வுதவி... தினமும் குடியும் அசைவ வுணவும்....

குடிப்பழக்கம் ஒழிக்க ஏதாவது வழி சொல்லுங்கள்... தினமும் குடியும் அசைவ வுணவும்....என் தந்தையின் வயது 60 கிட்டதட்ட 25 வருடங்களாக இந்த பழக்கம். Ritired gov. employee.. இப்பொழுதும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கிறார். என் அம்மா கெஞ்சியும், அழுதும், மிஞ்சியும் எந்த பயனும் இல்லை. இந்த பழக்கத்தால் - வாடை வெறுப்பதால் என் அம்மா 25 வருடங்களாக பக்கத்தில் கூட படுப்பதில்லை. அவர் தன் பழக்கத்தை நியாயப்படுத்துகிறார். "மனைவிக்கும் குழந்தைகளுக்கும் எந்த குறையும் வைத்ததில்லை... இந்த பழக்கத்தால் நான் மிகவும் ஆனந்தம் adaikirean . நான் குடித்து விட்டு அமைதியாக paduthukkolkirean. யாருக்கும் எந்த தொந்தரவும் செய்வதில்லை... என் சந்தோசத்தை கெடுக்காமல் என் வழியில் விட்டு விடுங்கள் ... " என்கிறார். நான், என் சகோதரி, என் தம்பி அனைவரும் பல முறை முயன்று தோல்வி தான். "இதனால் சாவேன் என்றால் செத்து விட்டு போகிறேன்... கேட்ட பழக்கம் இல்லாதவனும் சின்ன வதில் சாகிறான், பயங்கர நோய் வந்தால் நான் அனுபவித்து விட்டு சாகிறேன்" என்கிறார். செயின் சிகிரெட் பழக்கமும் கூட. ரிடயர்மென்ட் பணத்தை இப்படி அழிதுக்கொண்டுக்கிறார். "நான் சம்பாதித்தது... கேள்வி கேட்க யாருக்கும் உரிமை இல்லை" என்கிறார். நான், என் சகோதரி திருமணம் முடிந்து அயல்நாட்டில் இந்த கவலையுடன்.... என் அப்பாக்கு எந்த கவலையும் இல்லை. என் சகோதரனும் நல்ல சம்பாதிக்கிறான். என் அம்மா கிடந்தது தவிக்கிறார். தயவு செய்து தோழிகள் வுங்களுக்கு தெரிந்த வழி சொல்லுங்கள்.

Hello ஸ்ரீதேவி,இது மிகவும் வருத்தத்துக்குரிய விஷயம் தான் ஆனால் முதலில் கவலை படுவதை நிறுத்துங்கள்.
நான் உங்களுக்கு சொல்ல விரும்புவது என்னவென்றால் ..........தவறாக எடுத்துகொள்ளாதீர்கள்....ப்ளீஸ்.
நீங்கள் அனைவரும் முயற்சிக்கும் செயல் கால தாமதமானது. அதனால் நீங்களோ உங்கள் உறவினர்களோ முயற்சிப்பதை விடுத்து முறையான மருத்துவரிடம் அழைத்துசெல்லுங்கள். நான் ஒரு பிட்னஸ்,நியூட்ரிஷியன் ஸ்பெஷலிஸ்ட்(Cosmetologist,Fitness Trainer and Nutritional Specialist) என்பதால் நான் சில கருத்துக்கள் கூற முன்வந்தேன்.
இந்த மாதிரி போதை பழக்கத்திற்கு அடிமையானவர்கள் மற்றும் சில பெரும் பாதிப்புக்குள்ளானவர்கள் போன்றோர் இவ்வகையான சிகிச்சைக்கு உடன் பட மாட்டார்கள். அவர்களை முறையான கவுன்சிலிங் செய்துதான் பிறகு மருத்துவம் செய்யவேண்டும்.
முறையான சிகிச்சையால் பலன் அடைந்தோர் பலர் உண்டு. இதுப்பற்றி விளக்க இந்த பதிவு போதாது. ஆனால் தற்போது செய்ய வேண்டிய முக்கிய தகவல் கொடுத்திருப்பதாக நான் கருதுகிறேன்,மேலும் உங்களுக்கு ஏதாவது சந்தேகம் இருந்தால் பதில் கருத்து தெரிவியுங்கள்.

உமா,Riverside,CA,USA.

முதலில் உங்களுக்கு கோடி நன்றிகள்.

"இந்த மாதிரி போதை பழக்கத்திற்கு அடிமையானவர்கள் மற்றும் சில பெரும் பாதிப்புக்குள்ளானவர்கள் போன்றோர் இவ்வகையான சிகிச்சைக்கு உடன் பட மாட்டார்கள்."

நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை. நான் அவரை மூன்று வருடங்களுக்கு முன் 6 மாதம் (USA) இங்கு அழைத்து வந்தேன். அப்பொழுது வேறு வழி இல்லாமல் சிக்கிரட், குடி இல்லாமல் வாரத்திற்கு ஒரு நாள் அசைவம் சாப்பிட்டு இருந்தார்(மாப்பிள்ளைக்கு இவர் பழக்கம் தெரியாது, இரு maappillaikalukkum எந்த பழக்கமும் கிடையாது). 3 மாதம் மேல் தாக்கு பிடிக்காமல் வேறு சாக்கு சொல்லி கிளம்பிவிட்டார்.
உங்கள் ஈமெயில் முகவரி தரமுடியுமா? எனக்கு மேலும் சில தகவல்கள் தேவை. எல்லோரும் பிறந்த வீட்டை விட்டு வரும் பொழுது வருத்தப்படுவார்கள். நான் வருத்தப்பட்டாலும், ஒரு புறம் சந்தோசம் அடைந்தேஅன். இனி இந்த வாடை பொறுத்துக்கொள்ள வேண்டியதில்லை என்று. என் அப்பாவை எனக்கு ரொம்ப பிடிக்கும். இந்தா பழக்கங்களை தவிர அவர் ரொம்ப நல்லவர். மிக மிக கடின உழைப்பாளி, பிரச்சனைகளை தீர ஆலோசித்து சாமர்த்தியமாக தீர்க்க்ககூடியவர். அவரை சுலபமாக எதையும் ஒத்துக்கொள்ள வைக்க முடியாது.
என்ன செய்வது? அவர் விசயத்தில் இப்படி.
அவருக்கு தெரியாமல் அவரை மாற்ற ஏதாவது வழி இருக்கா? இல்லை என்றால் எந்த மாதிரியான ஆலோசகரை நான் அணுக வேண்டும்?

மிகவும் சந்தோஷம் ஸ்ரீதேவி,
கோடி நன்றிகளா எனக்கு.......கொஞ்சம் அதிகம் தான்.நீங்கள்(USA)எங்கே இருக்கிறீர்கள்? இது(ur_pops@yahoo.com) என் பொதுவான இமெயில் ஐடி நீங்கள் இதற்கு இமெயில் செய்யுங்கள்.முடிந்தால் என்னுடைய " தோழிகளின் கவனத்திற்கு....சற்றே நில்லுங்கள்" என்ற பதிவையும் பார்வையிடுங்கள்.

C ya...bye
உமா

ஸ்ரீதேவி,

ஒரு வகையில் நீங்கள் உங்கள் தந்தையைப் பாராட்டி நன்றி கூறவேண்டும். குடித்துவிட்டு தெருவில் விழுந்து எல்லோரையும் அவமானப்படுத்தாமல் வீட்டில் அமைதியாக இருக்கிறாரல்லவா அதற்காக. உங்கள் இருவரின் புகுந்த வீட்டினருக்குக்கூடத் தெரியாத அளவு கண்ணியமாகத்தான் நடந்துகொள்கிறார் என்கிறீர்கள்.

ஆனால் கொஞ்சம் குடித்தாலும், நிறையக் குடித்தாலும், குடி குடிதான். 25 வருடப் பழக்கம் என்பதால் மாற்றுவது சிறிது கடினம்தான். முடிந்தால், விருப்பமிருந்தால் இதை முயற்சித்துப் பாருங்கள்:

உங்களுக்காகவோ, கணவருக்காகவோ, குழந்தைக்காகவோ நேர்ந்திருப்பதாகக் கூறி ஒரு அநாதை இல்லம்/ முதியோர் இல்லம்/ பார்வையற்றோர் இல்லம்/ ஊனமுற்றோர் இல்லத்திற்கு நேரில் போய் பணம் கொடுத்து ஒரு நாள் முழுதும் இருந்து வரக் கூறுங்கள். நேர்ச்சை விஷயம் என்பதால் மறுக்க மாட்டார் என்று நினைக்கிறேன். அடிக்கடி இவ்வாறு ஏதாவது ஒரு காரணம் சொல்லி ஒவ்வொரு இடமாகப் போய்வரச் செய்யுங்கள். அங்குள்ளவர்களின் நிலைகண்டு மெதுவாக மனம் மாறலாம். தனியாக போகச் சொல்லுங்கள். அவருடன் யாராவது சென்றால் அவர்கள் குடிப்பழக்கத்தைப் பற்றி ஏதாவது சொன்னால் கோபம்தான் வரும்.

முயற்சி செய்து பாருங்கள்.

மேலும் சில பதிவுகள்