இனிய மகளிர் தின வாழ்த்துக்கள்

அறுசுவை தோழிகள் அனைவருக்கும் இனிய மகளிர் தின வாழ்த்துக்கள். (மார்ச் - 8 - 2009).

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு

பொறூமை இருந்தால் எதையிம் சாதித்து விடலாம்

அறுசுவை தோழிகள் அனைவருக்கும் இனிய மகளிர் தின வாழ்த்துக்கள்.

பொறூமை இருந்தால் எதையிம் சாதித்து விடலாம்

என்ன யாரையும் காணோம்.

சனிக்கிழமையே வாழ்த்து சொல்லவேண்டும் என்று இருந்தேன். அன்று அம்பத்தூரில் இருந்த "பால குருகுலம்" என்ற ஆசிரமத்திற்கு எங்கள் அலுவலகத்தின் மகளிர் அமைப்பிலிருந்து நாங்கள் ஒரு 15 பேர் சென்றிருந்தோம். இந்த வருடம் எங்கள் அமைப்பிலிருந்து அவர்களுக்கு ஒரு அக்வாகார்டும் பணமும் (மொத்தமாக கிட்டத்தட்ட ரூ 20,000/-) வாங்கிக் கொடுத்தோம். மேலும் அன்று மதிய உணவு ஏற்பாடு செய்து அவர்களுடன் சாப்பிட்டோம். குப்பைத்தொட்டிகளில் போடப்பட்ட குழந்தைகளை பராமரிக்கிறார் திரு ரஞ்சித் என்பவர். மாலை 6 மணிவரை அங்கு இருந்தோம். திரு ரஞ்சித் அவர்களின் சுவையான லெக்சரை கிட்டத்தட்ட 3 மணி நேரம் கேட்டோம்.

ஒரு பக்கம் மகிழ்வாகவும், நிறைவாகவும் இருந்தாலும் அந்தக்குழந்தைகளைப்பார்த்து மனம் பாரமாகிவிட்டது.

உங்களுக்கு ஆர்வம் இருந்தால் இந்த சைட்டில் போய்ப்பார்க்கவும்.

www.balagurukulam.com

அன்புடன்
ஜெயந்தி மாமி

மேலும் சில பதிவுகள்