சின்ன பாட்டி

இப்போ தான்... வந்தேன்... ரெண்டு பாகங்கள் பார்த்தேன்.... ம்ம்ம்ம்... நம்ம பேரு எங்கே வருது என்று மட்டும் தான் பார்வையை ஓட்டினேன்...கிடைச்சது...

என்னுடைய பகுதியை மட்டும் படிச்சேன்....மத்த பகுதியை என்னோட பகுதி எப்படி இருக்கோ அதுக்கு தகுந்து மத்தது படிக்கலாம் என்று நினைத்து கொண்டு தான்.... படிக்க ஆரம்பிச்சேன்...

ம்ம்ம்ம்...ம்ம்ம்ம்...ம்ம்ம்ம்... இது என்னோட பகுதியை மட்டும் பார்த்து படிச்சு பார்த்து சொல்றது .. ரொம்ப சுவாரசியமா இல்லை....கிண்டலும் கேலியும் நையாண்டி தனமும் சாய் கீதா லக்ஷ்மி-க்கு இன்னும் முழுமையாக கை வர வில்லை....(முழுமையாக என்று சொல்லி இருக்கேன் நோட் பண்ணிக்கோங்க...ஹி ஹி...) சமாளிப்புக்கு சொல்ல வில்லை.... எனி வே கொஞ்சம் இவ்வளவு தூரம் பண்ணி இருக்கிறதை பாராட்டியே ஆக வேண்டும்.....நமக்கு அசத்தல் ராஜா பட்டம் கொடுத்ததுக்காக இல்லை... இது அவர்களின் முயற்சிக்கு...

ஒகே சாய் கீதா லக்ஷ்மி.... நோகடிக்குறது நோக்கம் இல்லை என்று நீங்க சொல்லி விட்டீர்கள்... அப்படி நினைக்காதவர்களையும் இந்த வார்த்தை நினைக்க வைக்கும்...சோ அந்த வார்த்தையை அகற்றி விடுங்கோ... ஹி ஹி...

சரி இவ்வளவு தூரம் வந்துட்டோம்... உங்களை அப்படியே விட்டா சரி வராது... இதோ நம்ம பட்டாசை இப்போ பாருங்க... ஹி ஹி....

//ஒரு ஓரத்தில் ஒரு கையில் ஜூஸ் டம்ளரும், இன்னொரு கையில் கரண்டியுமாக ஒரு ஆண் சமைத்துக்கொண்டிருக்கிறார்.//... என்ன???? இப்படி நம்மை சாதாரணமா சொல்லி விட்டீங்க???

ஆண்கள் சமையலில் நேர்த்தி மிக்கவர்கள் நவீனத்துவம் தெரிஞ்சு சமைப்பவர்கள்... அதனாலே தானே உலக அளவில் சமையல் துறையில் ஆண்களின் ஆதிக்கம் அதிகமா இருக்கு.... நள பாகம்.. பீம பாகம் என்று சொல்வதின் அர்த்தம் உங்களுக்கு தெரியுமா???? கண்டிப்பா தெரிஞ்சு இருக்க வாய்ப்பு இல்லை....ஏனென்றால் நீங்க தான் சமையலறை பக்கம் கூட போகாம இப்படி நாள் முழுவதும் மாஞ்சு மாஞ்சு டைப் பண்ணி இருக்கீங்களே...அப்புறம் எப்படி வெளி விஷயங்கள் தெரியும் ??? ஹி ஹி...(அப்புறம் நான் சொன்னதை சரியா புரிஞ்சுக்காம அம்மா சமையல் என்று இழுத்து சின்ன பாட்டி தனமா உளர கூடாது..... (உங்களுக்கு தான் ரொம்ப ரொம்ப வயசு ஆகலையே... கொஞ்சம் தானே அதான் சின்ன பாட்டி... எப்படி இருக்கு... ஹி ஹி..)

