கருணைக்கிழங்கு பக்கோடா

தேதி: April 3, 2006

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

கருணைக்கிழங்கு - அரை கிலோ
கடலைமாவு - அரை கிலோ
அரிசிமாவு - அரை கிலோ
மிளகாய்த்தூள் - 2 மேசைக்கரண்டி
உப்பு - 2 மேசைக்கரண்டி
எண்ணெய் - ஒரு கிலோ


 

கருணைக்கிழங்கை நன்கு கழுவி சுத்தம் செய்து இரண்டு அங்குல நீளத்திற்கு மெல்லியதாக நறுக்கிக் கொள்ளவும்.
நறுக்கிய கிழங்கு துண்டுகளின் மேல் நன்கு சலித்த கடலைமாவு, அரிசிமாவு, உப்பு, மிளகாய்த்தூள் போட்டு கலந்து கொள்ளவும்.
கிழங்கும் மாவும் சேர்ந்து வருவதற்காக சிறிதளவு தண்ணீர் கலந்து பிசைந்து கொள்ளவும்.
ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு எண்ணெய் காய்ந்ததும் கலந்து வைத்துள்ள கருணைக் கிழங்கு கலவையை கையால் எடுத்து காய்ந்த எண்ணெயில் போட்டு சிவந்தவுடன் எடுக்க வேண்டும்.


மேலும் சில குறிப்புகள்