எவையெல்லாம் இயற்கை உணவு

இயற்கை உணவு என்றால் என்ன? எதனைப் பற்றி இங்கே உரையாடலாம்?

இயற்கையாகக் கிடைக்கக் கூடிய காய்கள், கனிகள், தானியங்கள் மற்றும் தேன், பால் அனைத்தும் இயற்கை உணவுகள்தான். மனிதன் சமைக்காமல் அப்படியே உண்ணும் உணவினை இயற்கை உணவு என்றுக் குறிப்பிடலாம். கனிகளை அப்படியேதான் சாப்பிட வேண்டும். ஆனால், எல்லாக் காய்களையும், தானியங்களையும் அப்படியே சாப்பிடுதல் மிகவும் கடினம். எந்த பொருட்களையெல்லாம் அப்படியே சாப்பிடலாம்? அவற்றால் கிடைக்கக்கூடிய நன்மைகள் என்ன என்பதைப் பற்றியெல்லாம் இங்கே உரையாடலாம்.

இது நல்லதாக இருக்கிறதே. ஏன் இதைப்பற்றி யாரும் எந்த கருத்தும் பதிவிடவில்லை.

பாபு அண்ணா...... அருமையான இழையா இருக்கு. இயற்கைனா என்னனு குழப்பிக்கிற இந்த கால கட்டத்தில இயற்கை உணவு பற்றி பகிர்ந்துகொள்வது மிக்க பயனுள்ளதாகவும் எஃபக்டிவாகவும் இருக்கும்னு நம்பறேன்.
இந்த இழையை தொடங்கியதற்கு உங்களுக்கு எனது வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள்.

எனக்கு தெரிந்த சில இயற்கை உணவுப் பழக்கங்களை நான் சொல்றேன்.

1. கொண்டைகடலை,தட்டை பயறு,கம்பு, ராகி,வேர்கடலை, சோயா, பட்டாணி, பச்சை பயறை ஊற வைத்து முளை கட்டி சாப்பிடலாம்.

2.தேங்காய், கறிவேப்பிலை, கொத்தமல்லி, புதினா, சோற்றுக் கற்றாழை, செம்பருத்தி பூ, ரோஜா பூ, துளசி, வெற்றிலை, ஓமவல்லி (அ) கற்பூர வல்லி, வேப்பிலை போன்றவைகளை முடிந்த வரை ஒருகைப்பிடி அளவு தினம் தோறும் சாப்பிட்டால் மிகவும் நல்லது. (நான் சின்ன பிள்ளையிலிருந்தே இவையெல்லாம் எங்கள் வீட்டு தோட்டத்திலேயே இருக்கும் என்பதால் தினமும் சாப்பிடுவேன்).

3. அந்தந்த சீசன்ல கிடைக்கும் பழங்களை கண்டிப்பா சாப்பிடனும்.

4. வெண்டைக்காய், வெங்காயம், வாழைப்பூவின் குருத்து, கேரட், கோஸ் போன்ற காய்களை பச்சையாகவே சாப்பிடலாம்.
பச்சைவாசம் பிடிக்கலனா கொஞ்சம் போல உப்பு, மிளகுத்தூள், சீரகத்தூள் சேர்த்து சாப்பிடலாம்.

5.கம்பு, கேழ்வரகு போன்ற தானியங்களை ஊறவைத்து நிழலில் உலர்த்தி கருப்பட்டி பாகு காய்ச்சி மாவுடன் பிசைந்து உருண்டை செய்து சாப்பிடலாம்.

6. வேர்கடலையையும் மேற்சொன்னவாறு செய்யலாம். கண்டிப்பா ஊறவைத்து அந்த தண்ணியை வடிச்சிடனும். அப்பதான் வேர்கடலையிலிருக்கும் பித்தம் நீங்கும்.

7. பொட்டுக்கடலை மாவுடன் தேன் சேர்த்து உருண்டை பிடித்து சாப்பிட்டால் இரும்புச்சத்து உடலில் சேரும்.

8. வாழைப் பழத்துடன், பலாபழத்துடன் தேன் சேர்த்து சாப்பிட்டாலும் நல்லது.

9. வெண்ணெய் எடுக்கப்பட்ட மோர் குடித்தால் சிறுநீரகக்கோளாறு, உடல் சூடு, கல்லீரலில் உள்ள தீயவைகள் போன்றவைகளை நீக்குகிறது.

