சர்க்கரை மற்றும் கொலோஸ்டஃரோல் வியாதிகளுக்கான உணவுத் தகவல்கள்

பொதுவாக சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு கொலோச்ற்றோலும் கூடவே இருக்கும். இந்த இரண்டு வியாதிக்குமே எதிராக போராடக் கூடிய வல்லமையை கீழே குறிப்பிட்ட உணவுகளுக்கு உண்டு. இவற்றை நம் நாளாந்த உணவில் சேர்த்துக் கொண்டால் வைத்தியரை நாடி போகவும் தேவையில்லை. மருந்து மாத்திரைகளில் தங்கி இருக்கவும் தேவையில்லை. விரும்பியதைக் கூட சாப்பிடலாம். பாதிப்பு ஏற்படாது.

1. ஓட்ஸ், பார்லி, கஞ்சி அடிக்கடி உண்ணல் வேண்டும். இரண்டுமே கெட்ட கொழுப்பை
குறைக்கும்.

2. பாவற்காய் தினமும் உண்ணல் நல்லது

3. தக்காளி - மருத்துவர்கள் அஸ்பிரின் என்ற மாத்திரையை சர்க்கரை வியதிக்காரர்களை
தினமும் எடுக்க சொல்லி பரிந்துரைப்பார். இந்த அஸ்பிரின் செய்யும் வேலையை தக்காளி
செய்கின்றது. ஆகவே தினமும் தக்காளியை பச்சையாக மூன்று வேலையும் உண்ணலாம்.

3. வெள்ளரிக்காயை தினமும் உண்ணல் வேண்டும்

4. வெந்தயகீரை, முருங்கை கீரை போன்ற கீரைகளை தினமும் மாறி மாறி உண்ணல் நல்ல
பலனை தரும்.

5. இரவில் வெந்தயத்தை ஊற வைத்து காலையில் வெறும் வயிற்றில் குடித்து வருதல் மிகுந்த
பலனை தரும். வெந்தயத்துக்கு சர்க்கரையை கட்டுப்படுத்தக் கூடிய வல்லமை உண்டு.

6. வெறும் வாயில் அடிக்கடி பட்டையை மென்று வருதலும் நல்ல மருத்துவம்.

7. புரோகோலி SALAD ஒரு அருமையான உணவு.

8. முட்டைகோஸை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

9. காளானை தினமும் உட்கொள்ளல் வேண்டும்.

10. கோதுமை, ராகி, கம்பு, ரவை போன்றவற்றால் செய்த உணவுகள்

11. அரிசியில் சிவப்பரிசி அல்லது குத்தரிசி நல்லது.

12. சின்ன வெங்காயம் மிகச் சிறந்த மருந்து. பச்சையாக சாப்பாட்டோடு உண்ணல் வேண்டும்.

13. பாசிப்பயறிலான உணவுகள்

13. இரவில் படுக்கும் முன் பூண்டு பால் குடித்தல் நல்ல பலனை தரும்.

மேலே குறிப்பிட்டவற்றில் காளான், புரோகோலி, ஓட்ஸ், பார்லி,சின்ன வெங்காயம், பூண்டு பால் போன்றவை எல்லா வியாதிகளுக்கும் எதிராக போராடக் கூடியவை. ஆகவே அனைவருமே நம் உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

சர்க்கரை / கொலோஸ்டஃரோல் உள்ளவர்கள் சேர்த்துக் கொள்ளக் கூடாத உணவுகள்:

1. வேர் மரக்கறிகள் - முள்ளங்கி தவிர்ந்த எல்லா கிழங்குகளும் இதில் அடங்கும்.

2. கொழுப்பு கூடிய உணவுகள் (ஆடை அகற்ற படாத பால், தயிர் மற்றும் வெண்ணெய் என்பன
அடங்கும்).

3. அரிசி உணவுகள்

4. சிவப்பிறைச்சி (RED MEAT)

5. நொறுக்குத் தீனிகள்

6. இனிப்பு பண்டங்கள்

எல்லாமே திரட்டிய தகவல்கள். "யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்" என்று இங்கு தந்து இருக்கிறேன். பயன் பெறுங்கள்! உங்களுக்கு தெரிந்த மற்றவர்களும் பயன் பெற உதவுங்கள்!

தவறுகள் இருப்பின் தயவு செய்து அறியத் தாருங்கள் தோழிகளே!

லக்ஷ்மி
எண்ணங்கள் வாக்குகளை விட வலிமையானவை
நல்லதையே நினைப்போம்

SIVAKAVI
நன்றி லஷ்மி!
என் அத்தை ஒருவருக்காக( சுகர் பேஷியன்ட் )உண்ணக்கூடிய உண்ணக்கூடாத உணவுகள் பற்றி நெட்டில் தேடித்தருகிறேன் என்று சொல்லியிருந்தேன்.உங்கள் தகவல்கள் மிகவும் ப்யனுள்ளவை.மற்றவர்களுக்கும் உதவும் என்று ப்திவு போட்ட உங்களை பாராட்டாமல் இருக்க முடியவில்லை.gud job.thank u.
kavithasivakumar

anbe sivam

வணக்கம் லக்ஷ்மி;
நீங்கள் சுகர், கொலஸ்ரோல் உள்ளவர்களுக்கு கொடுத்துள்ள உணவு
வகைகள் எல்லோருக்கும் பயனுள்ளதாக உள்ளது. பார்லி,ஓட்ஸ்
என்பவற்றை பரீஸ் நாட்டுக்கடைகளில் எப்பெயரில் தேடுவது என்று
கூறுவீர்களா?கோதுமை,ராகி,கம்பு, என்பனவையும் கிடைக்குமா?

Barley = Orge in french
Oats = Avoine in french

Shankar Iyer

Next time carry a dictionary French-English:English-French.
Bonjour.

மிகவும் உபயோகமான தகவல்.

மேலும் சில பதிவுகள்