ப்ரெட் குழியில் முட்டை(குழந்தைகளுக்கு)

தேதி: March 13, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 4 (1 vote)

இந்த குறிப்பினை <b> திருமதி. கீதா ஆச்சல் </b> அவர்கள் அறுசுவை நேயர்களுக்காக வழங்கியுள்ளார். இவரது பெரும்பாலான குறிப்புகள் குழந்தைகளுக்கான, மிக எளிதில் தயாரிக்கக்கூடிய உணவுக்குறிப்புகளாக இருக்கும்.

 

ப்ரெட் துண்டுகள் – 4
முட்டை – 2
பட்டர் அல்லது நெய் - 2 மேசைக்கரண்டி
உப்பு – அரை தேக்கரண்டி
மிளகு தூள் – அரை தேக்கரண்டி


 

ப்ரெட் முட்டை செய்ய மேலே குறிப்பிட்டுள்ள தேவையானவற்றை எடுத்து வைத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி அதனுடன் மிளகு தூள் மற்றும் உப்பு சேர்த்து கலந்துக் கொள்ளவும்.
ப்ரெட் துண்டுகளை எடுத்துக் கொண்டு அதன் நடுவில் வட்டவடிவமாக வெட்டிக் கொள்ளவும். (குக்கீ கட்டர் அல்லது டிப்பன் பாக்ஸ் மேல் மூடி வைத்து வெட்டி விடவும்)
தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடுப்படுத்தி அதில் வெட்டி வைத்துள்ள ப்ரெட் துண்டுகளை வைக்கவும்.
அந்த ப்ரெட் துண்டுகளின் நடுவில் உள்ள ஓட்டையில் சிறிது பட்டரினை ஊற்றி அதன் மேல் அடித்து வைத்திருக்கும் முட்டையினை ஊற்றவும்.
ஒரு புறம் வெந்ததும் திருப்பி போட்டு மற்றொரு புறமும் வெந்ததும் எடுத்து விடவும்.
சுவையான ப்ரெட் குழியில் முட்டை ரெடி. ப்ரெடின் நடுவில் ஒட்டை போட்டு அதில் முட்டையினை ஊற்றி வேக வைப்பதால் மிகவும் வித்தியாசமாக இருக்கும். குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

lakshmi ravindran
i know this bread amlet, but i dont know we will make this much beautiful presentation,you are a good creator,

lakshmi ravindran

நல்ல ஆரோக்கியமான creativity.சூப்பர்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

அக்கா என் பையன் இதை விரும்பி சாப்பிட்டான். உடனே பின்னூட்டம் அனுப்பலாம் என்றால் நெட் பிராப்ளம். அதான் இப்ப பார்த்தவுடன் பின்னூட்டம் அனுப்புகிறேன். காலையில் சீக்கிரமாக பள்ளிக்கு செல்லும் என் பையன் போன்ற குழந்தைகளுக்கு துரிதமாக செய்யக்கூடிய, சத்தான உணவு குறிப்பு கொடுத்தமைக்கு மிகவும் நன்றி அக்கா.

கீதா
ரொம்ப நல்லா இருக்கு,உங்க குறிப்புல இந்த ரெசிப்பி கொடுத்திருந்த போது,பிரட்குழியில் முட்டைன்னு இருந்தவுடனே,இதுக்குனுன் குழியா பாத்திரம் இருக்குபோலனு நினைச்சு அந்த ரெசிப்பிய பார்க்காமலேயே விட்டுட்டேன்ஹி ஹி ஹி.

அரசி உங்களுக்கு ஸ்கூலுக்கு போற அளவுக்கு பையன் இருக்கா?
அக்காஆஆ?????????

லக்ஷ்மி,ஆசியா அக்கா
மிகவும் நன்றி .
செய்து பாருங்கள். குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.
அன்புடன்,
கீதா ஆச்சல்

அரசி,
மிகவும் நன்றி .
உங்கள் மகனிற்கு பிடித்து இருந்தது என்பதில் மிகவும் மகிழ்ச்சி.
குழந்தைகளுக்கு இப்படி டிப்பரண்டாக செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.
அன்புடன்,
கீதா ஆச்சல்

கவி,
மிகவும் நன்றி .
இப்பொழுது தான் பா பின்னுட்டம் பார்த்தேன். கண்டிப்பாக செய்து பாருங்கள்.
உங்கள் மகன் எப்படி இருக்காங்க?
இருந்தாலும் உங்களுக்கு மிகவும் குசும்பு தான் பா…( எதோ என்னை அரசி அக்கா என்றி சொல்லிவிட்டாங்க..அதுக்கு போயி இப்படியா…)
அன்புடன்,
கீதா ஆச்சல்