உள்ள வாங்க... கதை சொல்லுங்க !!

அன்பு தோழிகளே.... கதை கதையா சொல்ல வேணும் இந்த இழையில். புரியலயா.... ஒன்னுமில்லங்க, நம்ம எல்லார் வீட்டிலும் சின்ன கதை கேட்கும் குழந்தைகள் இருக்கு, ஏன் நாமே கூட நல்ல கருத்துள்ள குட்டி குட்டி கதை கேக்க ஆசைப்படுவோம். அதுக்கு தான் இந்த புது இழை.

வாங்க வாங்க.... கதை சொல்ல வாங்க.... புராண கதைகள், நகைச்சுவையான கதை எல்லாம் சொல்லுங்க.

காகா வடை "சுட்ட" (திருடிய) கதை கூட சொல்லலாம். ஹிஹிஹீ....

ம்ம்... வந்துட்டு எங்க ஓடுறீங்க. ஒரே ஒரு கதை சொல்லிட்டு போங்க பிளீஸ்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனி நேற்று தான் என் பிரதரின் லா பையன் வந்தான் 2 வய்து
காக்கா வடை இல்லை kfc சிக்கன் தூக்கிட்டு போய் விட்டது .
அங்க வந்த பூனை கொஞ்சம் சிக்கன் கேட்டுச்சான், அதுக்கு கொஞ்ச்ம் பிச்சி பிச்சி கொடுத்துட்டு காக்காவும்சாப்பிட்டு பிரெண்டாயிட்டாங்களாம் என்றேன்.
அவன் அதை திரிப்பி தீப்பி சொல்லி கொண்டே இருந்தான்.

jaleela

Jaleelakamal

நல்ல கதை.... பாருங்க நம்ம ஜலீலா காக்கா பூனை கதை சொல்லி ரிப்பன் வெட்டிடாங்க..... அடுத்து நல்ல கதை சொல்ல போறது யாரு??? இது வரை நிறைய தோழிகள் கேட்டிறாத நல்ல கதை சொல்லி பாராட்டுகளை பெருங்க. என்ன ஜலீலா நான் சொன்னது சரி தானே???

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஒருநாள் வேட்டைக்குச் சென்று திரும்பிய அக்பருக்கு வழிகாட்டி உதவினான் ஒரு குடிமகன். அதற்குப் பரிசாக தன் மோதிரத்தை பரிசளித்தார் அக்பர். அரண்மனையில் நல்லதொரு வேலையும் தருவதாகச் சொல்லிவிட்டு வந்தார்.

அந்த மோதிரத்தை எடுத்துக் கொண்டு அரண்மனைக்குச் சென்று காவலாளியிடம் மோதிரத்தைக் காண்பித்தான். அதை கண்ட காவலாளி 'இவன் பெரிய பரிசு ஒன்றைத்தான் வாங்கச் செல்கிறான்; அதில் நாமும் கொஞ்சம் பங்கு போட்டுக் கொள்ளவேண்டும்?' என்று நினைத்து "உன்னை உள்ளே விட்டால் உனக்குக் கிடைப்பதில் எனக்கும் பாதி பங்கு தர வேண்டும்" என்று சொல்லி உள்ளே அனுப்பினான்.

உள்ளே சென்ற குடிமகன் அக்பரைச் சந்தித்து மோதிரத்தைக் காட்டியதும், " உனக்கு என்ன பரிசு வேண்டும்? கேள்...." என்று சொல்ல, "50 கசையடிகள் வேண்டும்" என்கிறான் குடிமகன். அக்பருக்கோ குழப்பம்.... சபையோருக்கு மட்டும் கேக்கவா வேண்டும்... 'பைத்திகாரனா?' என்று சிரித்தனர். நம்ம அக்பர் மன்னராச்சே.... புத்திசாலி, அதனால் உடனே "ஏன் இப்படிக் கேட்கிறாய்?" என்றார், "மன்னா.... பரிசை வாங்கிக் கொண்டு சொல்கிறேன்" என்றான் குடிமகன்.

