சமைத்து அசத்தலாம் - 10, எல்லோரும் வாங்கோ பிளீஸ்!!

அன்புத் தோழிகளே....

சமைத்து அசத்தலாம் பகுதி 9, இனிதே நிறைவேறிவிட்டது. அதேபோல், இது பகுதி -10 உம் இனிதே நிறைவேற, எல்லோரும் கலந்துகொள்ளவேண்டும் எனத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

நாம் இங்கே நகைச்சுவை, பாட்டு, பட்டிமன்றம்,கவிதைகள், இன்னும் எத்தனையோ எத்தனையோ எல்லாம் கதைக்கிறோம், அதேபோல், இதற்கும் கொஞ்சம் நேரம் ஒதுக்குவோம். நான் என்ன சொல்லவருகிறேன் என்றால், இங்கே கூட்டாஞ்சோறில், அதிகம் குறிப்புக்களில் ஆரம்பித்து, அப்படியே இறங்குவரிசையில் ஒவ்வொருவரின் குறிப்புக்களிலும், ஏதோ எம்மால் முடிந்ததை வாரா வாரம் செய்து இங்கே போடுவோம்.

பின்னூட்டங்களை குறிப்புக்களின் கீழ் அனுப்பவேண்டும், ஆனால் என்ன என்ன செய்தீர்கள் என்பதை இங்கே தெரிவிக்க வேண்டும். உடனுக்குடன் தெரிவித்துவிடுங்கள், அப்போதான் கணக்கெடுக்கும்போது தவறாமல் இருக்கும். நாள் போனால் என்ன செய்தோம் என மறந்துவிடலாம், பின்னர் லிஸ்ட் வந்ததும்தான் நினைவுவரும். எனவே தயவு செய்து, செய்யச் செய்ய இங்கே தெரிவியுங்கள்.

குறைந்தது இரு குறிப்புக்களாவது செய்ய வேண்டும், நாளை திங்கட் கிழமை ஆஸியாவுடையதையும்(196), மைதிலிபாபு வுடையதையும்(12) சேர்த்துச் செய்யப்போகிறோம். (இதற்கான விளக்கம் தேவையெனில், தயவுசெய்து பகுதி-5
(arusuvai.com/tamil/forum/no/10530?from=90&comments_per_page=30) இன் பதிவுகளைப் பாருங்கள், முடிந்தவரை இருவரது குறிப்புக்களிலிருந்தும் தெரிவு செய்து, செய்யுங்கள். வரும் செவ்வாய்க்கிழமை (24/03) முடிவடையும். புதன்கிழமை(25/03), செய்தவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டு, அசத்தல் ராணி யார் என்பதும் தெரியவரும்.. இப்படிச் செய்வதால் எல்லோரது குறிப்பையும் செய்து பார்த்து, அவர்களை ஊக்குவிக்க ஒரு சந்தர்ப்பம் கிடைக்கும் என நினைக்கிறேன்.

எல்லோரும் வாங்கோ, யார் யாரெல்லாம் இணைகிறீங்கள் என்பதை வந்து சொல்லுங்கள். இனி ஏதாவது சந்தேகங்கள் குறைபாடுகள் இருப்பின் கேளுங்கள்.. அப்பப்ப வருவேன்.

"ஒரு கை தட்டினால் சத்தம் வராது, பல கைகள் இணைந்தால், எதையும் சாதிக்கலாம்".

எம்மோடு இணைந்து குறிப்புக்கள் செய்பவர்களுக்கும், எம்மை ஊக்குவித்து வாழ்த்துபவர்களுக்கும் மிக்க நன்றி.

நேரத்திற்கு கணக்கெடுத்து, சரியான நேரத்துக்கு பட்டியலை வெளியிட்டு எல்லோரையும் அசத்தும் ரேணுகாவிற்கும் மிக்க நன்றி.

இலா,அதி, ஆஸியா, சைனாமஹா, ரேணுகா, தனிஷா, ESMSசெல்வி, வனிதா, மைதிலிபாபு, வத்சலா, ஸ்ரீ, மாலி, உத்தமி, வனிதா, மனோகரிஅக்கா, இமா, சாய் கீதா, அரசி ,வானதி, பிரியா, சாதிகாஅக்கா, செல்வியக்கா, மேனகா, விஜி, அம்மு, சுகன்யா, கவி.எஸ், கிருத்திகா, இந்திரா, உத்ரா, மனோ அக்கா, ஜலீலாஅக்கா ,ஹுசைன், ஹரி காயத்திரி அனைவருக்கும் மற்றும் கீதாச்சல்,ரசியாநிஸ்றினா அனைவருக்கும் மிக்க நன்றி. கலந்துகொள்ள முடியாமல் போனவர்கள், இம்முறை கலந்துகொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.

