வாங்கப்பா ஜாலியா அரட்டை அடிக்கலாம் பாகம் 62

எல்லோரும் வாங்க ஜாலியாக அரட்டை அடிக்க.

தனிஷா

ஹாய் தோழிஸ் எல்லோரும் எப்படி இருக்கிங்க?

அனைவரும் நலம் தாங்கள் எப்படி இருக்கீங்க

என்றும் உங்கள் நினைவில்
சோனியா

அந்த ஆள் பறித்த பழத்தின் எண்ணிக்கை -128
செல்வி

சவுதி செல்வி

ஜெயலஷ்மி ஹரி சிஸ்டத்தை உங்ககிட்ட விட்டாச்சா? என்ன பண்றாங்க 2 பேரும்.

ஹாய் சோனியா எப்படி இருக்கீங்க(நீங்க சொக்க வைக்கும் சோனியாவா?)

மேலே,போன பதிவில் விசாரித்த அனைத்து தோழிகளுக்கும் நன்றி நானும் சாமும் நலமே.
எல்லா தோழிகளும் எப்படி இருக்கீங்க.

ஹாய் சோனியா எப்படி இருக்கிங்க?நாங்க நலம் பா

ஹாய் கவி ஆமாம் பா ஹரி என் மொபைல் வச்சிட்டு விளையாடுறான் பா.

ராதை படிக்கிறாப்பா

சாம் என்ன பண்ரார்? வேலைலாம் முடிச்சிடீங்களா?

நானும் சமையல் வேலை எல்லாம் முடிச்சிடேன் பா.இப்போ கொஞ்ஜம் freeதான் பா.

வேலை ஓரளவுக்கு முடிஞ்சிடுச்சு.இன்னும் கொஞ்சம் பாக்கி இருக்கு. சாம் தூங்கறான்,அதுக்குள்ள வந்து அறுசுவைய எட்டி பார்த்துட்டு போகலாம்னு வந்தேன்.

இலா நான் பார்த்தப்ப நீங்க ஆன்லைனில் இல்லை அதான் நான் சரி இன்னொரு நாள் உங்க கூட பேசலாம் என்று வந்துவிட்டேன்.என்ன நேத்து புளிசாதமா உங்க வீட்டில்?எனக்கு ரொம்ப பிடிக்கும் இனி நீங்க செய்யும் பொழுதெல்லாம் எனக்கு ஒரு பார்சல் அனுப்பிடுங்க ஒகே
வின்னி இந்த லொள்ளு தானே வேணங்கறது(நான் அழுதுருவேன்).இந்தியா பயணம் முடிந்து நான் லண்டன் வந்து ஒரு மாதத்திற்கும் மேல் ஆகிவிட்டது.உங்க பேர் தான் வானதியா?தப்பா கேட்டிருந்தா மன்னித்து விடுங்க.
இமா போன பதிவில் என்னை விசாரித்து இருந்தீர்கள்.நான் நலமே.ரொம்ப நன்றி உங்க விசாரிப்புக்கு
சாய்கீதா உங்கள் நலம்றிந்து மகிழ்ந்தேன்.என் பெயர் பிரதீபா.நானும் என்னவரும் லண்டனில் இருக்கோம்.நான் இங்க ஒரு சூப்பர் மார்க்கெட்டில் வேலை பாக்கறேன்.எங்க இருவரின் ஊரும் திருச்சி.அவ்வளவு தான் என்னை பற்றி.உங்களை பற்றி தெரிந்து கொள்ளலாமா?
அன்புடன் பிரதீபா

எப்படி கரெக்டா சொன்னிக நீங்க சொன்னது சரிதான், எப்படி கொண்டு பிடிதிங்க . உங்க பரிசு உங்க mail சொல்லுங்க அனுப்பி வைக படும் . உங்க அறிவை நினைகில் புல் அரிக்குது ப.

என்றும் உங்கள் நினைவில்
சோனியா

நான் சொக்க வைக்கிற சோனியா இல்ல, வெறும் சோனியா தன் நீங்க எப்படி இருக்கீங்க

என்றும் உங்கள் நினைவில்
சோனியா

மேலும் சில பதிவுகள்