உங்களை மாதிரி ஆளுங்களுக்கு சினிமா சம்பந்தமா சொன்னா தான் புரியும்... (பொழுது போக்கு தொ(ல்)லைக்காட்சி பார்ப்பது என்று போட்டு இருக்கீங்களே... )....உதாரணத்திற்கு இளைய ராஜா இசை பெண்கள் சமையலை போன்றது...ரஹ்மான் இசை ஆண்கள் சமையலை போன்றது.... ரஹ்மான் இசை-க்கு உலக அங்கீகாரம் பார்த்தீர்களா???....இசையை குறிப்பிட்டுள்ளேன்.... இதில் மாற்று கருத்து உள்ளவர்கள் வரிசையில் வரவும்...

சோ நம்மளை பத்தி இன்னும் கொஞ்சம் பட்டையை கிளப்புற மாதிரி கொடுக்க வேண்டாமா??? என்ன கீதா???...

//இந்த மாதிரி தைரியமெல்லாம் அருண்பிரசங்கியத்தவிர யாருக்கும் வராதே??//... ஏன் உங்களுக்கு கூடவா வராது????? உங்க ஆத்து காரருக்கு ஆச்சு வந்து இருக்கணுமே.... நீங்க பக்கத்துல இருந்தா அவருக்கு எப்படி வரும்???? ஹி ஹி...

//. அப்பிடின்னு ஏகப்பட்ட டாட்ஸ், கொஸ்சின் மார்க்கெல்லாம் போட்டு பேசி கொன்னுடுவாரே?//....
நீங்க இப்படி இங்க வந்து மாஞ்சு மாஞ்சு (மீண்டும்) டைப் பண்ணி உங்க ஆத்து காரருக்கு சாப்பாடு போடாம கொல்றதை விடவா நான் கொல்றேன்..... ஹி ஹி.....

//போச்சுடா மாட்டினோமா? மனச திடப்படுத்திக்க வேண்டியதுதான். //... இது யாரு உங்க ஆத்து காரர் அடிக்கடி சொல்ற வசனமா????? ஹி ஹி...

// அடக்கடவுளே! இந்த ஒரு பகுதிதான் இவர் இம்சை இல்லாம நல்லப்டியா போய்ட்டு இருந்தது. இப்ப இதிலேயும் கை வெச்சிட்டாரே. இது எதில போய் முடியப்போடுதோ தெரியலியே???//....இது எப்படி இருக்கு தெரியுமா??? ஆகாத பொண்டாட்டி கை பட்டா குத்தம் கால் பட்டா குத்தம் என்று சொல்ற மாதிரி.... நம்ம என்ன பண்ணினாலும் இம்சை என்று நீங்க நினைச்சா என்னத்த சொல்ல முடியும்... ஹி ஹி...

//அதெல்லாம் ஒண்ணுமில்ல இவ்வளவு பொமபளைங்க கூடி நின்னு கும்மி அடிக்கிற அறுசுவையில் தனியொரு ஆம்பளையா தாக்கு பிடிக்கிறதுக்கே உங்களுக்கு தனியா "அசத்தல் ராஜா" பட்டம் கொடுக்கலாமே. இதுக்கு போய் சமைச்செல்லாம் கஷடப்படுததனுமான்னுதான்... யோசிச்சேன்.//..... கும்மி என்று சொன்ன உடனே எனக்கு பழைய நியாபகங்கள் நினைவுக்கு வருது.... (மொக்கை தான்... பட் அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம்...ஹி ஹி...)...

எங்க தெருவில் வருடா வருடம் தெரு பொங்கல் விழா என்று நடத்துவார்கள்... தினசரி பெண்கள் எல்லோரும் கும்மி அடிச்சு... அப்புறம் பொங்கல்... சுண்டல்... என்று கொடுப்பாங்க.... ஒரு வாரம் கழிச்சு கடைசி நாளில் பெரிய விழாவாக இருக்கும்...

