மனதை நெருடும் வாசகங்கள்

இறைச்சி, முட்டையை உண்பதை விட உயிர் விடுதலிலேயே மகிழ்ச்சி அடைவேன் -
மகாத்மா காந்தி

பிராணிகளை பலி கொடுப்பதால் சொர்க்கம் கிடைக்குமென்றால் கடவுள் வழிபாடோ, விரதங்களோ தேவையில்லை. உன் குடும்பத்தினரையே பலி கொடுக்கலாமே! - பார்சி மதம்

புலால் உண்பது பாவமானது. இரத்தம் துணிகளை கறையாக்குகிறது. மனிதன் அந்த இரத்தத்தை குடிக்கும் போது சிந்தனையில் கறை படிகிறது. - குருகீரந்த ஸஹெப் (சீக்கிய மதம்)

கருச்சிதைவு என்பது தாய்மையையும் மனிதத் தன்மையையும் கொலை செய்வதாகும் - ஹைதீஸ் இஸ்லாம்

இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டும். இந்த ஆட்டுக் குட்டி களைத்து விட்டது. அதனை தோளில் தூக்கிக் கொள்கிறேன் - இயேசு நாதர்

பிராணிகள் கொலை செய்யப்படும்போது பயத்துடன் இறக்கின்றன. அந்த பயம் பிராணிகளின் உடலில் அடிப்படை வேதி மாற்றத்தை உருவாக்குகின்றது. இதனால் தசைகள் அமிலத் தன்மையை பெறுகின்றது. இந்த புலால் ஜீரண பாதையை கெடுக்கிறது. - ஜென்சிஸ் 1.297

பிராணிகளை கொள்வதும் பண்ணைகளை அழிப்பதும் இந்த பூமியில் பேரழிவை உண்டாக்கும். இறைவன் இதை அனுமதிக்கவில்லை. - குரான் ஹாரீப்

அகிம்சை எல்லாம் மதங்களும் கூறும் தத்துவம். எல்லா உயிர்களும் தன்னை காத்துக் கொள்ள விரும்புகின்றன. ஆகையால் எந்த உயிரையும் கொள்ளக் கூடாது.
உன் காலில் முள் தைத்தால் உடனே கூச்சலிடுகிறாய். ஆனால் நீ ஒரு உயிரின் தலையை துண்டிக்கும்போது அதற்கு வலிக்காதா? அந்த வழியை உணர்ந்து அந்த பிராணி வேதனை படுகிறது. ஆகவே எந்த உயிரையும் துன்புறுத்தாதே! கொல்லாதே! வாழு! வாழ விடு! உனக்கு எது நீதி என்று நினைக்கிறாயோ அதனையே மற்ற உயிரினங்களுக்கும் கொடு. - மகாவீரர்

நம் பசியை போக்க கொல்லப்பட்டும் உயிரினங்களுக்கு நாம் உயுருள்ள இடுகாடாக இருக்கின்றோம். பிணங்களின் இடுகாடாக உங்கள் வயிற்றை மாற்றாதீர். - ஜார்ஜ் பெர்னாட்சா

மனிதா உன் உள்ளம் அருளின் கருவூலம். எல்லா வாயில்லா உயிர்களுக்கும் அருளை அருள முடியும். அந்த உயிர்கள் பிறவிகள் தோறும் நினைவு கொள்ளும். - பூஜ்ய ஆர்ஜவசாகர்

ஆதவனும் அம்புலியும் உள்ளவரை
அகிம்சை இருக்கும்
அனைத்து அறங்களும் ஆதரிப்பது
தாவர உணவே!
முதியவரானாலும் மழலையானாலும்
முட்டை வேண்டாம்
தாவர உணவே தாரணி எங்கும்
தழைக்கட்டும்
ஊனும் கள்ளும் உயிரையும்
உடலையும் கெடுக்கும்
வாழ்வோம் உயிர்களை வாழவிடுவோம் - யாரோ ஒரு அறிஞ்ர்

லக்ஷ்மி
எண்ணங்கள் வாக்குகளை விட வலிமையானவை
நல்லதையே நினைப்போம்

லக்ஷ்மி.... என்னது இது... மனதை நெருடும் வாசகங்கள் என்று நீங்கள் எந்த அர்த்தத்தில் சொன்னீர்கள் என்று தெரிய வில்லை....நமக்கு இந்த மாதிரி வாசகங்கள் இப்போது இங்கு தேவை தானா??? வேண்டாமே.... நல்ல தலைப்புகளில் ஆரோக்கியமா எல்லாரும் கலந்துக்கிற மாதிரி போடுங்க.... நீங்க அப்படி போடுவீங்க என்று எனக்கு தெரியும்.... மீண்டும் பாக்கலாம்....