மற்றும் , முடியுமானவர்கள் ஸ்டெப் பை ஸ்டெப் ஆகவோ அல்லது முடிவிலோ படமெடுத்து அட்மினுக்கு அனுப்பி வையுங்கள். ஸ்டெப் பை ஸ்டெப்பாக படமெடுக்க நினைப்பவர்கள், முன்கூட்டியே தெரிவித்துவிடுங்கள், எந்தக் குறிப்பிற்கு எடுக்கப் போகிறீங்கள் என்று.

நாளை திங்கட்கிழமை(16/03) சமைக்கத் தொடங்குவோம், புது வருடத்தில் நிறைய சமைத்து அறுசுவையில் ஒரு புதுப் புரட்சியைக் கொண்டுவருவோம்..... எல்லோரும் வாங்கோ......

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

எம்மை மறவாமல் அழைத்த அன்பு அதிரா... மிக்க நன்றி. ரிப்பன் வெட்டி துவக்கி வைக்கலாம்'னு வந்தேன். :D நாளை காலை வந்து என்ன செய்தேன்னு சொல்றேன். சரியோ??!! கணக்கு..... தயாரா? ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நம்ம ஆசியா'வின் கோழி குறிப்புகள் செய்ய வேணும் இன்றுன்னு இரவே கோழி வாங்கி வந்து பிரிஜ்ஜில் தூங்குது. அதனால் நான் இன்று காலை செய்யப்போகும் உணவுகளை இப்பவே உங்க இரயிலில் ஏத்திக்கங்கோ. இவை இன்று நிச்சயம் செய்ய போவது.

சிக்கன் சில்லி ஃப்ரை
செட்டிநாடு பெப்பர் சிக்கன்
நெல்லை தம் பிரியாணி

ம்ம்... இன்னைக்கு ஒரே கோழி மயம். ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அதிரா ரேணுவுடன் சேர்ந்து நானும் அனைவரையும் அழைக்கிறேன்.வாங்கோ ! வாங்கோ ! வந்து சமைத்து அசத்தி நிறை குறைகளை சொல்லுங்கோ ! தோழி வனிதா முதலில் வந்த உங்களுக்கு நிச்சயம் ஸ்பெஷல் பரிசு உண்டு.வெஜ் ரெசிப்பிக்களும் நிறைய கொடுத்து இருக்கிறேன்.பார்த்து செய்யுங்கோப்பா .எதுவும் தவறு இருந்தால் சுட்டிக்காட்டினால் சரி செய்ய இது தருணம் என்பதால் சொல்லிடுங்கோ.அறுசுவை தோழிகள அனைவரையும் என்னுடையதும்,மைதிலி பாபு சமையலையும் செய்து அசத்த வருமாறு அன்புடன் மீண்டும் அழைக்கிறேன்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

இன்று சிக் ப்ரைட் சில்லி பரோட்டா,புதினாத்துவையல்.நேற்றே பரோட்டா ரெடி செய்தாச்சு.செய்து விட்டு பின்னூட்டம் கொடுக்கிறேன்.வனிதாவிற்கு அடுத்த சீட் எனக்கு தானே அதிரா,ரேணு.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்னுடைய கணக்கில் பொட்டேடோ சாப்ஸினை சேர்த்து கொள்ளூங்கள்.
ஆஸியா அக்காவின் பொட்டேடோ சாப்ஸ் மிகவும் அருமையாக இருந்த்து..
அன்புடன்,
கீதா ஆச்சல்

