பீர்க்கங்காய் சட்னி

தேதி: March 17, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 4 (2 votes)

 

பீர்க்கங்காய் - அரைக் கிலோ
வெங்காயம் - ஒன்று
பச்சை மிளகாய் - 3
தக்காளி - ஒன்று
கறிவேப்பிலை - 5 இலை
கடுகு – தாளிக்க
மஞ்சள் தூள் – அரைத் தேக்கரண்டி
எண்ணெய் – ஒரு தேக்கரண்டி
உப்பு – ஒரு தேக்கரண்டி


 

பீர்க்கங்காயை தோல் சீவி சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். தக்காளி, வெங்காயம், பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் பீர்க்கங்காய், தக்காளி மற்றும் மஞ்சள் தூளுடன் 1 கப் தண்ணீர் சேர்த்து 10 நிமிடம் வேக விடவும்.
பீர்க்கங்காய் மற்றும் தக்காளி வெந்ததும் எடுத்து சிறிது நேரம் ஆறவிட்டு மிக்ஸியில் போட்டு கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
ஒரு கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு போட்டு தாளித்து பின்னர் நறுக்கின வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
அதன் பிறகு அதில் அரைத்து வைத்திருக்கும் கலவையை ஊற்றவும்.
வதங்கிய வெங்காயத்துடன் இந்த கலவையை சேர்த்த பின்னர் நன்கு கிளறி விட்டு 5 நிமிடம் வேக விடவும்.
சுவையான பீர்க்கங்காய் சட்னி ரெடி. இதனை இட்லி, தோசை, சப்பாத்தியுடன் பரிமாறலாம். இந்த குறிப்பினை <b> திருமதி. கீதா ஆச்சல்</b> அவர்கள் அறுசுவை நேயர்களுக்காக வழங்கியுள்ளார். இவரது பெரும்பாலான குறிப்புகள் குழந்தைகளுக்கான, மிக எளிதில் தயாரிக்கக்கூடிய உணவுக்குறிப்புகளாக இருக்கும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

சிம்பிள் & சூப்பர் ரெசிப்பி. என்ன இங்க இந்த காய் கிடைக்காது. கிடைச்சா எவ்ளோ நல்லா இருக்கும்.

indira

எப்பவும் சாமான் அதிகம் சேர்க்காமல் செய்தால் ஒரிஜினல் ருசி அருமையாக இருக்கும்.கலர் & பவுல் பார்த்தவுடன் நீ தான் கொடுத்து இருப்பன்னு நினைத்தேன்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

இந்திரா,
மிகவும் நன்றி. உங்களுக்கு இந்த காய் கிடைக்கும் பொழுது கண்டிப்பாக செய்து பாருங்கள். உங்கள் போட்டோவினை பார்த்தேன்…(ஆர்குட்டில்)
ஆசியா அக்கா,
மிகவும் நன்றி. பார்த்த உடனே கண்டுபிடுத்துவிட்டிங்க…மிகவும் சந்தோசம்.
அன்புடன்,
கீதா ஆச்சல்

கீதா,
பீர்க்கங்காய் சட்னி நிச்சயம் சுவையாக இருக்கும். சுலபமான செய்முறை. கிடைக்கும் போது செய்வேன்.
அன்புடன்,
செபா.

செபா ஆன்டி,
மிகவும் நன்றி .
கண்டிப்பாக உங்களுக்கு பீர்க்கங்காய் கிடைத்தால் செய்து பார்த்துவிட்டு சொல்லுங்கள்.
அன்புடன்,
கீதா ஆச்சல்

பீர்க்குச் சட்னி சூப்பர்.