அரட்டையை பாகம் 60-ல் தொடருங்க

ஹாய் தோழிகளே எல்லோரும் ஜாலியா பேச இங்கே வாங்க,அரட்டையை போடுங்க.புது வரவுகளும் இங்கே வந்து அரட்டையை களை கட்ட வைக்க வாங்க!!! நானும் ரொம்ப நேரமா ட்ரை பண்ணுகிறேன் பழைய பதிவை பார்க்க கூட முடியல எல்லோரும் இங்கே வாங்க

தனிஷா

ஹாய் எல்லாரும் எப்படி இருக்கீங்க,
தனீ எப்படி இருக்கீங்க அப்ஃரா என்ன பண்றாங்க.
செல்விமா எப்படி இருக்கீங்க.
வனிதா நல்லா இருகீங்களா.யாழினிகுட்டிக்கு எத்தனை மாதம் ஆகிறது,
இலா காய்ச்சல் சரியாயிடுச்சா?
ஜெயலஷ்மி அறுசுவைல பார்க்கவே முடியல.
சுகன்யாஎப்படி இருக்க்கீங்க,தேஜல் எப்படி இருக்காங்க.
மேனகா நீங்களும் ஷிவானியும் நலமா?
மஹா இப்ப உடம்பு பரவாயில்லையா? யுவன் என்ன சொல்றார் பேசறார.
இமா மேடம் என்னனவோ பேசறீங்க, பயமா இருக்கு.
ஸாதிகா மேடம் எப்படி இருக்கீங்க உங்களை பற்றி விசாரிச்சாதான் அரட்டை பக்கம் வறீங்க:-)உங்க பையன் எக்சாம் எப்போ முடியுது.
சாய்கீதா வேலை முடிந்ததா?நீங்க கீழ விழுந்தப்போ அடி எதுவும் படலையே,நல்லவேலை விக்னேஷ் தப்பிசாரு:-)
தாமரை வயிற்றுவலி பரவாயில்லையா?சந்தோஷ் நல்லா இருக்காரா?
தனு எப்படி இருக்கீங்க.
விடுபட்ட எல்லோருக்கும் ஒரு ஹாய்.

அன்பு கவி,நலமா?உங்களைப்பற்றி விசாரித்தால்தான் அரட்டைக்கு வருகின்றீர்கள் என்ற உங்கள் வரிகளைக்கண்டதும் நெற்றியை சுறுக்கிக்கொண்டேன்.உண்மைதான்.பிள்ளைகளால் என்னால் அடிக்கடி உட்கார முடிய வில்லை.மொத்தமாக உட்கார்ந்து ஒருதிரட்டை பார்த்து விட்டு பதிலைப்போட்டு விடுகின்றென்.எக்ஸாம் முடியும் மட்டும் பையன்கள் கம்பியூட்டர் பக்கம் வராமல் இருக்கிறார்கள்.முடிந்ததும் உங்களை அந்த ரூம் பக்கமே விட மாட்டேன் என்று மிரட்டிக்கொண்டு இருக்கின்றாகள்.எனக்கு தெரிந்த ஒரு ஸ்னேகிதியின் மகனோ கம்பியூட்டர் பக்கம் உட்கார்ந்தீர்களானால் நான் இப்போ படிக்கவே மாட்டேன் என்கின்றாராம்.பெரியவனுக்கு மார்ச் 18 இல் +2 பரிட்ச்சை முடிகின்றது.சின்னவனுக்கு ஏப்ரல் 8இல் 10 வது பரிட்சை முடிகின்றது.ஷாம் எப்படி இருக்கின்றார்.?
ஸாதிகா

arusuvai is a wonderful website

எல்லாரும் எப்படி இருக்கீங்க?

ஹாய் ஸாதிகா மேடம்,நீங்க வருவதே அதிசயம்,அதிலும் நீங்க வெறுமனே படிச்சுட்டு போகும் போதே பசங்க இப்படி சொல்றாங்கன்னா?நீங்க பதிவு போடுவதை பார்த்தால் என்ன செய்வாங்களோ???

