குழந்தை பிறந்து 4 மாதங்க்ள் தான் ஆகிரது,தாய் பால் போதுமானதாக இல்லை,பாட்டில் பால் குடிக்க மறுக்கிரால்,தாய் பால் சுரக்க வழி சொல்லுஙலென்,பிள்ளை பசியால் துடிக்கும் போது பெற்ற மனது துடிக்கிரது
குழந்தை பிறந்து 4 மாதங்க்ள் தான் ஆகிரது,தாய் பால் போதுமானதாக இல்லை,பாட்டில் பால் குடிக்க மறுக்கிரால்,தாய் பால் சுரக்க வழி சொல்லுஙலென்,பிள்ளை பசியால் துடிக்கும் போது பெற்ற மனது துடிக்கிரது
Mothers horlicks
Mothers horlicks kudinga..Paavakkai , poondu, saapidunga....adikadi kodunga nalla paal kidaikum..Water niraya kudinga...donr worry..enakum 5 motnhs paappa iruku...poga poga sari aagidum...happy ah irunga.feed pannum pothu relax ah irunga....
Vinu
வினு
raksha
பூண்டு குழம்பு.பூண்டு பால், ரசம்,நெறைய தண்ணி குடிங்க .இது எல்லாத்தைவிட முக்கியம் உங்க குழந்தை ரசிங்க பால் குடிக்கும்போது பாசமா தடவி குடுங்க மனச சந்தோசமா வச்சிக்கோங்க ஒன்றை மணி நேரத்துக்கு ஒரு முறை பால் குடுங்க பால் தன்னால வரும்
தாய்ப்பால் சுரக்க
anpu raksha,
சிலருக்கு அப்படித்தான் பால் குறைவாக இருக்கும். சாப்பாட்டில் தான் கொண்டு வரணும்.
நிறைய காய்கறிகள் சாப்பிடணும். சாதத்தை விட காய்கள் அதிகம் இருக்கணும்.
வாரம் ஒருமுறை முருங்கைக்கீரை சாப்பாட்டில் சேர்த்துக் கொள்ளவும்.
பூண்டு ஒரு கை நிறைய உரித்து, மிகவும் பொடியாக நறுக்கி நெய்யில் பொன்னிறமாக வதக்கவும். வதக்கிய பூண்டு, தேவையான உப்பு சேர்த்து பிசைந்து நாலு கவளம் சாதம் முதலில் சாப்பிட்டு விட்டு பிறகு மற்ற குழம்பு போட்டு சாப்பிடலாம் (தினமும்).
மணத்தக்காளி வற்றல், சுண்டைக்காய் வற்றல், உலர்ந்த வேப்பம்பூ இவற்றை தினம் ஒன்றாக நெய்யில் வறுத்து பொடி செய்து, சிறிது உப்பு சேர்த்து சாதத்தில் கலந்து சாப்பிட வேண்டும்.
கடுகை வெறும் வாணலியில் போட்டு வறுத்தால் சடசடவென பொரியும். நல்லா பொடியாக்கி சாதத்தில் நெய், உப்பு போட்டு கலந்து சாப்பிட பால் சுரக்கும்.(இது சாப்பிடும் அன்று முருங்கைக்கீரை வேண்டாம்).
அதேபோல் தனியா, சீரகத்தையும் வறுத்து பொடியாக்கி தினம் ஒன்று சாப்பிட்டு வர பலன் கிடைக்கும்.
தினம் மூன்று டம்ளர் பாலாவது தாய் குடிக்க வேண்டும்.
குழந்தைக்கு பால் குடிக்க வைக்குமுன் அரை டம்ளர் வெந்நீர் குடித்து விட்டு குடிக்க வைக்க வேண்டும்.
நான்வெஜ் சாப்பிடுபவராக இருந்தால் ஈரல், மீன் (முக்கியமாக பால் சுறா, திருக்கை மீன், பால் நெத்திலி, கருவாடு) சேர்த்துக் கொள்ளலாம். சிக்கன் சூடு என்பதால் குறைப்பது நலம்.
இப்போதைக்கு ஞாபகம் வந்ததை சொல்லி விட்டேன். மீண்டும் ஏது இருந்தாலும் சொல்கிறேன்.
அன்புடன்,
செல்வி.
அன்புடன்,
செல்வி.
ஹாய் ரக்க்ஷா!
ஹாய்!
முடிந்தவரை சாப்பாட்டில் பருப்பு சேர்த்துக்குங்க. பருப்பு சாதமும், முருங்கைகீரையும் சேர்த்துக்கொண்டால் பால் நிறைய சுரக்கும். இதனை கண்டிப்பா சாப்பிட்டு பாருங்க.
பருப்பு சாதத்தில் பூண்டு, சீரகம்,மிளகு போட்டு பண்ணனும். தொட்டுக்க முருங்கைக்கீரை பொரியல் நல்லா பால் சுரக்க உதவும். ஹார்லிக்ஸ், கோதுமைமாவு கஞ்சி,கேழ்வரகுமாவு கஞ்சி என்று லிக்விட் ஐட்டங்கள் நிறைய சேர்த்துக்குங்க!
Raksha
Eat fenugreek capsules 2 at a time, eat paasi paruppu, almonds, poondu. This will work out. I mostly rely on fenugreek capsule
மிக்க நன்றி
உதவி செய்த அனைவருக்கும் மிக்க மிக்க மிக்க மிக்க மிக்க நன்றி
நன்ட்ரி
நான் தனியாக குழ்ந்தையை கவனித்து கொள்கிரென் அதனால் சில உணவுகலை தயார் செய்ய முடிவதிலை,முடிந்த வரை செய்து சாப்பிடுகிரென்,நன்ரி என்ட்ர ஒரு வார்தை போதாது,எனக்காக பதில் அனுபிய அனைவருகும் மிக்க நன்ட்ரி
tips
hai
Reksha madam
எனக்கு செய்த அனுபவம் இல்லை ஆனால் பார்த்த அனுபவம் உண்டு(for my sister) நீங்க பூண்டு அதிகமா செர்த்துகோங்க பூண்டை குழம்பில் பொடும் பொழுது புது தென்னங்குச்சியை சின்னதா எடுத்துகிட்டு அதுல நிறைய பூண்டை கோத்து குழம்புல போடுங்க, அப்பதான் நிறைய சாப்பிட தோனும், அசைவம் சாப்பிடுபவர்களா இருந்தா (பால்சுறானு) நினைக்கறென் அந்த மீன், கருவாடு சப்பிடுங்க. மேலும்அம்மாகிட்ட கேட்டு சொல்லறேன்.
ஹாய் நித்யா
ரக்ஷாவோட குழந்தைக்கு 2 வயது ஆகியிருக்கும்னு நினைக்கிறேன். ஆனாலும் நீங்க சொன்ன குறிப்பு வேறு யாருக்காவது நிச்சயம் பயன்படும்.
Don't Worry Be Happy.