Please Help Me ..................

எங்களுக்கு கல்யாணம் ஆகி 10 வருடங்கள் ஆகி விட்டன, இன்னும் குழந்தை இல்லை. நான் அதற்கு எடுத்துக் கொண்டிருக்கிறேன், ஆனால் நான் கேட்பது அது அல்ல. இதை டாக்டரிடம் கேட்க கூச்சமாக இருக்கிறது, நாங்கள் எப்பொழுது சேர்ந்திருக்க வேண்டும்? சேர்ந்த பிறகு எவ்வளவு நேரம் காலை தூக்கி வைத்துக் கொண்டிருக்க வேண்டும்? ஏனென்றால் எனக்கு நான் 2மணி நேரம் காலைத் தூக்கிக் கொண்டிருந்தாலும் ஆகி விடுகிறது. காலையில் எழுந்து வேலை செய்ய ஆரம்பித்தாலும் உயிறணூ ஆகி விடுகிறது, சேர்ந்த பிறகு என்னமாதிரி வேலை நான் செய்யலாம்? என்னமாதிரி வேலை நான் செய்யக்கூடாது? என்பதை தெளிவு படுத்தினால் நலமாக இருக்கும். உங்களுக்கு நன்றிக்கடன் பட்டவளாக இருப்பேன். இதைப்பற்றி இன்னும் சாரியான தகவல் கிடைத்தால் நலமாக இருக்கும், எனக்கு குழந்தை பாக்கியக் கிடைப்பது உங்களின் பதிலில் தான் இருக்கிறதி. நன்றி

எழுதினதில் எதெதுவோ வார்த்தைகள் மிஸ் ஆன மாதிரி இருக்கு..இருந்தாலும் எனக்கு புரியுது.
இங்கு பப்லிக் ஃபோரத்தில் முழுமையாக எழுத எனக்கும் கூச்சமாக உள்ளது..இருந்தாலும் ஓரளவு எழுதுகிறேன்.
அதற்கு மேலும் சந்தேகம் இருந்தால் உங்கள் கைனகாலஜிஸ்டிடம் சொல்லுங்கள் நிறிய அதனை குறித்த சந்தேகம் உள்ளதென்று அதனை கேட கூச்சம் என்று..அவர் இதற்கென்றே உள்ள ப்ரத்யேக மருத்துவரிடம் ரெஃபெர் பன்னுவார்...அங்கு உங்களுக்கு கூச்சமெல்லாம் வராத அளவுக்கு தெளிவாக எல்லாம் விளங்க வைப்பார்கள்..சில சமயாம் இது பற்றின சரியான விழிப்புணர்வு இல்லாதது கூட கருத்தரிப்பு தள்ளிப் போக காரணமாகும்
கருத்தரிப்புக்கு உகந்த சமயம் மாதவிலக்கு முடிந்த முதல் 2 வாரம் என்று நினைக்கிறேன்..சரியாக தெரியவில்லை.
நீங்கள் காலை தூக்கிக் கொண்டாலாம் இருக்க தேவையில்லை..எல்லோருக்குமே மீதி ஸ்பேர்ம் வெளியே வர தான் செய்யும்..நீங்கள் ஒரு 30 நிமிடம் இடுப்பின் கீழ் தலையணை வைத்து படுங்கள் போதும்..இன்னும் விளக்கமாக வேண்டுமென்றால் நான் சொன்னது போல் கூச்சப்படாமல் மருத்துவரிடம் பேசுங்கள்..
அது முடிந்து நீங்கள் அடுத்த நாள் காலை என்ன வேலை வேண்டுமானாலும் செய்யலாம்.

Rajasentha நலமா இருக்கிங்கலாப்பா? உங்கலுக்கு ரெகுலர் பீரியஸ்சா இல்லை இர் ரெகுலர் பீரியஸ்சா என முதலில் டாக்டரிடம் தெரிவித்து இருப்பிர்கள். டீட்மட் எடுத்து இருந்தாள் கட்டாயம் டாக்டர் செல்லி இருப்பார் கரு முட்டை எப்போது வருகிரதே அப்போது ஜாயின் பன்ன செல்லி இருப்பார். உங்கள் விருப்பம் போல் எப்பேது வேண்டுமானாலும் ஜாயின் பன்னலாம். டாக்டர் செல்லும் தேதியில் கட்டயம் சேர்ந்தே இருங்கள்பா. நிங்கள் சேர்ந்த பிறகு 1/2 மணி நேரம் இடுப்பு கீழே தலையனை வைத்து அசையாமல் இருக்கவும். பிறகு நார்மலாக இருக்கலாம். உடனேவும் போய் கீலின் பன்னக்கூடாதுப்பா........
ஒருவருக்கு தேவை 1 (அ) 2 மட்டும் தான். அதனால் வெளியே வருவதி என்னி கவலை வேண்டாம்ப்பா......