சரி அவனே அவ்வளவு ஆசையாக கேக்கும்போது நாம் ஏன் மாட்டேன்னு சொல்ல வேண்டும் என்று அக்பரும் உத்தரவிட்டார். குடிமகனுக்கு சவுக்கடி ஆரம்பமானது.... 25 கசையடிகள் முடிந்ததும் நிறுத்தச் சொல்லி மீதி அடிகளை வாயிற்காப்போனுக்குத் தரும்படி சொன்னான் குடிமகன். அக்பர் கில்லாடி... விஷயம் புரிஞ்சிடுச்சு. கேட்டதை 2 மடங்கா குடுத்து பழக்க பட்டவர் வேறு.... அதனால் வாயிற்காப்போனுக்கு 25 என்னடா.... 50 கசையடிகள் 'அ வாங்கிக்கன்னு சொல்லிட்டார்.

அந்த குடிமகனின் புத்தி சாதுர்யத்தை வியந்து அவனைத் தன் பிரதான மந்திரியாக ஆக்கிக் கொண்டார். அந்த குடிமகன் தான் நம்ம அக்பர் கதைகளில் வரும் ஹீரோ.... "பீர்பால்". :)

---- எப்படி கதை?! நல்லா இருந்துச்சா?! ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஏற்கனவே அறுசுவையில் ஒரு தலைப்பு இருக்கிறது. அதில் நிறையக் கதைகள் குழந்தைகளுக்கானது எழுதப்பட்டிருக்கு. எங்கேயென்றே தெரியவில்லை. அதிலும் இந்த ஜலீலாக்கா சொல்கிறதைப் படிக்கிறபோது, அவவுக்கும் 2 வயதோ என்றுதான் எண்ணத் தோன்றுகிறது:).

வடை சுட்ட கதை என்றதும் எனக்கு பழைய ஞாபகம் வந்துவிட்டது. எங்கள் மூத்தவருக்கு 18/20 மாத வயதாக இருந்தபோது நன்கு கதைக்கத் தொடங்கிட்டார். அப்போ முதன் முதலாக இக் கதையை அம்மா, 2/3 தடவைகள் சொல்லிக் கொடுத்தா. உடனே திருப்பிச் சொல்லத் தொடங்கிற்றார்.அவருக்கு ஈசியாக இருக்கட்டுமே என்று அவருக்கு புரிந்த மொழியில் இப்படிக் கற்றுக்கொண்டார்.
பாட்டி வடை சுட்டு சுட்டு தாத்தாக்குக் கொடுத்தா,
அதை ஒரு குறோ பார்த்துக்கொண்டிருந்தது,
குறோ வந்து ஒரு வடையைத் தூக்கிப் போனது,
அதை ஒரு நரி கண்டது.
நரி கேட்டது, குறோ... குறோ ஒரு பாட்டு பாடுங்கோ என்று. குறோ, கா... கா.... என்றது, வடை கீழே விழுந்துவிட்டது, நரி தூக்கிக்கொண்டு ஓ....டிட்டுது...

இக் கதையைச் சொல்கிறார் என்றதும் தான், உடனே போன் கோல் ஒன்றின்மேல் ஒன்று வரத்தொடங்கிவிட்டது, எங்கே ஒருக்கால் அந்தக் கதையைச் சொல்லுங்கோ என்று. என் மகனுக்கு பெரிய லெவலே வந்துவிட்டது, எல்லாமே இப்பவும் கண்ணுக்குள் நிற்கிறது. வனிதா இன்னும் கதைவேணுமோ? அல்லது உங்கள் நிலையும் இப்போ "பிச்சை வேண்டாம் நாயைப் பிடித்தால் போதும் " என்றாகிவிட்டதோ?:)

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

அடடா அதிரா... எத்தனை இழை இருந்தாலும் இது போன்ற கதைகள் கேக்க நல்லா இருக்கு. அதைவிட உங்க தமிழில் அந்த கதை கேக்க இன்னும் இனிமை.

http://www.arusuvai.com/tamil/forum/no/7891

இது தான் நீங்க தேடின இழை. :D

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அறுசுவை பட் பட்டென்று வருகிறது நீண்ட நாட்களின் பின்னர். என் கண்ணே பட்டுவிடும்போலுள்ளது. அட்மின் அறுச்சுவைக்குள் நுழைந்துவிட்டார் என்பது தெரிகிறது.

வனிதா பெரியாட்களுக்கான கதைகள் வேண்டாமோ?:)குட்டிக் கதைகள்தான் வேண்டுமோ?