10. கண்டிப்பா நல்லெண்ணெய் குளியல் வாரத்திற்கொருமுறை எடுத்துக்கணும். சளி, சைனஸ் பிரச்சனை இருந்தால் கொஞ்ச நேரம் மட்டும் வைத்து குளித்து நன்கு வெயிலில் உடனே காய வைத்தால் பிரச்சனைய் வராது. நல்லெண்ணெய்யை வாயில் வைத்து கொப்பளித்தலும் நல்லது.

11. அதைவிட அடிக்கடி நீர் அருந்துவது மிக மிக முக்கியம்.

12. வெங்காயம், தக்காளி போன்றவைகளையும் பச்சையா சாப்பிடலாம். குறிப்பாக வெங்காயம் விஷ முறிவுக்கு நல்லது.

13. மிளகு, சீரகம், ஓமம், வெந்தையம், நாடு மருந்துகளான அதிமதுரம், திப்பிலி, சுக்கு, போன்றவைகளை சளி, இருமல், உடல் வலி போன்ற பிரச்சனைகளுக்கு சாப்பிடலாம்.

14. பசியின்மை, நெஞ்செரிச்சல் பிரச்சனைக்கு அரை இன்ச் அளவுள்ள இஞ்சியை தோல் சீவி அதனுடன் சிறிது உப்பை சேர்த்து நன்கு மென்று சாப்பிட்டால் நல்லது.

எங்க அம்மா எனக்கு சொல்லிக்கொடுத்ததை எல்லாம் சொல்லிட்டேனு நினைக்கிறேன். இயற்கை வைத்தியங்களும் நிறைய இருக்கு. எல்லாம் எங்க 103 வயதுவரை வாழ்ந்த எங்க ஆச்சி சொல்லிக்கொடுத்தவைகள். வேறு ஏதாவது விடுபட்டிருந்தால் நியாபகம் வந்ததும் வந்து பதிவிடறேன்.... வாங்க தோழீஸ்....... நீங்களும் பகிர்ந்துக்குங்க.......

அன்பே கடவுள். உன்னைப் போல் பிறரையும் நேசி...
ப்ரியாஅரசு.

மிக்க நன்றி. மிகவும் அருமை. எனக்கு அதிகம் தெரியாது. தினம் ஒரு நெல்லிக்காய் சாப்பிடலாம். கொட்டை வகைகள், தேங்காய், தேன் ஆகியவை சாப்பிடலாம்.

அவல் கூட நல்ல உணவுதான் (அது பாதி சமைக்கப்பட்டதாகயிருந்தாலும்.

இன்னும் இது பற்றி தெரிந்தவர்கள் வந்து பதிவிட்டால் நன்று.

நல்லெண்ணெய் குளியல் செய்ய சரியான வழிமுறை என்ன என விளக்குஙள். குழந்தைக்கு செய்வது எப்படி?

இயற்கை உணவுனு சொன்னா பழங்கள்,காய்கறிகள்,தானியங்கள்,பூக்கள் கூட தாங்க
என்னோட மாமனார் ஒரு சித்த மருத்துவர் அவருக்கு இப்போது 95 வயசு நல்ல ஆரோக்கியமா இருக்காங்க இது வரௌக்கும் மருத்துவமனைக்கு நோய்யினு போனதே இல்ல அதுக்கு காரணம் உணவு முறைகள் தான் அவங்க அனுபவத்தில கண்டதை நானும் உங்களிடம் பகிர்ந்துக்கிறேன் முதலில் பழங்கள்னா வாழைப்பழம்,மாம்பழம் கொய்யா,இதெல்லாம் ஏற்கனவே சொல்லிட்டாங்க
1.இலந்தப்பழம்_பித்தம் குறையும்,அடிக்கடி வாந்தி ஏற்படுவதை கட்டுபடுத்தும்.
2.வேப்பப் பழம்- எந்த நோயுமே பக்கித்தில அண்டாது,குறிப்பா சொல்லனுமுனா சொரி,சிரங்கு போன்ற தோல் நோய்களே வராது.
3.உலர்திராட்சை-ஏற்கனவே சொன்னாங்கலான்னு தெரியல இருந்தாலும் நானும் சொல்கிறேன் மஞ்சள்காமாலைக்கு உகந்த மருந்து.மாதவிடாய் பிரைச்சினைக்கு நல்லது.மலச்சிக்கல் வரவே வராது கால்சியம் சத்து இருக்கு எலும்பு,பற்களின் வளர்ச்சிக்கு நல்லது.
4.தேன் -
கிருமி தொற்றால் வரும் பாதிப்புக்கு தேன் நல்லது.
5.பொன்னாங்கண்ணீ- கீரை கண் நோய்க்கு சிறந்தது.உடல் வெப்பத்தை சீராக்கும் .கண்டிப்பா மாதம் ஒரு முறையாவது உணவில சேருங்க இந்த கீரை நல்ல கிடைச்சுனா வாரம் 1 முறை சேருங்க
6.தூதுவளை- சளிக்கு கண் கன்ட மருந்து,வறட்டு இருமல்,தொண்டைப்புண்,தொண்டைக்கட்டு இந்த பிரச்சினை வரவே வராது.
7.அருகம்புல்-ரத்தத்தை சுத்த படுத்தும் உடலில் உள்ள கெட்ட நீரை வெளியே அகற்றும்.
8.இஞ்சி-நம் முன்னோர்கள் காலையில் இஞ்சி கடும்பகல் சுக்கு மாலை கடுக்காய் என்றார்கள். இம்மூன்றையும் தினமும் உட்கொண்டால் நோய் என்பதே நம்மை நெருங்காது.
9.எலுமிச்சை-வாந்தி,பித்தம்,மயக்கம்,நகச்சுத்து,தாகத்தை தணிக்கும்,பசியை தூண்டும்.
10.பூக்கள்- பூக்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொறு மருத்துவ குணமுடையது தான் நான் அப்பறம் விளக்கமா சொல்கிறேன்.

