வீட்டு வைத்தியம் என்றால் என்ன

வீட்டு வைத்தியம் என்றால் என்ன? இந்த தலைப்பின் கீழ் என்னவெல்லாம் இடம் பெறும்?

நமக்கு உண்டாகும் சில சிறு உடல்நலக் கேடுகளுக்கெல்லாம், வீட்டில் அம்மாவோ, பாட்டியோ அவர்களின் கைப் பக்குவத்தில் கஷாயமோ அல்லது மருந்தாக பயன்படும் உணவோ தயார் செய்து கொடுத்து, பிரச்சனையை தீர்த்து விடுவர். இந்த வீட்டு வைத்தியம் சின்ன சின்னப் பிரச்சனைகளுக்குதான் தீர்வாக இருக்கும். அனுபவத்தில் நீங்கள் கற்றுக் கொண்ட சின்ன சின்ன வீட்டு வைத்தியக் குறிப்புகளை இங்கே பரிமாறிக் கொள்ளலாம்.

நான் இரண்டு நாட்களுக்கு முன் சமைக்கும் போது கையில் சூடான எண்ணை பட்டு விட்டது
.அதனால் தோல் கருப்பாக மாறி விட்டது.என்ன செய்வது? ஏதாவது வீட்டு வைதியம் உண்டா?

எப்படி இருகிறீர்கள் கையில் எண்ணெய் பட்டுவிட்டதாக சொல்லி இருக்கிறீர்கள்.புண் ஆறிவிட்டதா? தோல் கறுப்பு மாற ஆலிவ் ஆயிலை தடவி வந்தால் சீக்கிரம் கறுப்பு மாறிவிடும்.கையை பார்த்துக்கொள்ளவும்.சில சமயம் நாம் எவ்வளவுதான் கவனமாக இருந்தால் பொறிக்கும் சமயம் எண்ணெய் தெறித்துவிடுவது உண்டு கவனமாக செய்யவும்.
நன்றி

Dear sharmila,
தீப்புண் ஏற்பட்ட உடனேயே தேனை அந்த இடத்தில் தடவினால் பொப்பளம் வராது. தொடர்ந்து தடவி வந்தால் தோல் கறுப்பு நிறம் அடையாமல் விரைவில் குணம் அடையும்.கையை பார்த்துக்கொள்ளவும் .நன்றி.

Dear Seyedkatheeja and Roopa,
வலி இல்லை.தோல் மட்டும் நிறம் மாறி விட்டது. தங்கள் இருவரின் பகிர்விற்கு மிக்க நன்றி.

கருஞ்சீரகம் தலைப்பில் நீங்கள் கேட்டிருந்ததின் பதிலை இங்கு பதிவு செய்கிறேன். மன்னிக்கவும்.

வயிற்றில் ஏற்படும் வாயுவைப் பொறுத்தவரை அவ்வப்போது நல்ல பலன் கிடைக்கக்கூடிய வீட்டு வைத்திய முறைகளை செய்து குணமாக்கிக் கொள்ளலாம். ஆனால், நாம் உண்ணும் உணவு, ஜீரணிக்கும் திறன், உடம்பில் அவ்வப்போது ஏற்படும் மாற்றங்கள் இவற்றைப்பொறுத்து வயிற்றில் வாயுத் தொல்லை இடையிடையே ஏற்படத்தான் செய்யும். அதனால், எப்போதெல்லாம் உங்களுக்கு இந்த பிரச்சனை வந்தாலும் அப்போது இந்த வைத்தியத்தை செய்து அதிலிருந்து மீண்டுக் கொள்ளுங்கள்.
பூண்டு - 50 கிராம்
பெருங்காயம் - 20 கிராம்
கருப்பட்டி - 30 கிராம்
இந்த மூன்று பொருட்களையும் எடுத்துக்கொள்ளுங்கள். முதலில் பூண்டு பற்களை கத்தி முனையால் மெதுவாக குத்தி குத்திவிட்டு, தோலுடன் நெருப்பில் காட்டி வேகும் அளவு சுட்டு தோலை உரித்துக்கொள்ளுங்கள். பெருங்காயத்தையும் நெருப்பில் (தீயாமல்) சுட்டு எடுத்து, கருப்பட்டி சேர்த்து மூன்றையும் மைய அரைத்து ஒரு பாட்டிலில் எடுத்துக்கொள்ளுங்கள். புளியங்கொட்டையைவிட சற்று பெரிய உருண்டையாக அதிலிருந்து எடுத்து, ஒரு நாளைக்கு மூன்று அல்லது ஐந்து வேளை தண்ணீருடன் (மாத்திரைபோல்) வாயில் போட்டு குணமாகும்வரை சாப்பிடுங்கள். பெரும்பாலும் ஒரு நாளிலேயே குணம் தெரியும். இது சம்பந்தமாக வேறுமுறை எதுவும் நினைவுக்கு வந்தாலும் சொல்கிறேன். நன்றி!