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நல்ல கருத்தை சொல்ல கூடிய கதை எதுவா இருந்தாலும் சரி.... சொல்லுங்கோ.... உங்க தமிழில் கதை கேக்க ஆசையா காத்திருக்கேன்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஒரு ஊரிலே ஒரு குடும்பம் இருந்ததாம்..அவங்களுக்கு 3 பிள்ளைகள்..வீட்டில் காசே பத்தலையாம்.
அப்போ அப்பாவுக்கும் அம்மாவுக்கும் ரொம்ப கஷ்டமாம்..சாப்பாடு தவிற வேறெதுவும் வாங்க காசில்லையாம்..அப்போ அபாவும் அப்பாவும் ஒரு சாமியாரிடம் போனாங்களாம்..
"சாமி சாமி எங்க வீட்ல காசே இல்ல அதனால எங்க பிள்ளைகளுக்கு எதுவும் வாங்க முடியல..எங்களுக்கு நீங்க தான் சாமி கஷ்டத்தை போக்கி வழிகாட்டனும் "னு சொன்னாங்களாம்.
அப்போ சாமி சொன்னாராம் அப்படியா சரி இந்த ஒரு கோழியை கொண்டு போய் 1 வாரம் வளத்துங்க உங்க கஷ்டமெல்லாம் தீரும் என்று
அப்போ நன்றி சொல்லிட்டு அப்பா அம்மா கோழியோட வீட்டுக்கு போனாங்களாம்..குட்டி வீட்டில் பிள்ளைகளும் கோழியுமாக ஒரே சத்தமும் அசிங்கமுமாம்...அப்பா அம்மாவுக்கு இன்னும் கஷ்டமாகிடுச்சாம்.திரும்ப சாமி கிட்ட 1 வாரம் கழிச்சு போய் "சாமி சாமி நீங்க கோழி தந்தபின் இப்ப எங்க கஷ்டம் இன்னும் கூடிடுச்சு சாமி..இப்படி பன்னிட்டீங்களே"ன்னு அப்பா சொன்னாராம்
அப்போ சாமி "அப்படியா சரி பொறுமையா இருங்கோ இந்த இரண்டு ஆட்டை கொண்டு போய் கட்டுங்கோ இன்னும் 1 வாரம் கழிச்சு வாங்கோ உங்க கஷ்டம் மாறும்னு சாமி சொன்னாராம்
இவங்க சந்தோஷமா அடுகளையும் கட்டிபோட்டு அதுக்கும் சாப்பாடு போட்டு 1 வாரம் ஆகுரதுக்குள் ஆடும் கோழியும் பிள்ளைகளுமாக அந்த குட்டி வீட்டில் இவங்களுக்கு ரொம்ப கஷ்டமாம்..அப்பா அம்மா கிட்ட இப்ப சுத்தமா காசே இல்லையாம்
ஒரு வாரம் கழிச்சு திரும்ப சாமி சாமி எங்க கஷ்டம் இன்னும் அதிகமாகிடுச்சு ந்னு சொன்னாங்களாம்
அப்போ சாமி சொன்னாராம் சரி இன்னும் ஒரே ஒரு வாரம் தான் அதற்குள் உங்க கஷ்டம் கண்டிப்பா தீரும்னு சொன்னாராம்..அதோட ஒரு மாட்டையும் கூடே அனுப்பினாராம்
மாட்டையும் வீட்டுக்கு கொண்டு வந்து அதுக்கும் புல்லு கொடுத்து அதையும் கவனிcஜ்ஹ்சு,,ஆட்டையும் சாப்பாடு போட்டு கவனிச்சு,,கோழியையும் கவனிச்சு அதுக்குள்ள அப்பா அம்மா காசு எல்லாமே தீந்து போச்சாம்..இப்ப அவங்கள்ட காசே இல்லையாஅம்
அப்போ திரும்ப ஒரு வாரம் கழிச்சு சாமி சாமி இனி எங்களுக்கு கஷ்டப்பட தெம்பில்ல...எங்களுக்கு காசே இல்ல உதவுங்க சாமின்னு சொன்னாராம் அப்பா
சாமி சொன்னராம் சரி இன்றோடு உங்க கஷ்டமெல்லாம் தீரும் போய் மாட்டையும் ஆட்டையும் கோழியையும் திருப்பி கொண்டு வந்து என்னிடம் விட்டு விட்டு வீட்டுக்கு போக சொன்னாராம்..அப்பா அப்பா அதே போல மாடு,ஆடு,கோழியை கொண்டு வந்து சாமிட்ட கொடுத்துட்டு போனாங்களாம்
அப்போ 3 பிள்ளைகளும்,அப்பாவும் அம்மாவும் மடும் வீட்டில்..ரொம்ப சந்தோஷமா இருந்ததாம்..3 வாரம் கோழியும் ஆடும்,மாடும் வந்து கஷ்டப்பட்டபின் நிம்மதியாக அப்பா அம்மா குழந்தைங்க சந்தோஷமா இருன்தாங்களாம்..காசு கூட மீதம் வந்துச்சாம்..அப்போ தான் அப்பாவுக்கு புரின்cஜ்ஹதாம்
சாமிகிட்ட போய் சாமி சாமி இப்ப தான் என் குடும்பம் சந்தோஷமா இருக்கோம்னு சொன்னாராம்
சாமி சொன்னாராம்" எப்பவும் நம்ம கிட்ட உள்ளதை ஒரு குறைய நினைக்காமலிருப்பதை வச்சு வாழ பழகிட்டா எப்பவும் சந்தோஷமா இருக்கலாம்.."னு சொனாரம் சாமி
நன்றி சொல்லிட்டு அப்பா அம்மா ஊர் திரும்பினாங்களாம்