ஹாய் கவி.எஸ் சாம் இந்த நேரத்தில் எப்படி ஃப்ரீயா விட்டார்?

ஹாய் இமா,என்னப்பா ஸ்கூல் ஸ்டார்ட் ஆயிடுச்சா?நீங்க செய்யும் பணி உண்மையில் ரொம்ப சிறந்த பணி.சாதாரண குழந்தைகளை பராமறிப்பதே கடினம்.இத்தகைய குழந்தைகளுக்கு பயிற்சி அளிக்கும் போது தங்களுக்கு மனதில் எங்கோ ஓர் இடத்தில் ஒரு மனநிறைவு கண்டிப்பாய் தோன்றுமல்லவா!உண்மையில் உங்களை நினைத்து பெருமையா இருக்குபா!

ஹாய் ஜெயா ஹரி,ராதை நலமா?அவங்களுக்கு எக்ஸாம் ஸ்டார்ட் ஆகிடுச்சா?

ஹாய் வனிதா,பார்ட்டீஸ் எல்லாம் முடிஞ்சாச்சா?கை இப்போ எப்படி இருக்கு?

ஹாய் மேனகா,தொண்டை வலி,ஜுரம் எல்லாம் டாட்டா சொல்லிட்டு போயிடுச்சா?

ஹாய் சந்தோ,சந்தோஷ் வால்தனத்தை பத்தி கேட்டேனே?சொல்லவே இல்லை?

ஹாய் உத்தமி,அங்க க்ளைமேட் எப்படி இருக்குபா?

ஹாய் சவுதி செல்வி,எப்படி இருக்கீங்க?

ஹாய் மஹா,யுவன் என்ன செய்கிறார்?

ஹாய் தனிஷா,அப்ராவை பத்திரமா பார்த்துக்குங்க,இங்க க்ளைமேட் மறுபடியும் மாறுதுல அதான்.

ஹாய் இலா எல்லாரும் உங்க வடை மேட்டரை பத்தி பேசுறாங்க.எங்க இருக்கு அந்த த்ரெட்?

மற்ற தோழிகள் எல்லாருக்கும் ஒரு ஹாய்

என் கண்வருக்காக jamaican Jerk Chicken செய்து பார்ப்போம் என்றால் அதில் இருக்கும் 4 teaspoons ground allspice என்று இருக்கிறது .தெரிஞ்சா கொஞ்சம் விளங்கப்படுத்துங்கோ.

சுரேஜினி

சுரேஜினி நான் ஜமைக்கன் கறிபொடி வாங்கி வைத்து இருக்கேன் அதில உள்ள பொருள்கள் : உப்பு+மஞ்சள்+மல்லி விதை+மிளகாய் வத்தல்+சோம்பு+சீரகம்+மிளகு+பூண்டு பொடி அதில அதர்ஸ் என்டு ஒரு இங்கிரீடியன்ட் இருக்கு அதுக்காக கொஞ்சம் நட்மெக் ( ஜாதிக்காய்) சேர்த்துக்கோங்க

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

எப்படி இருக்கீங்க?தேஜீ எப்படி இருக்காங்க? சந்தோஷ் வால்தனல் பத்தி நீங்க விசாரிச்சத படிச்சேன் பா,ஆனால் உடனெ பதில் போடமுடியல,அப்புறம் மறந்திட்டேனு நினைக்கிறேன்,,

