சாம்பர் சாதம்

யாராவது சாம்பர் சாதம் ரெஸிபி சொல்லுங்களேன் plz....

Vinu..

யாராவது சாம்பர் சாதம் ரெஸிபி சொல்லுங்களேன் plz....

வினு

வெளியில் ரூர் செல்லும் போது, விஷேஷங்களுக்கு இதை செய்யலாம்.

தேவையான பொருட்கள்
வேகவைக்க
-----------
அரிசி - அரை கிலோ
துவரம் பருப்பு - இரு நூரு கிராம்
மஞ்சள் பொடி - அரை தேக்கராண்டி
சின்ன வெங்காயம் - பத்து
உப்பு - இரண்டு தேக்கரண்டி
காய் வேக வைக்க
-----------------
வெங்காயம் - 100 கிராம்
தக்காளி - 200 கிராம்
கேரட் - 1
பீன்ஸ் - பத்து
முல்லங்கி - 1
முருங்கக்காய் - ஒன்று (ஒரு இன்ச் அளவு வெட்டி கொள்ளவேன்டும்)
பச்ச மிளகாய் - முன்று
மஞ்சள் பொடி - கால் தேக்கரண்டி
உப்பு - ஒரு தேக்கரண்டி
சாம்பார் பொடி - ஆறு தேக்கரண்டி
வெல்லம் - ஒரு பிட்டு
புளி - இரண்டு எலுமிச்சை அளவு
தாளிக்க
------
எண்ணை - ஐமது கிராம்
கடுகு - ஒன்னறை தேக்கரண்டி
சின்ன வெஙாயம் - ஐந்து
கருவேப்பிலை - ஒரு கை பிடி
வெந்தயம் - ஐந்து
சீரகம் - அரை தேக்கரண்டி
பூண்டு - ஆறு பல்
நெய் - 25 கிராம்
கொத்து மல்லி தழை - அரை கை பிடி

செய்முறை
முதலில் பருப்பு அரிசி இரண்டையும் நன்கு களைந்து பத்து நிமிடம் ஊற வைக வேண்டும்.
பிறகு அதில் மஞ்சள் பொடி ,சின்ன வெங்காயம்.போட்டு ஒரு ஸ்பூன் எண்ணை விட்டு குக்கரில் அரிசி பருப்பு சேர்த்து நாலைரை டம்ளர் வரும் அப்படியே டபுளாகா தண்ணீர் ஊற்றி வேக வைக்க வேண்டும்.
வெங்காயம், தக்காளி,பச்ச மிளகாய், முல்லங்கி,கேரட்,பீன்ஸ்,சேர்த்து அதில் ஒரு டம்ளர்தண்ணீர் ஊற்றி உப்பு, மஞ்சள் பொடி சேர்த்து வேக வைக்கவேண்டும்.
பாதி வெந்து கொண்டிருக்கும் போது சாம்பார் பொடியை சேர்க்கவும்.
பிறகு புளியை கரைத்து ஊற்றவும்.
முருங்கக்காயை தனியாக வேகவைத்து சேர்க்கவும்.
இப்போது வெந்த பருப்பு சாதத்தில் வெந்து வைத்துள்ள காய ஊற்றி பாதி நெய்யும் சேர்த்து கிளறவேண்டும்.
கடைசியில் தாளிக்க கொடுத்துள்ளவைகளை தாளிந்து கொட்டி மீடி நெய், கொத்து மல்லி தழை சேர்த்து கிளறி அப்பளத்துடன் சாப்பிடவும்.
கமகமண்ணு நெய் மணத்தோடு மணக்கும் சாம்பார் சாதம் ரெடி

குறிப்பு:
முருங்கககாயை முதலே போட்டால் குழைந்து விடும்.தனிய கால் டம்ளர் தண்ணீர் சேர்த்து அதில் ஒரு பின்ச் உப்பு, மஞ்சள் பொடி ஒரு பின்ச் போட்டு வெந்து அதை சேர்க்கனும் அப்ப அது முழுசக இருக்கும். காய் கொஞ்சம் கல்லு மாதிரி உள்ள காய் போடனும், குழைந்து போகிற காய்கள் போட கூடாது, தனியா செய்கிற சாம்பாருக்கு ஒகே. தேவை பட்டால் உப்பு கூட சேர்த்து கொள்ளுங்கள்.
வழங்கியவர்
ஜலீலா