முருங்ககீரை,குறிஞ்சா க்கீரை சக்கரை வியாதிக்கு நல்ல மருந்து.பிரண்டை ரத்த மூலத்துக்கு கை கண்ட மருந்து.
வெற்றிலை ஜிரண சக்தியை தூண்டும்.பூண்டு டான்சில் குறையும் மலக்கிருமிகள் நீங்கும்.
சுண்டைக்காய் சாப்பிட்டு வந்தால் கிருமி தொந்தரவு இருக்காது.கடுக்காய் வாய்ப்புண்ணுக்கு நல்லது.வாய் கொப்பளித்தால் வாய் துர்நாற்றம் இருக்காது.உடல் உள்ளையும் சரி வெளியையும் சரி மஞ்சள் பயன் படுத்தினால் கிருகிகளே அண்டாது.
இன்னும் நிறைய கேட்டு சொல்கிறேன் எதாவது சந்தேகமுன்னா கேளுங்க தோழிகளே...
மறுபடியும் வந்து தொடருவேன்......................சில மணினேரங்களில்...

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டுமே.

பச்சையாக எந்த காய் சாப்பிடுவதாக இருந்தாலும் குறைந்தது 10நிமிடமாவது உப்பும் எலுமிச்சையும் கலந்த நீரில் போட்டு பின்னர் நன்றாக கழுவிவிட்டு தோல் நீக்கியே சாப்பிட வேண்டும். தோலில் உள்ள சத்து வீணாகும்தான். ஆனால் இந்த காய்கறிகளை வளர்க்கும்போது இடப்பட்ட உரம் மற்றும் கிருமிநாசினிகளின் விஷத்தன்மை இந்த காய்கறிகளின் தோலில் இருக்கும். சத்து வீணாகுதே என்று விஷத்தை சாப்பிட முடியாதே! இல்லேன்னா வீட்டில் எவ்வித ரசாயன உரங்களும் கிருமிநாசினிகளும் பயன்படுத்தாமல் வளர்த்து உபயோகிக்கலாம். அல்லது விலை அதிகம் என்றாலும் ஆர்கானிக் காய்கறிகளை வாங்கி பயன்படுத்தலாம்.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

பூக்களும் ஒரு வகையில் இயற்கை உணவு தான்

1. ரோஜா இதழ்--வாய்ப்புண்ணுக்கு நல்லது.அவ்வபொழுது மென்று சாப்பிடுங்க.

2. தாழம்பூ-- சர்பத் செய்து 1 மாதத்திற்கு 2 முறை குடிங்க அம்மை நோய் அண்டாது.

3. வாழைப்பூ-- பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைபடுதல் குணமாகும்.

4. ஒத்த நத்தியாவட்டை-- கண்ணுக்கு குளிர்ச்சி,இரவு தூங்கும் போது கண்ணில் வைத்து தூங்குங்க கண் எரிச்சல் இருக்காது.

5. தாமரை இதழ்-- தினம் 1 சாப்பிட்டால் பேசும் திறன் அதிகரிக்கும்.

6. தென்னம் பூ-- உள் ரணம் குணமடையும்.

7.ஆவாரம்பூ-- உடலுக்கு பலம் கூடும்.

8. செம்பருத்தி பூ-- ரத்த விருத்தி அரையும்.

9. மாதுளம்பூ-- கஷாயம் வைத்து குடித்தால் வயிற்று கடுப்பு குணமாகும்.