நீங்கள் நார்மலாக எல்லா வேலையும் செய்யலாம். பீரிய்ட்ஸ்க்கு 1 வாரம் முன்னாடி ஜாயின் பன்னாம , வீட்டு வேலையை குரைச்சுகனும். அப்பத்துல இருந்து நல்ல ரெஸ்ட் எடுத்துக்கேங்கப்ப....

நீங்கள் மட்டும் இல்லை அதிகமானேர் இப்படி இருக்கிரார்கள்ப்பா...... முதலில் மனதை ரிலாக்சாக வைத்து இருங்கள். எல்லம் நல்லதே நடக்கும்.

உங்கலுக்கு குழந்தை வரம் கிடைக்கா நான் நமது தோழிகலும் இரைவனை வேண்டிக் கொள்கிரேம்.

இன்னும் அதிகமான தோழிகலும் ஆலேசனை தருவார்கள்.

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*

நிங்கள் எப்படி உள்ளிர்கள்? என்க்கு தெரிந்தவையை எளுதுகிறன். நிங்கள் உங்களுடை பிரியட் வந்து 14 நாங்கவது நாள் அல்லது 15 வது நாள் ஒன்றாக இருக்க வேண்டும். மற்றும் தோளிகள் சொல்லுவது போல் தலகனையை கிலஆஇ வைத்து 1/2 மணி நேரம் படுக்க வேண்டும். நிங்கள் எப்போதும் மனதை சந்தோசமக வைத்து இருக்கவும். பிளையாக எளுதி இருந்தால் மன்னிக்கவும். நன்றி.

k.nanthiny

வணக்கம் rajesentha எப்படி இருக்ரீர்கள்? உங்களைப் போல் தான் எனக்கும் 5 வருடம் குழ்ந்தை இல்லை இப்பொது 8 மாதம் கர்பமா இருக்றேன் என்க்கு இதை பற்றி சரியா தெரியாது டொக்ரர் எனக்கு சொன்னவற்ரை எலுதுகிரேன். மற்ற தோழிகள் சொன்னது போல் தலையணையை இடுப்புக்கு கிழே வைக்கலாம். ஆனால் நீங்கள் எலும்பி இருந்து தலையணை எடுக்க வேண்டாம் முதலே அதை எடுத்து தயாரக வைத்துக் கொள்ளுங்கள்.காலை எல்லம் தூக்கி வைக்க தேவை இல்லை. நீங்கள் குளிக்கும் போது சவரால் உங்கள் உருப்புகளுக்கு தண்ணீர் அடிக்க வேண்டாம் நீங்கள் அப்படி செய்தால் உயிரணுக்கள் வெளியே வந்து விடும்.நீங்கள் இருவரும் இணையும் போது இரண்டு பேருக்கும் விருப்பம் இருக்க வேண்டும். குழ்ந்தைக்காக மட்டுமே நீங்கள் இணையாமல் ஒருவருக்கு ஒருவர் அன்பும் ஆசையும் இருக்க வேண்டும்.உங்கள் கணவருக்கு பாதம்பால் கொடுங்கள் தினமும் இரவில். நீங்கலும் குடிக்கலாம்.பாதாம் பாலுக்கு சர்கரை பாவிக்க வேன்டாம்.இது எல்லாம் எனக்கு டொக்ரர் சொன்னவை தான். கர்பினிகலுக்கு என்று இப்போது விற்றமின் tablet கடைகளில் வாங்கலாம். உங்கள் டொக்ரரிடம் கேட்டு அதை பாவியுங்கள்.

உஙலுக்கு விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்க நானும் கடவுலை வேண்டிக் கொள்கிறேஎன்

அன்புடன்
துஷி

எனக்கு கொஞ்சம் தெளிவு கிடைத்தது, நன்றி. உங்களுக்குத் தெரிந்த விஷயத்தை எனக்கு தெளீவு படுத்தியதற்கு நன்றி. இனியும் ஏதும் இதைப் பற்றி தெரிந்தால் எனக்கு தெரிவிக்கவும். மீண்டு நன்றி.

senthamilselvi

நன்றி உங்கள் கருத்துக்கு நன்றி இந்த சைட்டை கண்டுபிடித்ததில் எனக்கு ஒரு வரப்பிரசாதம் தான், ஒருவருக்கு தெரிந்ததை மர்றவர்களுடன் பகிர்ந்து கொள்கிறோம். மேலும் தெரிந்ததை எனக்கு சிரமம் பார்க்காமல் சொல்லித்தர வேண்டுகிறேன். ரொம்ப நன்றி.

