கத்தரிக்காய் பொரியல்

தேதி: March 5, 2009

பரிமாறும் அளவு: 2

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

கத்தரிக்காய் - 2 கப் (துண்டுகளாக நறுக்கியது)
அரைக்க:
தேங்காய்த்துருவல் - 1/2 கப்
சீரகம் - 1/4 டீஸ்பூன்
பூண்டு - 2 பல்
சின்ன வெங்காயம் - 4
மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/2 டீஸ்பூன்
தாளிக்க:
எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - 2 கொத்து
உப்பு - தேவைக்கேற்ப


 

வாணலியில் எண்ணெய் விட்டு அதில் கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளித்து அதில் கத்தரிக்காயை போட்டு வதக்கவும்.
தண்ணீர் விடத்தேவையில்லை மூடியால் மூடி மிதமான சூட்டிலே காய்யை வேக விடவும்.
தேங்காய்த்துருவல், சீரகம், பூண்டு, சின்னவெங்காயம், மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் இவற்றை கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
காய் வெந்ததும் உப்பு போட்டு ஒரு தடவை கிளறி விட்டு, அதில் அரைத்த மசாலாவை சேர்த்து வதக்கவும். எல்லாமும் சேர்ந்து வரும் போது இறக்கவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

மஹா நல்லா இருக்கீங்களா,யுவன் நல்லா இருக்காரா?

இன்னைக்கு உங்க கத்தரிக்காய் பொரியல் செய்தேன்.நல்லா இருந்தது நன்றி.