தேவையோ தேவையில்லையோ என்று புரியவில்லை அருண். ஆனால் வாசித்ததில் இருந்து என்னை யோசிக்க வைத்து விட்டது. மீனை மட்டும் உண்டு வந்த என்னை முழுத் தாவர உண்ணியாக மாற்றி விட்டது என்றால் இதன் தாக்கத்தை என்னவென்று சொல்வது? ஏதோ ஒரு உந்துதல் என்னை இந்த இடத்தில் போட வைத்து விட்டது. உங்கள் மனதை பாதித்து இருந்தால் மன்னியுங்கள்.

லக்ஷ்மி
எண்ணங்கள் வாக்குகளை விட வலிமையானவை
நல்லதையே நினைப்போம்

எண்ணங்கள் வாக்குகளை விட வலிமையானவை
நல்லதையே நினைப்போம்

வாங்க... லக்ஷ்மி... என்ன இரவு சாப்பாடு எல்லாம் ஆச்சா??? சரி... என்னோட மனதை எல்லாம் பாதிக்க வில்லை.... இடம், பொருள், ஏவல் பார்த்து தானே நம்மோட கருத்துக்களை சொல்ல முடியும்.... அந்த அர்த்தத்தில் தான் தேவையா என்று கேட்டேன் லக்ஷ்மி... வேற ஒண்ணும் இல்லை... எனி வே.... மீண்டும் பாக்கலாம்....

ஹாய் அருண், நான் சாப்பிட்டு விட்டேன். உங்களுக்கு சாப்பாடு ஆச்சா? "கல்லை கல்லாய் பார்ப்பதும், கல்லை கடவுளாய் பார்ப்பதும் பார்ப்பவரின் கண்களை பொறுத்தது" என்பார்கள். என் பார்வையில் துன்பமாக தெரிவது உங்கள் பார்வையில் வேறு மாதிரி தெரிகிறது. So no problem! உங்கள் பொழுதுகள் இனிமையாக அமைய வாழ்த்துகிறேன்.

லக்ஷ்மி
எண்ணங்கள் வாக்குகளை விட வலிமையானவை
நல்லதையே நினைப்போம்

எண்ணங்கள் வாக்குகளை விட வலிமையானவை
நல்லதையே நினைப்போம்

என்ன லக்ஷ்மி இப்படி சொல்றீங்க???? ம்ம்ம்ம்.... உங்கள் கருத்தை நான் குறை கூறவே இல்லை லக்ஷ்மி......இங்கே பாருங்க... ஒவ்வொருத்தருடைய பழக்க வழக்கங்களும்... உணவு முறைகளும் வேறுபடும்..... ம்ம்ம்ம்....

உங்களுக்கு தெரியுமா??? எனக்கு ஒரு உயிர் நண்பன் இருக்கிறான்.... என்ன வேண்டும் என்றாலும் அவனுக்காக பண்ணுவேன்.... அவனும் அப்படி தான்.... நான் இந்து.... அவன் முஸ்லிம்....அவனுக்கும் எனக்கும் அப்படி ஒரு பிடிப்பு.... இருந்தாலும் நல்லா சண்டை போடுவோம்.. விவாதம் பண்ணுவோம்... வீண் விவாதம் கூட பண்ணுவோம்...... இப்படி இருக்கும் பட்சத்தில்.... அவனுடைய மத ரீதியான பழக்க வழக்கங்களை எனக்கு பிடிக்க வில்லை என்ற காரணத்திற்க்காக மாற்ற சொல்லுவது நியாயமா??? சொல்லுங்கள்.....

