வாங்க வாங்க அரட்டை அடிக்க வாங்க - 63

வாங்க வாங்க அரட்டை அடிக்க வாங்க. இன்று தனிஷா வேலையை நான் செய்துட்டேன். ;)

ஹாய் தனிஷா, செல்வி, ஜெயா, உத்தமி, சாய் கீதா, வினு, சோனியா, ஜலீலா, கிருதிகா, இமா, இலா, உத்ரா, பரிமளா, செந்தமிழ் செல்வி, சந்தோ, மேனகா, மற்றும் அனைவரும் இங்க வாங்க....

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

என்ன வனிதா இரவு சாப்பாடு எல்லாம் ஆச்சா???? பாக்கவே இல்லை உங்களை... சிரியா பத்தி தனியா இன்னும் விளக்கமா ஒரு பதிவு போடுங்கோ... தெரிஞ்சுக்கிறோம்.... நல்லது....

நலம் அருண். நீங்க நலமா? 2 நாளா வேலை அதிகம். அதான் வரலை அறுசுவைக்கு. சிரியா பற்றி எழுதர அளவுக்கு இப்போ நேரம் இல்லை... கண்டிப்பா நேரம் அமையும் போது எழுதுறேன். இரவு சாப்பாடு நடந்துகிட்டே இருக்கு.

நலமா? தளிகா, சுரேஜினி எல்லா நல்மா? எங்க அரட்டை பக்கம் உங்களை பார்க்க முடியலை?

அதிரா.... வாங்க கொஞ்சம் இப்போ தான் சமைத்து அசத்தலாம் நடக்கலயே.... தலை இடி எப்படி இருக்கு? அது நல்லா இருக்கா இல்லை நீங்க நல்லா இருகீங்கலா?

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

இலா... இந்த நேரத்துல நீங்க தானே அதிகம் இருப்பங்க இந்த பக்கம்... எங்க இன்று காணோம்??!! சனி விடுமுறையா??

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நான் உங்களை மாதிரி கோச்சிக்கவே இல்லை பார்த்தீங்களா!யாழினி என்ன செய்றாங்க

62'ல் நிறைய பேர் என்னையும் பாப்பா'வயும் கேட்டு இருந்தீங்க. ரொம்ப நன்றி. நாங்க நலம். குழந்தைக்கு 8 மாதம் முடிந்து 9 துவங்கி விட்டது. ஆனால் உட்காரவில்லை இன்னும். உட்கார் வெச்சா அவளுக்கு பிடிக்கல, எத்திகிட்டு எழுந்து நிக்கறா.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஹாய் சுகன்யா.... நீங்க நல்லவர்... என்னை போல் சின்ன பிள்ளை இல்லை... ;) ஹிஹிஹிஹி. நலமா? இப்போ அங்க என்ன நேரம்?

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஹாய் பிரதிபா என்னை 61 பகுதியில் விசாரிச்சு இருந்தீங்க.என்னால் பதிவு போட முடியலை.எப்படி இருக்கீங்க?

ஹாய் வானதி தேவாவின் பகுதியில் உங்களை விசாரிச்சு இருந்தேன்,பார்த்திருக்க வாய்ப்பில்லை!எப்படிபா இருக்கீங்க?

அப்புறம் என்னை விசாரித்த அனைத்து தோழிகள் பிரபா,சந்தோ,தனிஷா,இமா,ஜெயா,மேனகா,மஹா பேர் விட்டு போகாத(எனக்கு யார் யார் விசாரிச்சாங்கன்னு சரியான கணக்கு தெரியாததால்) மற்ற தோழிகளான சவுதி செல்வி,கவி.எஸ்,கிருத்திகா,தனு,சுகி,உமா,மர்ழியா,செல்வி மேடம்,ஸாதிகா மேடம்,ஜெயந்தி மேடம்,ஆசியா மேடம் எல்லாருக்கும் ஒரு ஹாய்

இப்போ இங்கே சரியா இரவு 12:27 ஆகுதுபா

பிள்ளைகளுக்கு இன்னும் எத்தனை எக்ஸாம் பாக்கி இருக்குபா?இங்க எல்லாருக்கும் நாளையோடு முடியுது.ஆனால் முன்னாடியே நீங்க சொன்னீங்க.அதான் எத்தனை பேப்பர்ஸ் என்று கேட்டேன்.

மேலும் சில பதிவுகள்