வாயு தொல்லை ஏற்பட்ட சமயம் பூண்டு பல் 4 (அடுப்பில் காட்டி சுட்டது தோலை நீக்கி விடவும்), 1 தேக்கரண்டி வெந்தயத்தையும் சேர்த்து கொதிக்கும் வெந்நீரில் போட்டு சிறிது நேரம் கொதிக்கவிடவும்.பின் அந்த நீரை வடித்து சிறிது சூட்டுடன் இருக்கும் போதே குடித்து வந்தால் கொஞ்ச நேரத்திலேயே வாயு தொல்லை நீங்கி விடும்.ஊரில் இருக்கும் போது எனக்கு வாயு தொல்லை ஏற்பட்டால் எனது தாயார் உடனே இதைத்தான் செய்து தருவார்கள் உடனே கேட்கும். இதை செய்து பார்த்து உங்கள் பதிலை தெரிவிக்கவும்.
நன்றி

அன்புள்ள அஸ்மா அவர்களுக்கு!

வாயுத்தொந்தரவிற்கு உங்களின் உடனடியான வைத்தியக்குறிப்பு கண்டு மிகவும் மகிழ்வாக இருந்தது. தங்களுக்கு என் நன்றி! கருப்பட்டி இங்கு கிடைப்பதில்லை. அடுத்த மாதம் ஊருக்குச் செல்லும்போதுதான் வாங்கி வர வேண்டும். கட்டிப் பெருங்காயமும் இங்கு கிடைப்பதில்லை. சாமான்கள் கிடைத்து செய்து பார்த்த பிறகு உங்களுக்கு எழுதுகிறேன். பூண்டு சிறிய பூண்டுதான் உபயோகிக்க வேண்டுமா அல்லது மலைப்பூண்டு உபயோகிக்கலாமா?

அன்புள்ள சையத் கதீஜா அவர்களுக்கு!

தங்களின் வைத்தியக் குறிப்பிற்கு மிக்க நன்றி! திருமதி அஸ்மாவிடம் கேட்டது போலவே உங்களிடமும் அதே சந்தேகத்தையே கேட்கிறேன். பூண்டில் மிகச் சிறியவை, நடுத்தரமானவை, மலைப்பூண்டு என 3 வகை உள்ளன. எந்த வகைப் பூண்டை இதற்கு உபயோகிக்க வேண்டும்? தினமும் இது போல செய்து குடிக்கலாமா? எத்தனை முறை குடிக்கலாம்?

நாம் சமைக்கும் போது உபயோகிக்கும் பூண்டுதான் நீங்கள் வாயு ஏற்பட்ட சமயம் ஒரு தடவை குடித்தால் போதும் .அடிக்கடி ஏற்பட்டாலும் வாயு ஏற்பட்ட சமயம் இதே போல் செய்து குடித்துக்கொள்ளலாம் வேறு எதுவும் சந்தேகம் என்றால் கேட்கவும்.வேறு எதுவும் தெரியனும் என்றால் கேளுங்கள் நான் எனது பாட்டியிடம் போனில் கேட்டு நீங்கள் ஆன்லைனில் இருந்தால் இப்பொழுதே கேட்டு விடுங்கள் நான் ஊருக்கு போன் பண்ண முன்னாடி சரியா இப்பவே கேட்டு சொல்கிறேன்.
நன்றி.

மேலும் சில பதிவுகள்