வெஜ் மட்டும் சமைப்பவர்களுக்கு ஈசியாக இருக்க இதோ என் வெஜ் குறிப்புக்கள்.அகத்திக்கீரை சால்னா,பூம்பருப்பு,பாசிப்பருப்பு ஜவ்வரிசி பாயாசம்,கருணைகிழங்கு புளிக்குழம்பு,கருப்பட்டி சாயா,கோல்ஸ்லா,சீஸ் ஸ்பிரட் சான்ட்விச்,முருங்கைப்பூ பொரியல்,மசாலா தக்கடி,டயட் சாலட்,முருங்கைக்காய் பொரியல்,மூவர்ணப்பொரியல்,புளிச்சாறு,பாகற்காய் கடலை பருப்பு கூட்டு,ஃப்ரூட் ரைத்தா,சௌ சௌ உருளைப்பொரியல்,கத்திரி உரூளை பிரட்டல்,ரைஸ் மிட்டா,எண்ணெய் கத்திரிக்காய்,மஷ்ரூம் கார்ன் காப்சிகம் சூப்,உருளை ஃப்ரை,ஜிஞ்ஜர் மிண்ட் ப்லாக் டீ,துருவிய கேரட் ஹல்வா,கடாய் காளான்,ஈசி வெஜ் வெள்ளை குருமா,தக்காளீ ஜூஸ்,ஆப்பிளாரஞ்சு மிக்ஸ் ஜூஸ்,அன்னாசி ஜூஸ்,ஸ்ட்ராபெர்ரி மில்க் ஷேக்,சாக்லேட் மில்க் சேக்,கோல்டு காபி,ஆலு கோபி,பனீர் முளைகாட்டிய பயிறு,வாழைக்காய் புட்டு,மினி தோசை,மசாலா பீன்ஸ்,ஆலூ பாலக்,தேங்காய் புதினா சட்னி,ஸ்பைசி உருளை தக்காளி மசாலா,சிறு கிழங்கு பொரியல்,முள்ளங்கி கொத்து பருப்பு,குக்கும்பர் ரைத்தா,பனீர் டிக்கா மசாலா,ப்ரெட் வெஜீஸ்,காஷ்மீரி பொட்டட்டோ புலாவ்,துருவிய கேரட் பொரியல்,வேப்பிலை உருண்டை,மிளகாய் பச்சி,ஓட்ஸ் நோன்பு கஞ்சி,வெஜிடபுல் உப்புமா,ப்லைன் உப்புமா,பொட்டட்டோ வெஜ் பாஸ்கட்,வெஜ் ஸ்பிரிங் ரோல்,பட்டர் பீன்ஸ் காளிஃப்லவர் மசாலா,பாகற்காய் வறுவல்,கிரீன் சட்னி,ப்லைன் யெல்லோ கீரைஸ்,தக்காளி வெங்காய சட்னி,எம்டி சால்னா,கோஸ் பாசிபர்ப்பு பொரியல்,கத்திரிக்காய் ஆனம்,வடை புளிக்கறி,சேனைகிழங்கு சாப்ஸ்,மேத்தி ரொட்டி,தடியங்காய் சாம்பார்,தால் ரொட்டி,மூளி ரொட்டி,புளித்துவையல்,கிரீன் சாலட்,சைனீஸ் ச்டிர் ஃப்ரை,கோவைகாய் சப்ஜி,டொமட்டோ கர்ன் பார்த்தா,வெண்டைக்காய் தயிர்க்கறி,கறி மசாலா பேஸ்ட்,கறி பவுடர்,கலவை பயறு மசாலா,கோவைக்காய் உருலை பிரட்டல்,ராஜ்மா வெஜ் சுண்டல்,பொட்டட்டோ சாப்ஸ்,பசசை பயறு உருளை மசாலா,மாம்பழப்பால்,புளிக்காய்ச்சல்,ஸ்பைசி முட்டை கோஸ் பொரியல்,சைனீஸ் சாலட்,
கிட்னி பீன்ஸ் கறி,கரைச்சான்,... இன்னும் பல.வெஜ் பிரியர்களே தெரிவு செய்து சமையுங்கள்.நன்றி.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

மைதிலியின் புதினா துவையல், பொட்டு கடலசட்னி, திடீர் சாம்பார் பொடி, வேர்கடலை பக்கோடா

ஆசியாக்கா குறிப்பு இட்லி மாவு குழிபணியாரம், சிக்கன் ஜால்ப்ரெஸி, கோஸ் பாசிபருப்பு பொறியல், தடியங்கா சாம்பார், ஸ்டீம் சிக்கன் (என் மகளுக்கு), கருப்பட்டி சாயா, கோல்ஸ்லா.

அதிரா இன்னக்கி என்ன அதிசயமோ எல்லாமே மின்னல் வேகத்தில் ஓபன் ஆகுது பட் சைன் அவுட் ஆகுது அதனால் பின்னூட்டம் கொடுக்க முடியல

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

ஹாய் அதிரா மற்றும் ரேணு

எப்படி இருக்கீங்க?சமைத்து அசத்தலாம் பகுதியுள் இந்த வாரம் ஆஸியா அவர்களுடைய குறிப்பும்,என்னுடைய குறிப்பும் இடம் பெற்றது ரொம்ப சந்தோஷம்
பா. உங்கள் இரயில் பயணம் தொடருட்டும்....வாழ்த்துக்கள் பா.

என்றும் அன்புடன்,
மைதிலி.

Mb

அக்கா இன்றைய சமையல் பாசி பருப்பு பொரித்த முட்டை (ஆசியா அக்கா குறிப்பு) நன்றி அக்காஸ்.

மேலும் சில பதிவுகள்