வாங்கப்பா ஜாலியா அரட்டை அடிக்கலாம் பாகம் 62

எல்லோரும் வாங்க ஜாலியாக அரட்டை அடிக்க.

தனிஷா

நேரம் தவறாமல் sms அனுப்புவது எனது நேரத்தை கழிப்பதற்கு அல்ல சில மணி துளிகள் என்னை நீங்கள் நினைப்பதற்கு

என்றும் உங்கள் நினைவில்
சோனியா

தலைப்பு கொடுக்கும்போது தயவுசெய்து வார்த்தைகளுக்கு நடுவில் இடைவெளி விடுங்கள். ஒவ்வொரு வார்த்தைக்கும் ஒரு ஸ்பேஸ் விடுங்கள்.

அறுசுவை விதி: 362
57 வது முறை நினைவுறுத்தப்படுகின்றது.

ஹாய் நான் சோனியா நான் சரியாக எழுதுறேன்னா தயவு குர்நது சொல்லுங்க ஏதாவது தவறாக இருந்தால் மன்னிக்கவும்

என்றும் உங்கள் நினைவில்
சோனியா

நீங்கள் எழுதியதில் தவறு எதுவும் இல்லை. :-)

சில பதிவுகளுக்கு முன்பு ஒரு தலைப்பு இடைவெளி இல்லாமல் இருந்தது. அது டெம்ப்லேட்டை பாதிப்பதால் மீண்டும் ஒருமுறை அனைவருக்கும் பொதுவாக அதனை நினைவுறுத்தினேன்.

அருண் போன பதிவில் நீங்கள் கேட்டதற்கு இப்ப பதில், ஏன்னா, எப்பொழுதும் வெள்ளியன்று கொஞ்சம் வேலை அதிகம். பொண்ணு இருந்திருந்தா அம்மா பாவம்னு உதவி பண்ணும், இங்கயும் அருண் மாதிரியே அம்மாகிட்ட எடக்கு பேசுற பாஸ்கர் தான் இருக்கிறார். சரி புலம்பல் போது என்ன சமைச்சீங்கனு????? கேக்கறது காதுல விழுது, ம்ம்ம்ம்....சொல்றசொல்ற. இன்னைக்கு காலையில் சேமியா உப்புமா, சட்னி. மதியம் மிக்ஸ்டு வெஜிடபிள் சாம்பார், (ஒரு காய் மட்டும் போடுறதவிட நாலஞ்சு காய்கறிகள் சேர்த்து போட்டா பாஸ்கருக்கு ரொம்ப இஷ்டம்) தக்காளி ரசம், கீரைக்கூட்டு, உருளைக்கிழங்கு ஃப்ரை, அப்பளம். டின்னர், ஃப்ரெண்டு வீட்டிற்கு கிளம்பனும், ஏதாவது ஒன்னு சமைச்சு எடுத்துட்டுப் போகனும். அவங்க இலங்கையைச் சேர்ந்தவங்க, நம்ம சமையல் நல்லா வடிவா எஞ்சாய் பண்ணுவாங்க. பிற பின்.

அன்புடன்:-).......
உத்தமி:-)

சுஸ்ரீ உங்களுக்கும், உங்கள் கணவருக்கும் அட்வான்ஸ் திருமணநாள் நல்வாழ்த்துக்கள். நாளைக்கு ஸ்வீட் செய்து அனுப்புறேம்ப்பா.

பிரதீபா எப்படியிருக்கீங்கப்பா. முந்திய பதிவில் என்னை விசாரித்திருந்தீர்கள், பாஸ்கர் பெயரையும் குறிப்பிட்டிருந்தீர்கள், பார்த்ததும் ஆச்சரியம்!!!! கலந்த சந்தோஷமாக இருந்தது, மிக்க நன்றிப்பா. :-) நாங்கள் நலம். உங்களோடு இப்பொழுதுதான் முதல்முறையாகப் பேசினாலும், நான் அறுசுவைக்கு அறிமுகமான புதிதிலேயே உங்கள் பெயர் எனக்கு அறிமுகமாகிவிட்டது. இந்தியாவில் எங்கள் வீட்டிற்கு எதிர் வீட்டில் பிரதீபா என்று ஒரு அக்கா இருந்தார்கள். அவர் டாக்டர், உங்கள் பெயரைப் பார்த்தவுடனே அவராகயிருக்குமோனு, ப்ரொஃபைல் ஓபன் பண்ணி பார்க்கும் போதுதான் நீங்கள் லண்டனில் இருப்பது தெரிந்தது. அந்த அக்கா திருமணத்திற்குப்பின் சென்னையிலிருக்கிறார்கள். அவங்க ஹஸ்ஸூம் டாக்டர், சென்னையில் க்ளீனிக் வைத்து அவங்க அங்கேயே செட்டில்டு. உங்கள் பெயரைப் பார்க்கும் போதெல்லாம் அவங்க முகம் ஞாபகப் வரும். அப்பப்பா, இது சொல்றதுக்கா இவ்வளவு பில்டப்புனு நீங்க சொல்றது காதில் விழுதுப்பா:-) டேக் கேர் பிற பின்.

தோழிகளே அனைவரும் நலமா? தனித்தனியாக விசாரிக்கலைனு (வனிதா, உங்களுக்கும் சேர்த்துத்தான்)கோவிச்சுக்காதீங்கப்பா, ஃப்ரெண்டு வீட்டிற்கு டின்னருக்கு போகனும், நானும் ஏதாவது ஒரு அயிட்டம் சமைத்து எடுத்துச் செல்ல வேண்டும், நேரமாகிவிட்டது திங்களன்று சந்திக்கும் வரை வணக்கம் கூறி விடைபெறுகிறேன். :-)

அன்புடன்:-).......
உத்தமி:-)

சாதிக்க நினைபவன் மட்டுமே அதிகமாக சோதிக்க படுகிறான்
பிறரை அதிகமாக நேசிபவன் மட்டுமே ஒரு சிலரால் அதிகமாய் காய படுகிறான்

என்றும் உங்கள் நினைவில்
சோனியா

நல்ல அழகான கவிதை தெரிந்தால் சொல்ல்கள்

அன்புடன் சோனியா

என்றும் உங்கள் நினைவில்
சோனியா

நிலாவ்டு ஒப்பிட்டால் நீ பௌணமி
மலரோடு ஒப்பிட்டால் நீ ரோஜா
கத்தோடு ஒப்பிட்டால் நீ தென்டல்
உறோடு ஒப்பிட்டால் நீ என் தோழி

உங்கள் அன்பு soniya

என்றும் உங்கள் நினைவில்
சோனியா

சோனியாவுக்கு இப்போ என்ன சோதனை? :-) ஜலதோஷம் பரவாயில்லையா? நான் உங்கள் பதிவு படிக்குமுன், செல்வி கணக்கு விடை சொல்லிவிட்டார்கள். பிறகு எப்போவாவது பார்க்கலாம்.
அழகான கவிதை, அழகான கனவு. :-) அனைவருக்கும் நல்லிரவு.
உத்தமி, நலமா?
அன்புடன் இமா

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்