முட்டைகோஸ் வடை 2

தேதி: April 3, 2006

பரிமாறும் அளவு: 5 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

வெள்ளை உளுத்தம் பருப்பு - 2 டம்ளர்
பெரிய வெங்காயம் - 2
முட்டைகோஸ் - 100 கிராம்
பச்சைமிளகாய் - 4
கறிவேப்பிலை - சிறிதளவு
பச்சைகொத்தமல்லி - சிறிதளவு
இஞ்சி - ஒரு துண்டு
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 300 கிராம்


 

உளுத்தம் பருப்பை அரை மணி நேரம் ஊற வைக்கவும். பின்பு பெரிய வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சி, இவற்றைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
முட்டைகோஸை மிகவும் பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். பின்பு ஊறிய உளுத்தம் பருப்பை மிக்ஸியில் போட்டு நன்றாக பூத்து வரும்படி உப்பு போட்டு அரைக்க வேண்டும்.
அதன் பிறகு நறுக்கி வைத்துள்ள பெரிய வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சி, முட்டைகோஸ் கறிவேப்பிலை, கொத்தமல்லி இவற்றை மாவுடன் ஒன்றாகக் கலந்து வைக்கவும்.
வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய்யை ஊற்றி காய்ந்தவுடன் வடையாகத் தட்டி இருபுறமும் சிவந்தவுடன் பொன்னிறமாக எடுக்கவும்.
இது மிகவும் சுவையான எளிதான மாலை நேர சிற்றுண்டி ஆகும்.


மேலும் சில குறிப்புகள்