10. வில்வப்பூ-- புளி சேர்த்து ரசம் வைத்து சாப்பிட்டால் குடல் புண் வராது.குடல் வலிமை பெறும்.

11. உலர்ந்த மாம்பூ-- சீரகத்தை சேர்த்து பொடி செய்து சக்கரை சேர்த்து சாப்பிட்டால் உஷ்ண பேதி சரியாகும்.

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டுமே.

ரொம்ப அருமையா எல்லாவற்றையும் நல்ல விளக்கமா சொல்லிட்டு வரீங்க....
நன்றி.....
எனக்கு உங்களிடம் ரெண்டு கேள்விகள் கேட்க வேண்டும்....
1 . உளர் திராட்சை மாத விடாய் பிரச்சனைக்கு நல்லதுன்னு சொல்லி இருக்கீங்க...
அதற்கு எந்த வகை உளர் திராட்சை பயன்படுத்தலாம்.... கருப்பா அல்லது வெள்ளை திராட்சையா..... அதை எப்படி உண்ண வேண்டும்.... எனக்கு ஒருவர் சொன்னார்கள் முதல் நாள் நீரில் ஊற வைத்து மறுநாள் காலையில் அந்த நீருடன் சேர்த்து திராட்சை சாப்பிட வேண்டும் என்று..... இது சரியா அல்லது வெறுமனே சாப்பிடலாமா?

2 . அசிடிட்டி பிரச்சனைக்கு ஏதாவது நல்ல தீர்வு இருந்தால் சொல்லுங்கள்....

ஹாய் தீபா
உலர் திராட்சை கலர் வேறு பட்டிருந்தாலும் சத்துக்கள் ஒன்னு தான் பா.எது வேண்டுமானாலும் பயன்படுத்துங்க இதில் இருக்கின்ற சத்துக்கள்

சுக்ரோஸ்,ப்ரக்டோசும் இருக்கு.வைட்டமின்களும்,அமினோ அமிலங்களும் காணப்படுகின்றன.பொட்டாசியம்,மெக்னீசியம் இருக்கு.அமிலத் தொந்தரவுகளே வராது.முக்கியமா ரத்த சோகையே பக்கித்தில அண்டாது.

நீங்க சொன்னது போலவும் சாப்பிடலாம் இரவில ஊற வைத்து,
உலர் திராட்சை பழத்தை வெது வெதுப்பான நீரில அரை மணி நேரம் ஊற வைத்து காலையில வெறும் வயிற்றில அருந்தினால் மாதவிடாய் கோளாறுகள், இதய நோய் தீரும்.மாதவிலக்கு சமயத்தில் வயிறு,மார்பு,விலா,முதுகு பக்கங்களில் வலி ஏற்படும். இதை தடுக்க 20 பழங்களை எடுத்து ஒரு சட்டியில போட்டு ஆழாக்கு தண்ணிரில் 1 ஸ்பூன் சோம்பு சேர்த்து கசாயம் செய்து 3 நாள்களுக்கு 2 வேளை சாப்பிட்டு வாங்க மாதவிடாய் பிரச்சினையே வரவே வராது. இது என் அனுபவத்தில் கண்ட உண்மை.....

அசிடிட்டிக்கு உணவுல அதிகமா பூண்டு சேருங்க.
வாயு தொல்லைக்கு வேப்பம் பூவை உலர்த்தி பொடி செய்து 1 ஸ்பூன் வெந்நிரில் போட்டு குடித்தால் வாயு தொல்லை இருக்காது. ஆறாத வயிற்று புண்ணும் ஆறி விடும்.
அஜீரணம்- 1 டம்ளர் தண்ணிரில் கருவேப்பிலை சிறு துண்டு இஞ்சி,சீரகம் 1 ஸ்பூன் மூன்றையும் சேர்த்து நல்லா கொதிக்க விட்டு ஆற விட்டு வடிகட்டி குடிங்க அஜிரண கோளாறு வராது.

நெஞ்சு எரிச்சல்--- சீரகத்துடன் வெல்லம் கொஞ்சம் சேர்த்து சிறிய நெல்லிக்காய் அளவு தினமும் சாப்பிட்டு வாங்க சரியாகிரும்...

தீபா சிலரோட பழக்கமே 4 அல்லது 5 நாள் செய்து பார்த்துட்டு விட்டுருவாங்க அப்படி செய்தால் எல்லாம் கேட்காது தொடர்ந்து 1 மாதமாவது ஃபாலோ பண்ணுங்க கண்டிப்பா சரியாகிரும்.

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டுமே.

மேலும் சில பதிவுகள்