அந்த மாதிரி மாற்ற சொல்லும் கட்சியில் தான் நீங்கள் இப்போது இருக்கிறீர்கள்..... இங்கு யார் யாரு இருக்கிறார்கள்... என்ன ஏது என்று பார்த்து தானே நீங்கள் ஒன்றை சொல்ல முடியும்.....

யாருடைய நம்பிக்கைகளையும் காயப்படுத்தாதீர்கள்....இங்கு உங்கள் கருத்துக்களை ஒத்த நபர்கள் மட்டும் அல்லாது எல்லோரும் இருக்கிறோம்....

நீங்கள் சொன்ன கருத்துக்கள் உலக அளவில் பிரசித்தி பெற்று இருந்தாலும்.... அதை சொல்ல வேண்டிய இடம் இது இல்லை....

லக்ஷ்மி..... நீங்கள் இதற்கு கோபப்பட்டு பதில் மொழி கொடுக்க வேண்டாம்... நான் தான் கோவப்பட்டு பதில் போட்டு விட்டேனே....

சரி.... நல்லது...... நான் சொல்லியதில் தவறுகள் இல்லை தான்....

சரி மீண்டும் பாக்கலாம்....

என்ன லக்‌ஷ்மி தெரியாமல் இந்தப்பக்கம் வந்து [ஒரு 4 நாளுக்கு முன்னம்]இதை வாசித்தேனா?
ஏற்கனவே கர்ப்பமானதில் இருந்து உணவில் வெறுப்பு இதை பார்த்துவிட்டு அசைவத்தைக்கண்டாலே ஏதோ செய்கிறது.
இங்கு வாசித்தது படம்போல் மனதில்வருகிறது.டாக்டர் மீன் சாப்பிடச்சொல்ல நான் கண்டவுடன் வாந்தி எடுக்க வீட்டில் இதனால் நானும் கணவரும் யுத்தம்தான்.
பரவாயில்லை லக்‌ஷ்மி எண்ணங்களை வெளிப்படுத்தும் உரிமை அனைவருக்கும் உரியது.இதில் தலையிட எனக்கு உரிமை இல்லை.இதைக்கடைப்பிடி என்று நீங்கள் கட்டாயப்படுத்தவில்லையே.
நான் உங்களிடம் கேட்கும் கேள்வி ஒமேகா 3 உள்ள சைவ உணவுகள் கொஞ்சம் சொல்லுங்கோ.நான் மீனுக்கு பதிலா சாப்பிடுறன்.கோவிக்காதீங்கோ லக்‌ஷ்மி
இங்கு எல்லோரையும் நான் சகோதரிகளாகத்தான் நேசிக்கிறேன்.[இந்த வாயாடி அருணைத்தவிர]

சுரேஜினி

ஹாய் அருண்,

இந்த வாசககங்கள் எதுவும் மதம் சார்ந்தவையல்ல. இது சிலரின் கொள்கை சார்ந்தவை. நீங்கள் குறிப்பிட்டவாறு மதம் இங்கு எங்கு வருகின்றது என்பது எனக்கு புரியவில்லை. ஏனெனில் இவை தனியொரு மதத்தினரால் எழுதப்பட்ட வாசகங்கள் இல்லை. பல்லின மதத்தவரால் எழுதப்பட்ட வாசகங்கள்.

எனது இந்து மதத்தில் இல்லாத உயிர் பலியா மற்ற மதத்தில் இருக்கின்றது? ஏன் நாங்களும் இறைச்சியை புசித்துக் கொண்டு தானே இருக்கின்றோம்? பிறகு எப்படி என்னால் மற்ற மதங்களின் கொள்கைகளையோ, பழக்கவழக்கங்களையோ அல்லது நம்பிக்கைகளையோ மாற்ற முடியும் அல்லது காயப்படுத்த முடியும்? அத்தோடு எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் மற்ற மதங்களை விமர்சிக்கவோ அல்லது மாற்ற நினைக்கவோ எனக்கு எந்த தகுதியும் இல்லை! உரிமையும் இல்லை! அருண், உங்களின் இந்த அணுகுமுறை எனக்கு புரியவில்லை.

