வாழைக்காய் வறுவல்

தேதி: March 13, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 2.2 (5 votes)

 

பெரிய வாழைக்காய்-1
பொடியாக அரிந்த தக்காளி-1
பொடியாக அரிந்த சின்ன வெங்க்காயம்-10
தேங்காய்ப்பால்- கால் மேசைக்கரண்டி
சோம்புத்தூள்- அரை ஸ்பூன்
மிளகாய்த்தூள்- ஒன்றரை ஸ்பூன்
தேவையான உப்பு
எண்ணெய்- 3 மேசைக்கரண்டி
மஞ்சள் தூள்- 1/2 ஸ்பூன்
கொத்தமல்லி இலை- கால் கப்


 

வாணலியில் எண்ணெய் ஊற்றவும். சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும். பிறகு தக்காளி சேர்த்து மஞ்சள் தூள் சேர்த்து குழைய வதக்கவும். வாழைக்காயை துண்டுகளாய் அரிந்து சேர்க்கவும். மிளகாய்த்தூள் சேர்த்து உப்பு சேர்த்து சிறு தீயில் வறுக்கவும். தேங்காய்ப்பால், சோம்புத்தூள் சேர்த்து வதக்கவும். இறுதியாக கொத்தமல்லி இலை சேர்த்து வதக்கி காய் வெந்ததும் இறக்கவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

இந்த வாழைக்காய வறுவலினை இன்று செய்தேன். மிக்வும் சூப்பராக இருந்தது… என்னுடைய மாமியார் வீட்டிலும் வாழைக்காய் வறுவலினை சோம்பு சேர்த்து செய்வார்கள் என்று என் கணவர் அடிக்கடி கூறுவார்…ஆனால் இது நாள் வரை அப்படி செய்தது இல்லை. மிகவும் அருமையாக இருக்கு.
கண்டிப்பாக என்னுடைய ஹஸ் விரும்பி சாப்பிடுவார் என்பதில் சிறிதும் சந்தேகம் இல்லை. பல நாட்களாக தேடி கொண்டு இருந்த குறிப்பு இது..முகப்பிலேயே இருக்கு ..ஆனால் நான் தான் இதனை கவனிக்கவில்லை.

அன்புடன்,
கீதா ஆச்சல்

அன்புள்ள கீதா!

வாழைக்காய் வறுவல் சூப்பராக இருந்தது என எழுதியிருப்பது மகிழ்வைத் தந்தது. இந்த தடவை ஊரில் இருந்தபோது என் சினேகிதியுடன் சமையலறையில் நானாகவே செய்தது. ருசி மிகவும் பிடித்துப்போனதால் அறுசுவையில் பதிவு செய்தேன். உங்களின் அன்புப் பின்னூட்டத்திற்கு மறுபடியும் என் நன்றி!!

மனோ மேடம் உங்க வாழைக்காய் வறுவல் செய்தேன்,வித்தியாசமான சுவையா இருந்தது,வழக்கமாக வாழைக்காய் வறுவல்,இப்படி செய்யமாட்டேன்,நன்றாக இருந்தது நன்றி.

அன்புள்ள கவி!

வாழைக்காய் வறுவலுக்கு அன்பான பின்னூட்டமளித்த உங்களுக்கு என் அன்பு நன்றி!!

இந்த குறிப்பினைப் பார்த்து திருமதி. அதிரா அவர்கள் தயாரித்த வாழைக்காய் வறுவலின் படம்

<img src="files/pictures/aa207.jpg" alt="picture" />

அன்புள்ள அதிரா!

வாழைக்காய் வறுவல் உண்மையிலேயே அழகான பொன்னிறமாய் இருக்கிறது! புகைப்படம் எடுத்து அனுப்பியதற்கு என் நன்றி!!

மனோ மேடம் உங்க வாழைக்காய் வறுவல் செய்தேன்,வித்தியாசமான சுவையாக இருந்தது,நன்றி.