வாங்கப்பா ஜாலியா அரட்டை அடிக்கலாம் பாகம் 62

எல்லோரும் வாங்க ஜாலியாக அரட்டை அடிக்க.

தனிஷா

நலமா? நாங்க ரொம்ப நல்லா இருக்கோம். பு வா ஹா வா ஹா எனக்கு ரொம்ப பிடிக்கும். நீங்க நேர்ல வந்து மனசு விட்டு சிரிச்சு பேசறமாதிரி இருக்கு. ச்சோ ஸ்வீட்!

ம்ம் அனுப்புங்க சாய்..சூப்பர்.நான் உங்களுக்கு பாப்பா போட்டோ அனுப்பறேன் ஒகே வ???

வினு

வினு

நாங்க அனைவரும் நல்லா இருக்கோங்க்கா. நீங்க உடம்பை பாத்துக்குங்க. மேனு மெயில் அனுப்பி ஸ்கூல் விஷயமா நீங்க சொன்னதா சொன்னாங்க.
இது விஷயமா நான் உங்களூக்கு மெயில் அனுப்பறேன். விக்னேஷிற்கு இப்பதான் ஆனுவல் எக்ஸாம்ஸ் நடந்திட்டு இருக்கு.
ஒருவழியா குறிஞ்ச இலை கண்டுபிடிச்சாச்சுன்னு நினைச்சா, மறுபடியும் அது பச்சை பசலையா? வெற்றிலையான்னு ஒரு டவுட் வந்திருக்கு. பாக்க வெத்தலை மாதிரிதான் தோணுது. என்ன கொடுமை செல்விக்கா இது?!!!
நம்ம ஊர் புகழ் வெத்தலைக்கா இவ்வளவு பாடுபட்டோம்னு சிரிப்பா இருக்கு.
ஓக்கேக்கா! உடமபினை கவனிச்சுக்குங்க! மெயில் அனுப்பறேன்.!

ஆகா இமா வெத்தலை சுண்ணாம்பு பாக்குன்னு சொல்லிட்டீங்களே இப்ப இப்ப வே நாக்கு சிவக்க போடனும் போல் இருக்கு.
ஜலீலா

Jaleelakamal

ஹாய் எல்லாருக்கும்.

எல்லோருக்கும் குட் ஈவினிங் அல்லது குட்மார்னிங்.

விசாரிச்சவங்களுக்கு- நான் நலம். நன்றி.

ஜலீலாக்கா, இங்கேயும் சன்னா-பட்டூராதான். சோடா உப்பு போடாம பட்டூரா ரெஸிப்பி இருக்குதான்னு தேடிகிட்டே இருக்கேன்.

குறிஞ்சா இலை அலையஸ் வெத்திலை விவாதம் ரசிக்கும்படியா போயிட்டிருக்கு. அதிரா, நீங்க வந்தாலும் சரி, ரெஸிப்பி தந்தாலும் சரி, விறுவிறுப்புதான்.

ஸ்டிரிக்ட் டயட்ல இருகிறதால, வெஜ் ரெஸிப்பிஸ் தேடி அறுசுவை வந்த நான், இப்போ பழையபடி விதவிதமா சமைக்க ஆரம்பிச்சு வெயிட் கூடிட்டு இருக்கேன்.

ஓகேப்பா, குட்நைட் .

63 தொடங்கியாச்சு அங்க வாங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஜலீலா,
போச்சுடா! நீங்களும் நான் சொன்னதை நம்பீட்டீங்களா? (குயினைன் - மலேரியாக் குளிசை)

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்