வாங்கப்பா ஜாலியா அரட்டை அடிக்கலாம் பாகம் 62

எல்லோரும் வாங்க ஜாலியாக அரட்டை அடிக்க.

தனிஷா

அனைவர்க்கும் வணக்கம் வந்தனம்... பழைய பதிப்புகளுக்கு விடை சாயந்திரம் போடுறேன்... என்னை நலம் விசாரித்த விசாரிக்காத நல் உள்ளங்களுக்கு ஒரு சலாம்.... சரி... சோனியா.... இந்த கவிதையை நான் முந்தி படிச்சு இருக்கேன்... இருங்க... எஸ்.. தமிழ் பிரவாகத்துல படிச்சு இருக்கேன்.... இதோ அந்த லிங்க்....
http://groups.google.ge/group/Piravakam/msg/f7671bd2ccf4fded
ம்ம்ம்ம்.... மே பீ அந்த நபர் உங்க கவிதையை காப்பி அடிச்சு விட்டாரோ???? ஹி ஹி.... எனி வே நல்லா இருக்கு.... சாப்பாடு நேரம் எனக்கு அதான்... இங்க அப்படியே... ஒரு விசிட்.... சரி நான் கிளம்புறேன்... (பத்த வச்சுட்டியே பரட்டை என இமா கேக்குறதுக்குள்ளே நான் ஜகா வாங்கிக்கிறேன்....ஹி ஹி...)

ப்ரதீபா!
நலமா? ஓ நீங்க லண்டனில் இருக்கீங்களா? நாங்க குவைத்தில் இருக்கோம். எனக்கு கல்யாணம் ஆகி 13 வருடங்கள் ஆகுது. 7வது படிக்கும் விக்னேஷ், யு.கே,.ஜி படிக்கும் அபிராபி என்று இரு குழந்தைகள்.
ஹஸ், சொந்த ஊர் நாமக்கல் மாவட்டம், பரமத்தி-வேலூர். என் அம்மா சொந்த ஊர் திருச்சி மாவட்டம், உன்னியூர் என்ற அழகான ஒரு சிறு கிராமம். தற்சமயம் கரூரில்.
நீங்க திருச்சியில் எங்க இருக்கீங்க? என் அண்ணன், திருச்சி செயிண்ட் ஜோசப் கல்லூரியில் ஹாஸ்டலில் தங்கி படித்தார். என் தங்கைகள் இருவர் (சித்தி மகள்கள்) காவேரி கல்லூரியில் படித்தார்கள். என் தம்பியும் திருச்சியில்தான் ஆர்.ஈ.சில் படிச்சான்.
வருடம் ஒருமுறை, சமயபுரம்,ஸ்ரீரங்கம்,திருவானைக்கொவில் என் ஹஸ் வருவார்.
அச்சச்சோ தெரியாம கேட்டுடேனேன்னு தோணுதா?!!

வந்துட்டேன்பா நானும் ஜாலியா அரட்டை அடிக்க.....சேர்த்துக்கோங்கப்பா....

வினு

வினு

ஹாய் கவி, தனிஷா, இலா, இமா, ஜலீலா, சாய் கீதா, ஜெயா, செந்தமிழ் செல்வி, செல்வி, வின்னி, மாலி, சோனியா, ஸ்ரீ, மேனகா, சந்தோ, உத்தமி, தனு, உத்ரா, கிருதிகா, வினு மற்றும் எல்லா தோழிகளும் நலமா?

கீதா நீங்க சொல்ற தோழி யாருனு எனக்கு தெரியலை. உண்மையில் சொல்லனும்'ன என்னுடைய சொந்த கிலாஸ்மேட்ஸ் யாருன்னே எனக்கு நியாபகம் இல்லை. காரணம் அங்கு எனக்கு தோழிகள் யாரும் கிடையாது... யாரை பார்த்தாலும் பேசுவேன்... பாதி நேரம் தனியா தான் செலவு செய்வேன்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனி நாங்க நல்லா இருக்கோம்.எங்க குட்டி பாப்பாவும் நல்லா இருக்கா.....நீங்க எல்லாரும் எப்படி இருக்கீங்கப்பா????

வினு

வினு

நலமா? மீராக்குட்டி நலமா? உங்களை நானும் ஒவ்வொரு அரட்டையிலும் தேடிட்டு இருந்தேன்.
இன்னைக்கும் நாளைக்கும் ஃப்ரீயா? அதான் அரட்டைப்பக்கம் வந்தச்சா?

ஆமாங்க சாய்... Free தான்..மீராக்குட்டி நல்லா இருக்கா.நீங்க உங்க வீட்ல எல்லாரும் எப்படி இருக்கீங்க.... நாளைக்க்கு பாப்பாக்கு ஷாப்பிங் போனும்....என்னோட mail ஐடி தரேன்.. free ஆ இருக்கும் போது பன்னுங்க...vinuu.2000@gmail.com

வினு

வினு

ஜெயந்தி மாமி,ஜலீலா அக்கா,ஜெயா நீங்க எல்லாரும் எப்படி இருக்கீங்க...ஜெயந்தி மாமி அன்னைக்கு உங்க ஐடி ஒரு பதிவுல இருக்குனு சொன்னீங்கல்ல நானும் தேடினேன்..ஆனா கண்டுபிடிக்க முடியல மாமி...:-( ... போன வாரம் நிறய வேல இருந்தது office ல அதான் அறுசுவை வர முடியல.... உங்களுக்கு டைம் கிடைக்கும் போது மெயில் பண்ணுங்க vinuu.2000@gmail.com

