கத்திரிக்காய் இட்லி சாம்பார்

தேதி: March 7, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 2.5 (4 votes)

இந்த சுவையான குறிப்பினை <b> திருமதி. கீதா ஆச்சல் </b> அவர்கள் அறுசுவை நேயர்களுக்காக வழங்கியுள்ளார். இவரது பெரும்பாலான குறிப்புகள் குழந்தைகளுக்கான, மிக எளிதில் தயாரிக்கக்கூடிய உணவுக்குறிப்புகளாக இருக்கும்.

 

கத்திரிக்காய் – கால் கிலோ
துவரம் பருப்பு – ஒரு கப்
வெங்காயம் – ஒன்று
தக்காளி – ஒன்று
பச்சை மிளகாய் – 3
கறிவேப்பிலை – 3 இலை
கடுகு – அரை தேக்கரண்டி
மஞ்சள் தூள் – அரை தேக்கரண்டி
உப்பு – ஒரு தேக்கரண்டி
பெருங்காயம் – கால் தேக்கரண்டி
எண்ணெய் – ஒரு தேக்கரண்டி


 

துவரம் பருப்பினை தண்ணீர் ஊற்றி நன்றாக கழுவி வைத்துக் கொள்ளவும். தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்துக் கொள்ளவும்.
கத்திரிக்காய், வெங்காயம், தக்காளி மற்றும் பச்சை மிளகாயினை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
குக்கரில் துவரம் பருப்பு, நறுக்கி வைத்திருக்கும் கத்திரிக்காய், வெங்காயம், தக்காளி, மஞ்சள் தூள், பெருங்காயம், உப்பு மற்றும் பச்சை மிளகாய் போடவும்.
இவை அனைத்துடனும் 4 கப் தண்ணீர் ஊற்றி 3 விசில் வரும் வரை வேக வைக்கவும்.
குக்கரின் ப்ரஷர் அடங்கியதும் திறந்து ஒரு கரண்டியை வைத்து மசித்து விடவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.
தாளித்தவற்றை வேக வைத்து மசித்து வைத்திருக்கும் காய்களுடன் போட்டு கிளறி விடவும்.
சுவையான கத்திரிக்காய் இட்லி சாம்பார் ரெடி. இதனை இட்லி, தோசையுடன் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும். அதிகம் காரம் இல்லாததால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

அட்மின்,
இத்துடன் கடைசி போட்டோ காணுமே…

இன்று இந்த இட்லிசாம்பார் செய்தேன்.இட்லிக்கு நல்ல சைட்டிஷ்ஷாக இருந்தது.தங்களின் குறிப்புக்கு மிக்க நன்றி.

மிகவும் நன்றி சுகன்யா.
அன்புடன்,
கீதா ஆச்சல்

கீதா ஆச்சல். இந்த சாம்பார் எனக்கும்,ஹஸ்,குழந்தைகலுக்கும் ரொம்ப பிடிக்கும்.நன்றி,

alhamdhulillah

எனக்கு ரொம்ப பிடித்த சாம்பார் கீதா.சப்பாத்திக்கு ரொம்ப நல்லா இருந்தது.

ஜஸ்மின் மற்றும் மேனகா,
மிகவும் நன்றி.
அன்புடன்,
கீதா ஆச்சல்

சாம்பார் செய்து பார்த்தேன் சூப்பரா இருந்தது easy ஆகா இருந்தது thanks

We tried this sambar, it was very Tasty... thanks for sharing :)