என்ன வனிதா இது போதுமா..இது பெரிய நல கதையெல்லாம் இல்ல இருந்தாலும் நான் சுமார் ஒரு 10 வயதில் கேட்ட கதை அதனால் மனதில் பதிந்து விட்டது.

ஒரு ஊரில் ஒரு துறவி இருந்தார். அவர் சில சீடர்களை வைத்து, நல்ல புத்திகள், பண்புகள் சொல்லிக் கொடுப்பார். அப்போ அவர் சொன்னார், நாம் எப்பவுமே அடுத்தவருக்கு உதவ வேண்டும் , அடுத்தவருக்கு உதவுவதில் பின்நிற்கக் கூடாது, பெண்களைத் தாயாக, சகோதரமாக மதிக்க வேண்டும். இப்படியெல்லாம் நிறைய நல்ல விஷயங்கள் சொல்லிக் கொடுத்தார். சீடர்களும் அதைப் பின்பற்றி நடந்தார்கள்.

ஒருநாள் ஒரு சீடனோடு துறவி, ஒரு கடற்கரை வழியே நடந்து கொண்டிருந்தார. அப்போ அக் கடலிலே ஒரு பெண் தவறி விழுந்துவிட்டார், அப் பெண், கைகளை மேலே உயர்த்தி "உதவி" "உதவி" எனக் கத்தினார், இதைப் பார்த்த துறவி, சிறிதும் சலனமில்லாமல் நடந்துகொண்டே இருந்தார். இதைப் பார்த்த சீடன் சிறிதும் தாமதிக்காமல், துறவியிடமும் எதுவும் சொல்லாமல், கடலிலே குதித்து, அப்பெண்ணைத் தோழிலே தூக்கி வந்து கரையிலே போட்டான், பின்னர் எதுவுமே நடவாததுபோல், துறவியோடு நடந்து வந்தான். நீண்ட தூரம் நடந்தார்கள், இருவரும் எதுவும் பேசவில்லை.

பின்னர் துறவி சொன்னார் "என்ன இருந்தாலும் நீ அந்தப் பெண்ணைத் தொட்டுத் தூக்கி வந்தது தப்பு" என்றார். இதைக் கேட்ட சீடன் சொன்னான், "சுவாமி நீங்கள்தானே ஆபத்தில் உதவ வேண்டும் எனச் சொல்லித் தந்திருக்கிறீங்கள், அதுவும் நான் அப் பெண்ணைத் தூக்கிவந்து கரையிலே இறக்கியதோடு சரி, அதை நான் அப்பவே மறந்துவிட்டேன், நீங்கள்தான் அதை இப்பவும் தூக்கிக்கொண்டு வருகிறீங்கள்" என்றான். இதைக் கேட்ட துறவி வெட்கத்தில் தலை குனிந்தார்.

அப்பாடா இது இப்போதைக்குப் போதும் கை வலிக்கிறது.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

மேலும் சில பதிவுகள்