பெண்கள் கும்மி அடிக்கும் நாட்களில் ஆம்பளை பசங்க முதலில் வர மாட்டாங்க...பொங்கல் கொடுக்கும் போது மட்டும் ஆஜர் ஆவாங்க... ஆனா நான்.. முதலில் போய் எல்லோரிடமும் பேசுவேன்... என்ன என்று???? எதுக்கு கும்மி அடிக்கணும்... ஒளிஞ்சு விளையாட்டு விளையாட கூடாதா???? ஏன் பொங்கல் வைக்கணும்...இட்லி சாம்பார் பூரி வைக்க கூடாதா???? எதுக்கு சாமி பாட்டு தெருவில் வச்சு பாடுறீங்க... வீட்டுல பாடாம இப்படி எதுக்கு தெருவில் வச்சு பாடணும்??? ... என்று கேள்வி மேல் கேள்வி கேப்பேன்... எந்த வயசுல???.... ஏழாம் வகுப்பு படிக்குற வயசுல....அப்போ யாரும் என்னை அதிகமா பேசுற....வாயை குறைச்சுக்கோ... என்று சொன்னது இல்லை.... நான் கேட்டதுக்கு எல்லாம் நம்ம இமா மாதிரி சிரிச்ச முகமா பதில் சொல்லுவாங்க.... அங்க அப்படி இருந்ததால தான்... இங்க இப்படி எத்தனை பேரு கும்மி அடிச்சாலும்....சரி போதும்...

அது என்ன அசத்தல் ராஜா பட்டம்??? ராஜா எல்லாம் வேண்டாம்... அசத்தல் அருண் என்று நீங்களே கொடுங்க சின்ன பாட்டி...நான் தாரளமா வாங்கி கொள்கிறேன்... ஹி ஹி... (அதிரா வேற கொடுப்பாங்க...அவசர விளக்கம் பதிவில் உங்களை அதிர வைத்த கேள்விகளுக்கு பதில் எங்கே அதிரா??? அதை கொடுங்க போதும்..)

//நேரம் கிடைக்கப்ப நம்ம ப்ளாக் பக்கம் கையில் ஜூஸ் டம்ளருடன் விசிட் பண்ணுங்க....ம்ம்ம்ம்ம்....நல்ல
து...//.... பின்ன நம்ம பிளாக் படிச்சு சிரிக்குற சிரிப்பில் தண்ணி தவிக்க கூடாது என்று நல்ல எண்ணத்தில் ஜூஸ் குடிக்க சொன்னா????.... ம்ம்ம்ம்.. நல்லது...

//முதல் பக்கத்திலேயே பெரிய சைஸில் இவர் போட்டோவை பாத்து திகிலடிச்சு திரும்பி வந்து,"அந்தப்பக்கமே போய்டாதீங்கன்னு" எச்சரிக்கை பண்ணீயதை சொல்லலாமா வேண்டாமா தெரியலியே??//... பார்ரா.. எந்த படத்தை பார்த்து??? அந்த ஜட்டி போட்ட குழந்தையா....இல்லை ஓவர்-ஆ யோசிக்குற மாதிரி இருக்கிற படமா??? எதுவோ ஒண்ணு.... எங்க படத்தை பார்த்து திகில் அடைஞ்சு போய் இருக்கீங்க.... கொஞ்சம் ஜூஸ் குடிங்க... இந்தாங்க.... பின்ன என்ன... போன வருடம் குவைத்தில் நடந்த பாட்டிகள் அழகி போட்டியில் கடைசியில் இருந்து முதலாம் இடத்தை பிடித்த நீங்க சொன்னா சரியா தான் இருக்கும்...ஹி ஹி....

//அதுவந்து பிரசங்கி, இப்ப ஜூஸ் போட்றதுக்கு என் கையில் பழங்கள் எதுவும் இல்லை. // அதான் நானே ஜூஸ் போட்டு கொடுத்து விட்டேனே....அப்புறம் என்ன கையில் பழங்கள் இல்லை என்று தப்பிச்சு ஓடுற மாதிரி வசனம்??? அவ்வளவு தானா??? என்ன சின்ன பாட்டி... உங்க கிட்ட இருந்து என்ன என்னமோ எதிர் பார்த்தேன்... ஆனா நீங்க இப்படி பாதியில் விட்டு போனா எப்படி????? ஹி ஹி....