senthamilselvi

நன்றி நந்தினி உங்கள் கருத்துக்கு நன்றி மேலும் தெரிந்ததை எனக்கு சிரமம் பார்க்காமல் சொல்லித்தர வேண்டுகிறேன். ரொம்ப நன்றி.

senthamilselvi

வணக்கம் துஷி, நீங்கள் சொன்ன நிறைய விஷயங்கள் எனக்கு புதிது. இதை இனிமேல் ஃபாலோ பண்ணுவேன். உங்களுக்கு ரொம்ப நன்றிப்பா, இது போல் உங்களுக்கு தெரிந்த கருத்துக்களை எனக்குத் தெரியப்படுத்தினால் நான் மிகவு நன்று உள்லவளாக இருப்பேன், மீண்டும் நன்றி

senthamilselvi

If you have regular periods, try from 10th day after start of periods until 20-22nd day,alternate days try pannunga(ie day 10,12,14 & so on...or if it's on day 11, then it's day 13,15 etc)... chances to conceive will increase if u try this way...

If u have shorter than 28 days menstural cycle, u might have to start earlier than 10th day...

Gud luk...:)

செல்வி உங்களூக்கு திருமணமாகி 10 வருடம் என்பது கணக்கல்ல.குழந்தைக்கு முயற்சி செய்து 10வருடம் ஆகிவிட்டதா?
நீங்கள் ஒன்றுசேரவேண்டிய தினங்களில் உள்ள சிறிய தவறு 10 வருடமாக நீங்காமல் [சரிவராமல்]இருக்க வாய்ப்பு மிகக்குறைவு.
நீங்கள் றீட்மண்ட் எடுத்துக்கொண்டு இருப்பவராக இரு ந்தால் நிச்சயமாக நீங்கள் சேர்ந்திருக்க வேண்டிய நாளை நீங்களே தேடிக்கொண்டிருக்க வேண்டிய அவசியம் இல்லை.
இது follicle monitoring மூலம் கண்டுபிடிக்கப்பட்டு உங்கள் டாக்டரால் உங்களுக்குரிய வாய்ப்பை ஏற்படுத்தும் நாட்கள் பரிந்துரைக்கப்படும்.

கருவுறுவதற்கு தேவையான ஸ்பேம் ஆகக்கூடியது சுறுசுறுப்பான 3 அணு .ஆனால் வெளியேற்றப்படும் விந்துகளின் எண்ணிக்கை: 40 முதல் 600 மில்லியன் .இதில் சில 5நாட்கள் வரை கருமுட்டைக்காக காத்திருக்கும் மீதி வேளியேறித்தான் ஆகும்.

நிறைய கேள்விகளை மனதில் வைத்து சந்தேகப்பட்டுக்கொண்டு இருப்பது இந்த விடயத்தில் ஆரோக்கியமானது அல்ல.அதனால் நிறைய புத்தகங்கள் வாசியுங்கள்.எனக்குத் திருமணமாகி 6 மாதங்களின் பின் குழந்தைக்கு முயற்சி செய்யத்தொடங்கியதும் ஏகப்பட்ட சந்தேகங்கள்.அன்றிலிருந்து நான் அதிகம் வாசிக்கத்தொடங்கிய புத்தகங்கள் நெட்டில் அதிகம் தேடியவைகள் இது சம்மந்தப்பட்டவைகள்தான்.இங்கு ஒரு டாக்டருக்கு என்னைக்கண்டாலே பிடிக்காது.அவ்ரோ எதையாவது மறந்துவிடுவார் .நானோ அவருக்கு முன்னமே மாத்திரையின் பெயரையும் அடுத்த ட்றீட்மண்ட் ஸ்டெப் ஐயும் எடுத்து விட்டுவிடுவேன்.ஏன் இதை சொல்கிறேன் என்றால் அவ்வளவு விஷயம் கொட்டிக்கிடக்கிறது இதுபற்றி.தயவு செய்து மனதுக்குள் வைத்திருந்து பட படப்பை ஏற்படுத்தாமல் சந்தேகங்களை தீர்த்துக்கொள்ளுங்கள்.இங்கு நீங்கள் தாராளமாக மனம்விட்டுப்பேசலாம்.
இன்னும் சந்தேகம் இருந்தால் கேளுங்கோ.

நீங்கள் விரைவில் தாயாகி அந்த நல்ல சேதியை எங்களுடன் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று உங்களுக்கா பிரார்த்திக்கிறேன்.கவலைப்படவேண்டாம்.

சுரேஜினி

மேலும் சில பதிவுகள்