Jaleelakamal

ரொம்ப நன்றி ஜலீலா அக்கா...அறுசுவை ல தேடி பாத்தேன்..கிடைக்கல அதான் பதிவு போட்டேன்...அறுசுவை ல கேட்டா கிடைக்காதது எதுவுமே இல்ல:-) இந்த சாம்பார் சாதம் குறிப்ப சேர்த்துடுங்க:-)

Vinu

வினு

நான் என் குறிப்பில் "வெரி ஈசி திடீர் சாம்பார் சாதம்" குறிப்பு கொடுத்திருக்கிறேன். செய்து பாருங்கள்.

நீங்க இந்தியாவில் எங்கே இருக்கிறீர்கள். நான் சென்னையில் இருக்கிறேன். என் ஐடி "அரட்டை பாகம் 10" இல் இருக்கிறது. வேண்டுமானால் தொடர்பு கொள்ளுங்கள்.

அன்புடன்
ஜெயந்தி மாமி

ஜெயந்தி மாமி எப்படி இருக்கீங்க? நான் வெறும் சாம்பார் சாதம் நு தேடினேன்.அதான் கிடைக்கல...இப்போ ஜலீலா அக்கா receipe படி செய்தேன்.ரொம்ப நல்லா வந்தது.அடுத்து உங்க receipe பன்றேன்...

நாங்க சென்னை ல OMR ல இருக்கோம்.தொரப்பாக்கம் ல வீடு... ( IT Corridor road ல இருக்கு)...நீங்க எங்க இருக்கீங்க? ok உங்க ஐடி பாத்து mail பண்றேன்...

வினு

ஹாய் வினு அதற்குள் செய்து முடிச்சாச்சா? நான் சேர்க்க தேவையில்லை அது முன்பே கொடுத்த குறிப்பு தான்.

தினம் சாப்பாடு கட்டுவதால் கட்டு சாதம் தான் வித விதம செய்வது.

ஜே மாமி உடையதும் பாருங்கள் அதில் உங்களுக்கு வெஜ் குறிப்பா கிடைக்கும்.
ஜலீலா

Jaleelakamal

"பயோடேட்டா" என்று ஒரு த்ரெட் இருக்கு. அதில் அவரவரைப்பற்றி சொல்லி இருப்பார்கள். மேலும் பழைய பதிவுகளைப்பாருங்கள். ஒரு 2 நாட்கள் அறுசுவையை நன்கு சுற்றிச்சுற்றி வாருங்கள். படிக்கப்படிக்க சுவையாக இருக்கும். என்னைப்பற்றி நிறைய ஏற்கனவே சொல்லி இருக்கேன். சமையல் குறிப்புக்கு தேவையான குறிப்பின் பெயரை தமிழில் டைப் செய்து "தேடுக" என்று இருக்கும் பெட்டியின் இடது பக்கத்தில் இருக்கும் காலிப்பெட்டியில் பேஸ்ட் செய்து "தேடுக" என்ற பெட்டியில் க்ளிக் செய்தால் தேவையான குறிப்பு கிடைக்கும்.

கொஞ்ச நேரம் அறுசுவையில் வலம் வந்தால் நிறைய தெரிந்து கொள்ளலாம்.

அன்புடன்
ஜெயந்தி மாமி

ஜலீலா அக்கா ஆமா அக்கா காலைலயே பிளான் பண்ணினேன் சாம்பார் சாதம் செய்யலாம்னு....இன்னைகு நான் ஆபீஸ் லீவ் போட்டு இருக்கேன்...குட்டி பாப்பா இருக்கு எனக்கு...நீங்க எங்க ஆபீஸ் ல இருக்கீங்களா??

Vinu

வினு

samayal tips

யாராவது கொழுக்கட்டைசெய்முறை சொல்லுங்களேன்

மேலும் சில பதிவுகள்