ம்ம்ம்ம்..

//போச்சுடா கொஞ்ச நேரத்திலேயே ம்ம்ம்ம்.....நல்லது...... நமக்கும் வந்திடுச்சே!//... ரொம்ப நல்ல விஷயம் தானே.... நல்லது என்ற வார்த்தை நல்ல எண்ணங்களை உருவாக்க ஒரு சின்ன அஸ்திவாரம் தானே... என்ன பாட்டி... இல்லை... சின்ன பாட்டி இது கூட தெரியாம.... ம்ம்ம்ம்... இது எதுக்கா??? நான் மேலே உள்ள எல்லாம் டைப் பண்ண 46 நிமிடங்கள் 28 நொடிகள் ஆச்சு... சொல்ல வர்றதை உடனே சொல்வதால் வரும் இடை செருகல் வார்த்தை அது (ம்ம்ம்ம்).... அது போக டைப் பண்றதுக்கு என்ன சொல்ல போறோம் என்று முன்னாடி யோசிக்க மாட்டேன்... அடிக்க தொடங்கிய உடன் கட கட என்று டைப் பண்ணி விடுவேன்...(இது எல்லாம் தானா வர்றது ஒண்ணும் பண்ண முடியாது... ஹி ஹி...டைப்பிங் படிக்கல...பழக்கத்தில் வந்தது)...இது எல்லாம் எனக்கு... உங்கள் முறை அப்படி அல்ல என்று எனக்கு தெரியும்.... காலையில் இருந்து மத்தியானம் வரை எப்படி எழுதுவது என்று யோசிச்சு மண்டை காஞ்சு.... மாஞ்சு மாஞ்சு (மீண்டும் மீண்டும்) டைப் பண்றதால இப்படி ஒரு முயற்சி உங்களால எடுக்க முடிஞ்சு இருக்கு... வாழ்த்துக்கள்... ஹி ஹி...

உங்கள் மற்ற பகுதிகளை நான் நாளை படிக்கிறேன்...மே பீ நீங்கள் அதில் முழுமையான நகைச்சுவை கலந்து எழுதி இருக்கலாம் நாளை படிச்சு சொல்றேன்... நண்பன் அரட்டை அடிக்க வந்துட்டான்...அவனுக்கு இரவு நேர ஷிப்ட் வேலை... சரி.... வரட்டா???

மீண்டும் பாக்கலாம்... இதை நான் தனியா ஒரு பதிவா போட தான் போறேன்...நம்ம சின்ன பாட்டி அவர்கள் கண்களுக்கு எளிதாக என்னோட பதில்கள் தெரிய வேண்டும் என்ற பேராவல் தான்....

என்றும் உங்கள் அருண் பிரசங்கி

காமெடிக்கே காமெடியா ?அப்புறம் சின்னப்பிள்ளங்க தான் ஒன்று சொல்லிவிட்டு அடுத்து சொல்வதற்குள் ம்ம்ம்..என்று யோசித்து ஹிஹி..என்று சொல்வாங்க.பெரியவங்க நல்லது -ன்னு சொல்வாங்க.அப்ப பெரிசும்,சிறிசும் கலந்த கலவையா நீங்க ?அசத்தல் அருண் இதற்கு விளக்கம் தராமல் இந்த காதில் வாங்கி அந்த காது வழியா விட்டுவிடுங்க.அப்புறம் ஆசியா பயந்துடுவா .
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

பயப்படாமா இங்க வந்து உங்க கருத்தை சொல்லுங்க.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

ஆசியா ஏதாவது ஒன்னு சொல்லபோயி அப்புறம் அதுக்கு தனியா ஒரு திரட் போட்டு காதுல.. இல்லயில்ல கண்ணுல ரத்தம் வர வெச்சுட்டார்னா என்ன பண்றது அதுதான் யோசுச்ட்டு இருக்காங்க நம்ம தோழிகள்:-)