இப்போவும் வால் அதிகம் தான்(அதான் வால்வெட்டி இல்லையே)ஸ்கூல்க்கு போக ரெடி பண்ணிட்டு இருக்கேன்,அதாவது ஸ்கூல் போறீயானு கேட்டாலே மாட்டேனு சொல்லிட்டு இருந்தான் இப்போ ஓகே போய் பார்க்குறேன் என்ற அளவில் இருக்கு,டயபர் போடாம இருக்க ட்ரை பண்ணிட்டு இருக்கேன்,எப்படியும் நைட் போட்டு தான் ஆக வேண்டி இருக்கு?? பார்க்கலாம்..இப்போல்லம் ஏதாவது அழுத்தி அழுத்தி சொன்னால் பிளீஸ் வாய நிறுத்துங்கம்மா(நல்லவேளை வாய மூடுங்கனு சொல்லல)தொணதொணனு பேசிட்டு இருக்கீங்கனு சொல்றான் பா..இப்படியெல்லாம் சொல்ல கூடாதுப்பா செல்லம்னு சொல்லிகொடுத்தால் சரிம்மா நான் நீங்க சொல்றத கேட்கிறேன் ஆனால் நீங்க வாய நிறுத்துங்கனு சொல்றான் எல்லாம் என் நேரம்,,சத்தியமா இவன் இப்படியெல்லாம் பேசுவானு ஒரு வருசம் முன்னால யாராவது சொல்லிருந்தால் நான் நம்பிருக்க மாட்டேன்பா,அவ்வளவு பேச்சு..எங்கம்மா கிட்ட ஃபோன்ல பேசும் போது அவங்ககிட்ட சொல்றான் உங்க பொண்ண அடி பின்னிட்டேன்னு(என்னைதான் அப்படி சொல்றான்பா)அவங்க அப்பாவ இனி நீங்க சேட்டையெல்லாம் பண்ணாம நல்ல பிள்ளையா இருக்கனும் இல்லன்னா உங்க அப்பாகிட்ட சொல்லிருவேன்,,அப்புறம் ஊருக்கு அனுப்பிவிட்டு அங்கயே இருந்துக்கங்கனு சொல்லிருவேனு மிரட்டுறான்..(எப்பவோ அவங்க அப்பா அவன இதே மாதிரி மிரட்டிருப்பார் போல)..அவன் இப்படி சொன்னதும் எங்களுக்கு சிரிப்பு வந்தது..அப்பவும் திட்டினால் சிரிக்கிறீங்க? 2பேரும் என்ன லூசா?னு கேட்டான்..

இது மாதிரி அவனோட சேட்டைய சொல்லிட்டே இருக்கலாம்,இந்த அருசுவையே போதாது..என்ன செய்ய?அப்படியே சமாளிச்சிட்டு இருக்கேன்,,ஆனால் சந்தோஷ் அவங்க அப்பா செல்லம் தான்,,லீவுல இருந்தாலோ,ஆபிஸ் போய்ட்டு வந்திட்டாலோ அவர் கூட தான்,அதனால எனக்கும் அவருக்கும் சமாளிக்க முடியுது..

ஹாய் தாமரை
நலமா? நானும் இப்பதான் சந்தோஷ்குட்டியோட வால்தனத்தை படிச்சேன். ஐயா இவ்வளவு பேசறாரா? ஆமாம் தாமரை, இந்த காலத்து குழந்தைகள் அளவிற்கு நாமெல்லாம் இருந்தோமான்னு தெரியல. அவ்வளவு வாயடிக்கிறாங்க. இன்னும் ஸ்கூல் போனதும் பாருங்க பேச்சு டபுள், ட்ரிபிள் ஆய்டும்.

நலமா கவி? சாம் சார் என்ன சொல்றார்? எனக்கு கீழே விழுந்ததில் அடியெல்லாம் படலை. அவர் கீழே கொஞ்சம் தள்ளி படுத்திருந்தாலும் கண்டிப்பா ஏதாவது அடி பட்டிருக்கும். நல்லவேளையாய் போய்டுச்சு!

நலமா? ராதை, ஹரி நலமா? உங்களுக்கு நாளை மெயில் அனுப்பறேன் ஜெயா. குட்டிப்பயலுக்கு எப்ப ஸ்கூல்?

மேலும் சில பதிவுகள்