டொமேட்டோ கார்ன் பார்தா

தேதி: March 8, 2009

பரிமாறும் அளவு: 6 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

ஃப்ரோசன்கார்ன் - 200 கிராம்
அல்லது ஃப்ரெஷ் கார்ன் - 2
எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
வெங்காயம் - 1
தக்காளி - 400 கிராம்
மல்லி இலை - சிறிது
சீரகம் - அரை ஸ்பூன்
கறி பேஸ்ட் - 1 டேபிள்ஸ்பூன்
சீரகப்பொடி- 1 டீஸ்பூன்
மல்லி பொடி - 1 டீஸ்பூன்
மஞ்சள் பொடி - கால்ஸ்பூன்
பூண்டு - 2 பல்
பச்சை மிளகாய் - 3
சர்க்கரை - அரைஸ்பூன்
உப்பு - அரைஸ்பூன்


 

முதலில் ஃப்ரெஷ் கார்ன் என்றால் தண்ணீரில் போட்டு குக்கரில் இரண்டு விசில் வைத்தால் வெந்துவிடும். அதனை உதிர்த்துகொள்ளவும். ஃப்ரோசன் என்றால் அப்படியே உபயோக்கிகலாம்.வெங்காயம்,தக்காளி, மிளகாய் பொடியாக கட் செய்து கொள்ளவும்.
அடிகனமான பாத்திரத்தில் எண்ணெய் விட்டு சீரகம் போட்டு வெடிக்க விடவும்,வெங்காயம் வதக்கவும்,தட்டிய பூண்டு சேர்க்கவும்,நல்ல கோல்டன் ப்ரவுன் ஆகனும், கறி பேஸ்ட் சேர்க்கவும். பின்பு சீரகப்பொடி, மல்லிபொடி, மஞ்சள் பொடி ,உப்பு, சர்க்கரை சேர்த்து வதக்கவும். சிறிது தண்ணீர் சேர்க்கவும். மசாலா சேர்ந்து வரட்டும்.
அடுத்து பொடியாக கட் செய்த தக்காளி, மிளகாய் சேர்க்கவும். ஐந்து நிமிடம் கழித்து கெட்டியாகி விடும். வேகவைத்த கார்ன், மல்லி இலை சேர்த்து சிறிது நேரம் கழித்து தக்காளி பச்சை வாடை போய் மசாலா தள தளன்னு வரவும் இறக்கவும்.
சுவையான டொமேட்டோ கார்ன் பார்தா ரெடி. இதனை சப்பாத்தி, பூரி, பரோட்டா, நாண் உடன் பரிமாறலாம்.


மேலும் சில குறிப்புகள்


Comments

நன்றி ஆசியா.
கறி பேஸ்ட் என்றால் என்ன? நாமே செய்ய முடியுமா?

இப்படிக்கு,
சந்தனா

கறி மசாலா பேஸ்ட் அல்லது கறிமசாலாப்பொடி ரெடிமேடாய் கிடைக்கிறது,அப்படி கிடைகவில்லை எனில் கொடுத்த சீரகம்,மல்லி,மஞ்சல் பொடியுடன்,சில்லி பவுடர் 1 ஸ்பூன்,கரம் மசாலா கால் அல்லது அரைஸ்பூன் சேர்த்து கொள்ளவும்.சமைத்து பாருங்கள் டேஸ்ட் வேறு படாது.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

.

இப்படிக்கு,
சந்தனா

அன்புள்ள ஆசியா,

கேட்டதும் குறிப்பு குடுத்திட்டீங்க. ஆனா எங்க வீட்ல raw materials இல்லாததால் (இங்க வாரம் ஒருக்கா தான் கடைக்கு போறோம்) செய்து பார்த்து பதில் போட லேட் ஆகி விட்டது. இப்போ தான் சாப்பிட்டு முடித்து பதிவு போடறேன். நல்லா இருந்தது. நாங்க வாங்கினது மாதிரி இல்லாம வித்தியாசமா நல்லா இருந்தது !!!.

இப்படிக்கு,
சந்தனா

மிக்க மகிழ்ச்சி.நீங்க வாங்கிய பாக்கெட்டில் என்ன ingredients added போட்டிருந்தது?அதை சேர்த்து ட்ரை பண்ணி பாருங்க,நிச்சயம் நல்ல வரும்.நன்றி.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

அது கிரேவி மாதிரி ஒரே சீரா இருந்தது. நாம பண்ணியதுல கொஞ்சம் வெங்காயம், தக்காளி எல்லாம் அப்படியே இருந்தது. அவங்க கொஞ்சமா அரைச்சு பண்ணி இருக்காங்கன்னு நினைக்கிறேன். அந்த பிராண்ட்ல எல்லாமே அதே கிரேவி ல செய்வாங்க - மட்டர் பன்னீர், டிக்கா மசாலா ன்னு பல வெரைட்டீஸ், ஆனா ஒரே கிரேவி ல இருக்கும். நானா ட்ரை எதாச்சும் பண்ணினா சொதப்பிடறேன். அதான் கொஞ்சம் பயம் !!!

இப்படிக்கு,
சந்தனா

பதிலுக்கு மிக்க நன்றி.அதில் எல்லாம் பேஸ்ட் சேர்த்து செய்திருப்பாங்கன்னு நினைகிறேன்.ஏதாவது புதிதாக ட்ரை பண்ணனும்னால் கொஞ்சம் முதலில் செய்த்து பார்க்கனும்பா.நான் இப்படி தான் நிறைய ட்ரை பண்ணி பார்ப்பேன்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.