வாங்கோ.... தலைக்கு மேல வேலை இருக்கு.... இதோ கிளம்பிடுறேன்.... அப்புறம் நம்ம ஷர்மி சொன்ன மாதிரி நான் யாரையும் விமர்சனம் பண்ணவும் இல்லை..... குறை சொல்லவும் இல்லை... நம்ம பாலிசி (LIC பாலிசி இல்லை.. ஹி ஹி..), நம்ம கோவப்படுறதும், எள்ளி நகையாடுவதும், அக்கறையா பேசுவதும் வெளி நபர்களிடம் இல்லை.... நம்ம சொன்னா நம்ம அருண் தானே என்று நினைக்குறவங்க-கிட்ட மட்டும் தான் மேல் சொன்ன எல்லாவற்றையும் வச்சுக்கிறது.... மத்த படி.... எந்த பலி வாங்கும் படலமும் இல்லை...கவிதா சொன்ன மாதிரி ரத்த கண்ணீர் எல்லாம் நமக்கு வர வைக்க தெரியாது... சரி... சாய் கீதா லக்ஷ்மி உங்க மத்த பகுதிகளை படிச்சு பார்த்து சாயந்திரம் பதில் போடுறேன்....அது போக இன்னும் தெளிவா, வந்து பதில் மொழி கொடுத்த, கொடுக்காத எல்லோருகிட்டேயும் மொக்கை போடுறேன்... ஹி ஹி... நல்லது.... ம்ம்ம்ம்...

சிரிச்சேன்... கொஞ்சம் அழுதேன்.. வழ்க்கம்போல பெரிய மொக்கையா போட்டு வச்சா வேற என்ன பண்ண. அண்ணாச்சி த்ரெட்ட படிப்பதற்குள் டீ போட்டு கொண்டு வந்துவிட்டேன்.

கீதாவை சின்ன பாட்டி சின்னபாட்டினு இப்படி வாரிடீங்களே.... நியாயமா அருண்...

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

அது ஒன்னுமில்லை தனிஷா,நம்ம சாய்கீதா ம்ம்..நல்லது என்று அங்க சொல்லியிருந்தாங்கல்ல..அதான் அருண் அதுக்கு பதில் சின்ன பாட்டி என்று மூச்சுக்கு முன்னூறு(மூன்று தடவை)சொல்லி சாய்கீதாவை உசுப்பேத்தலாம்னு பார்த்தாரு...ஆனால் பாருங்க நம்ம சாய்கீதாவை,இதை தனக்கு ஒரு அங்கீகாரமா எடுத்துக்கிட்டாங்க.என்னே ஒரு பெருந்தன்மை...

மறுபடியும் இந்த மொக்கையை படிக்கறதுக்குள்ள 2காபி குடித்துவிட்டேன்.அநியாயத்துக்கு நம்ம கீதாவை சின்னபாட்டின்னு சொல்லி கலாய்ச்சிட்டிங்க.அதுக்குன்னு ஒரு த்ரெட் தனியா ஒப்பன் செய்து ஒரு மொக்கையை போட்டுறிக்கிங்களே!!

அருண்,

//டைப் பண்றதுக்கு என்ன சொல்ல போறோம் என்று முன்னாடி யோசிக்க மாட்டேன்... அடிக்க தொடங்கிய உடன் கட கட என்று டைப் பண்ணி விடுவேன்...***** உங்கள் முறை அப்படி அல்ல என்று எனக்கு தெரியும்.... காலையில் இருந்து மத்தியானம் வரை எப்படி எழுதுவது என்று யோசிச்சு மண்டை காஞ்சு.... மாஞ்சு மாஞ்சு (மீண்டும் மீண்டும்) டைப் பண்றதால இப்படி ஒரு முயற்சி உங்களால எடுக்க முடிஞ்சு இருக்கு//

