கெடுதல் என்பதுவும்தான் இதற்கான முக்கிய காரணங்கள். இனி உங்களுக்குக்காக புளி, எலுமிச்சை சேர்த்து செய்யும் குறிப்புகளும் கொடுக்க முயற்சிச் செய்கிறேன்.

இந்த குறிப்பினைப் பார்த்து திருமதி. அதிரா அவர்கள் தயாரித்த இஞ்சி தொக்கின் படம்

<img src="files/pictures/aa205.jpg" alt="picture" />

அன்புள்ள அதிரா!

இஞ்சித்தொக்கின் புகைப்படம் மிகவும் அழகு!!