அத்தோடு நீங்கள் குறிப்பிட்டது போல் நான் என்றுமே என் கொள்கைகளை யாருக்கும் பலாத்காரமாக திணிப்பதில்லை. அது அவரவர் இஷ்டம். ஐந்து விரலும் ஒரே மாதிரி இருப்பதில்லை. ஆனால் நான் செய்த மிகப் பெரிய பிழை இந்த வாசகங்களை இங்கு பதிவு செய்தது தான். அதற்காக எல்லோரிடமும் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.

அருண் உங்களை தாக்கும் எண்ணத்தோடு இதனை எழுதவில்லை. இதற்க்கு நான் பதில் சொல்லவில்லையென்றால் உங்களைப் போலவே வேறு நண்பர்களும் என்னை தப்பாக நினைக்கக்கூடும். அந்த கசப்பான எண்ணங்களை நான் சுமக்க விரும்பவில்லை.

நன்றி

லக்ஷ்மி
எண்ணங்கள் வாக்குகளை விட வலிமையானவை
நல்லதையே நினைப்போம்

எண்ணங்கள் வாக்குகளை விட வலிமையானவை
நல்லதையே நினைப்போம்

லக்ஷ்மி நீங்கள் வேண்டுமெனில் யதார்த்தமாக எழுதியிருக்கலாம் ஆனால் படிப்பவர்களுக்கு கொஞ்சம் மனசங்கடமாக தான் இருக்கும்
இதற்கும் மதத்திற்கும் என்ன சம்மந்தம் எஙிறீர்கள்..சில மத வழக்கப்படி சில பண்டிகைகளுக்கு உயிர்பலி கொடுத்து கொண்டாடுவது வழக்கமாக உள்ளது.
அதனை பக்தியோடு கொண்டாடி வருபவர்களுக்கு இந்த வாசகங்கள் தர்மசங்கடத்தை உருவாக்கும்.மட்டுமல்ல நானே இன்றெல்லாம் அசைவம் கண்டால் அறுவறுப்போடு காணும் ஒரு நிலையில் இருக்கிறேன்..என் கணவரும் சுத்த சைவமாக இருக்கிறார்..இருந்தும் கூட எனக்கும் கொஞ்சம் சங்கடமாகிவிட்டது..
சரி இத்தோடு இதனை விடுவோம்..புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன்..மன்னிப்பெல்லாம் வேண்டாம்..நல்ல கருத்துக்கள் பொதுக்கருத்துக்களை தாராளம் பாதியுங்கள்

எப்போதும் உங்களுடைய கருத்துக்களை ரொம்ப ஆர்வமாக படிப்பேன். ஏனெனில் நல்ல உபயோகமான த்ரெட் போடுவீர்கள். இம்முறை இதை அப்படி நினைத்துதான் படித்தேன். ஆனால் படித்து முடிக்கும் போது மனது மிகவும் சங்கடமாகி போனது. என்னவென்று என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. பழைய பதிவுகளை படித்து பாருங்கள். அதிலே இருக்கு உணவிற்காக அசைவம் சாப்பிடுவது பற்றி. அருண் ரொம்ப கரைக்டாதான் சொல்லியிருக்கார். என்னுடைய சகோதரியா நினைத்து சொல்லியிருக்கேன். தவறாக எடுத்துக்காதீங்க

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

ஹாய் தோழிகளே!

உங்கள் இருவரின் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி. இனி வரும் நாட்களில் பதிவுகள் போடும் முன் மிக கவனமாக இருப்பேன். உங்கள் மனம் பாதித்தமைக்கு நான் ஒரு காரணவாதியாகி விட்டேன் என்பதை நினைக்கையில் மனதுக்கு கஷ்டமாக இருக்கின்றது. இனி யோசித்து, மனம் வருந்தி பிரயோசனம் இல்லை. ஒவ்வொரு நாளும் வாழ்க்கை பல பாடங்களை கற்றுத் தருகின்றது. அதில் இன்று நான் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் இது என்று தப்பை ஏற்றுக் கொள்கிறேன்.

லக்ஷ்மி
எண்ணங்கள் வாக்குகளை விட வலிமையானவை
நல்லதையே நினைப்போம்

எண்ணங்கள் வாக்குகளை விட வலிமையானவை
நல்லதையே நினைப்போம்

மேலும் சில பதிவுகள்