வினு

வினு

எல்லோருக்கும் ஹாய்!
கீதா,
நலமா? பசங்க எக்ஸாம் எப்ப முடியுது? ஸ்கூல் விவரம் போதுமா? எனக்கு டைப் அடிக்கவே முடியலை. கையெல்லாம் ஓய்ந்து போகுது. அதான் மேனுகிட்ட சொல்லி அனுப்ப சொன்னேன்.
தனீ,
நான் இன்னும் சரியாகலைப்பா. என்னவோ சொல்ல தெரியலை, முடியலைன்னு மட்டும் தெரியுது. டாக்டர் கிட்ட போன விவரம் மெயில் பண்ணு.
ஜலீலா,
நலமா? பையன் எப்படி எக்ஸாம் எழுதி இருக்கார்? பிசின்னு இல்லை. இல்லைன்னும் சொல்ல முடியாது. காரணம் சொல்றேன் விரைவில். மனசுக்குள் சோர்வு.
செல்வி,
நலமா? ரொம்ப பிசி போல? பார்த்துப்பா. அதிகம் படிக்காதே, கஷ்டம்.
இலா,
நலமா? வீக் எண்ட் டூரா? என்ஜாய்! உடம்பை பார்த்துக்கோ. வேலையை விட்ட காரணமும் நிறைவேறட்டும்.
தீபு,
நலமா? உனக்கு மெயில் பண்றேன். முடிஞ்சா ஆன்லைனில் வா. பேசிடலாம். விரதம் எப்படி போகுது? இரண்டாவது வாரம், இல்லையா?
ஆசியா,
மகன் எக்ஸாம் எப்படி போகுது? ரொம்ப பிசி போல் இருக்கு. எப்படியும் திங்கள் கிழமையில் இருந்து வந்துதானே ஆகணும்:-)
ரேணு,
பர்த்டே எப்படி போச்சு? ஆமாம். நான் இன்னும் சரியாகலை.
வானு,
நலமா? ம்ம், ரொம்ப நாளாச்சு பேசி. நீதான் ஆன்லைனில் வர்றதே இல்லையே?
மாலி,
நலமா? உடம்பு எப்படி இருக்கு? சமைத்து அசத்தும் அளவுக்கு சரியாகிட்டே போல.
அதிரா,
கணவர் வந்தவுடன் பிசியா ஊர்சுத்தல் போல் இருக்கு. ஆளையே காணும்.
மேனு,
நலமா? ஷிவானி நலமா?
இமா,
மணத்தக்காளி செடி வந்துடுச்சா? எப்ப வரலாம் சாப்பிட? அதன்பின் நான் போட்ட மணத்தக்காளி எங்க வீட்டு தோட்டத்தில் வளர்ந்திடுச்சு. எங்க தோட்டமும் பெரிசாகிட்டே இருக்கு. பீர்க்கை நட்டிருக்கேன். பந்தலுக்கு வந்துருக்கு.
ஸாதிகா,
அறுசுவைக்கு லாங் லீவா? அப்படி எல்லாம் எடுக்கக் கூடாது, தெரியுமா? அப்பறம் ஃபெயில் பண்ணிடுவோம் (அங்க எப்படின்னு கேட்கிறது என் காதில் விழலையே).
தாமரை,
நலமா? சந்தோஷும் நலமா? ஏதோ பெரிய வேலையா? வரமாட்டேன்னு சொல்லி இருக்கே.
ப்ரபா,
நலமா? அங்கங்கே சந்தேகம் கேட்டு இருந்தாலே அது ப்ரபா தான்:-)
உத்தமி,
நான் இல்லைன்னா, எல்லோரும் நல்லா அரட்டை அடிக்கிறீங்க:-(
ரூபி,
இப்ப எப்படி இருக்கே? ரீமா குறும்பு பரவாயில்லையா? உடம்பை பார்த்துக்கோ.
வனி,
இப்ப சமைக்கிற மூடு வந்துடுச்சா? என் பையனின் பர்த்டேக்காக (பர்த்டே 17 ந்தேதி தான். அன்று காலேஜ் இருப்பதால் வீட்டில் இருக்க மாட்டார்) நாளைக்கு நான் ஸ்பெசலா சமைக்கப் போறதை அனுப்பறேன். நீங்க அனுப்பினதெல்லாம் நல்லா இருந்துச்சு. சிரியா அனுபவம் சுவையாக இருக்கு.
ம்ஹூம், இதுக்கு மேலே முடியலை. உத்ரா, சுகன்யா, ஜெயா, வத்சலா, மஹா, உமா, திருமதி. ஹுசைன், அருண், ஹாசினி இன்னும் யாரும் விட்டுப் போயிருந்தா எல்லோருக்கும் என்னுடைய விசாரிப்புகள்.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

நான் இந்த தளத்திற்கு புதிது அதனால் உன்ன பெயர் என்னை குழப்புது சாரி நான் கேட்கேன்னி தப்ப நினைகதிங்க நீங்க aanna பெண்ணா

என்றும் உங்கள் நினைவில்
சோனியா

மேலும் சில பதிவுகள்