சாய்கீதாவும் இப்படி நினச்சதை உடனே (எடுத்தோம் கவுத்தோம்னு) எழுதியிருக்க முடியும். ஆனா அப்படி எழுதாம யோசிச்சு எழுதுவதற்குக் காரணம் யார் மனதும் தன் நையாண்டியால் புண்படக்கூடாது என்று அவ‌ர் நினைத்ததால்தான். இதத்தான் "பெண்புத்தி பின்புத்தி" என்பார்கள். உங்க பாணியில் பொழிப்புரை எழுதுனா, ஒரு செயலின் பின்விளைவைக் கணித்து செயலாற்றுவதுதான் பெண்களின் இயல்பு.

இதயும் உக்காந்து ஆராஞ்சு, அலசி, பிழிஞ்சு காயப்போட்டுட்டு இருக்காம உருப்படியா எதயாவது சமச்சு சாப்பிடற வழியப் பாருங்க.

எல்.ஐ.சி. பாலிஸி எடுத்திருக்கீங்களோ இல்லயோ, உடனே ஒரு மெடிகிளைம் பாலிஸி எடுத்துக்கோங்க. உங்க நல்லதுக்குத்தான் சொல்றேன்.

வாங்கோ பெயர் சொல்ல வெக்கப்படுற அம்மணி... //இதயும் உக்காந்து ஆராஞ்சு, அலசி, பிழிஞ்சு காயப்போட்டுட்டு இருக்காம உருப்படியா எதயாவது சமச்சு சாப்பிடற வழியப் பாருங்க.//... ஏன் பயமா???? ஹி ஹி... நான் ஏதாவது ஒண்ணு கிடக்க ஒண்ணு சொல்ல போறேன் என்று... ஐயோ நீங்க நம்ம ................ ம்ம்ம் உங்க பெயர் தெரியாம எப்படி நான் திக்கு தவறி நிக்குறேன் பாருங்க... ஹி ஹி...

சரி... உங்க கணவரும் நீங்களும் மெடிகிளைம் பாலிஸி-க்கு ஆளுங்க சேர்க்குற வேலை பாக்குறீங்களா??? ம்ம்ம்ம் இது அறுசுவை தளம்... இங்க வந்து உருப்படியா அரட்டை அடிக்க
தான் செய்யணும்... இப்படி ஆளுங்க சேக்குற வேலை எல்லாம் கூடாது.... (ஏதோ ஒரு படத்துல சொல்ற மாதிரி உங்க போதைக்கு நாங்க ஊறுகாயா??? ஹி ஹி...)

சரி மத்ததை சாயந்திரம் வந்து சொல்றேன்... இப்போதைக்கு வரட்டா??? ஹி... ஹி...

ஹலோ,

ஷர்மி ஒரு பதிவில சரியாத்தான் சொல்லியிருக்காங்க, உங்களுக்கு வாசிக்கத் தெரியலன்னு. என் பேரச்சொல்ல வெக்கமா இருக்குன்னு எங்க, எப்ப சொல்லியிருக்கேன்?

போதைக்கு ஊறுகாய்ன்னு பேசும்போதே தெரியுது, ஏதோ குழப்பத்தில இருக்கீங்கன்னு.

ஆள் வச்சு அடிக்க சுரேஜினி மட்டுமில்ல, நிறைய பேர் காத்திருக்காங்க. அதிலயும் சாய்கீதா பக்கத்தில குவைத்ல தான் இருக்காங்க. அதனால ஒரு நல்லெண்ணத்தில‌ மெடிகிளைம் பாலிஸி எடுக்கச்சொன்னா உடனே நாங்க மெடிகிளைம் பாலிஸி-க்கு ஆளுங்க சேர்க்குறமான்னு...

சின்னபுள்ளத்தனமா இருக்குன்னு கூட சொல்லமுடியல. சின்னபிள்ளைகூட புத்திசாலியா இருக்கும்.

மேலும் சில பதிவுகள்