தழும்புகள் மறைவதற்கு

எனக்கு ஒரு மாதத்துக்கு முன்பு பெரிய அம்மை வந்தது.. ஆனால் அந்த தழும்புகள் அப்படியே இருக்கு என்னோட முகத்துலையும், உடம்புளையும் இருக்கு.. முகத்தில ரொம்ப கருப்பா (Dark circles) இருக்கு.. இந்த தழும்புகள் மறைவதற்கு வீட்டு வைத்தியம் இருந்த சொல்லுங்க... அறுசுவை தோழிகளே..

அன்புள்ள
தமிழரசி

யாரவது பதில் தெரிஞ்சவுங்க சொல்லுங்க ப்ளீஸ்

யாரவது பதில் தெரிஞ்சவுங்க சொல்லுங்க ப்ளீஸ்

தமிழரசி, தழும்பு மறைய coco butter cream,ஆலிவ் ஆயில்,த்டவலாம். நாள்பட சரியாகிவிடும்.

Do you know what is better than charity and fasting and prayer?
Its keeping peace and good relation (Prophet Muhammed -Muslim & Buhari)

ஹாய் தமிழரசி, உங்க முகத்தில் வந்திருக்கும் கருப்பு தழும்புகளை நீக்க என்னோட பயனளிக்கும் குறிப்புகள் பகுதியில் இருக்கும் பொடியினை தயாரித்து அதனை தினமும் தயிருடன் கலந்து முகத்திற்கு பேக்காக குளிப்பதற்கு முன்பு போடுங்கள். இப்படி செய்து வந்தால் நாளடைவில் தழும்புகள் முழுவதுமே மறைந்துவிடும். வசம்பு கரும்புள்ளிகளை நீக்கிவிடும். கஸ்தூரி மஞ்சளும் இதற்கு உதவும். இரண்டுமே சேர்த்து இந்த பொடியினை தயாரிப்பதால், இதனை தொடர்ந்து உபயோகிக்கும்போது கரும்புள்ளிகள் இல்லாமல் விரைவில் ஸ்கின் ஸ்மூத்தாகவும், நல்ல நிறமாகவும் ஆகிவிடும். ட்ரை பண்ணிப் பாருங்க. அதோட தினமும் ஒரு வேளை உருளைக்கிழங்கு சாறும் முகத்துக்கு தடவிட்டு வாங்க. கோக்கோ பட்டரை முகத்துக்கு உபயோகிக்க வேண்டாம். அது கொஞ்சம் எண்ணெய்த் தன்மை உள்ளது. அதனால பரு வரும் வாய்ப்பு அதிகம். ஆலிவ் ஆயில் மிகவும் நல்லது. ஆனால் அதனால ஒவ்வாமை இல்லையென்றால் மட்டுமே உபயோகியுங்கள். ஆலிவ் ஆயிலைவிட தழும்புகளை போக்குவதில் வைட்டமின் E ஆயில் மிக சிறந்தது. சிறந்த பலன் விரைவில் கிடைக்க தினமும் பேக் போட்டுக் காயவைத்து கழுவிய பிறகு வைட்டமின் E ஆயில் கொண்டு முகத்தை நன்றாக வட்ட வடிவிலும், மேல் நோக்கியும் மசாஜ் செய்து விட்டு குளியுங்கள். ஸ்கின்னை அடிக்கடி exfoliation அதாவது ஸ்க்ரப்பிங் போல் செய்வதும் அவசியம். 15 நாட்களுக்கு ஒரு முறை முகத்தை ஸ்கரப் செய்யுங்கள். இதில் மேலும் எதுவும் சந்தேகம் இருப்பின் கேளுங்கள்.

மேலும் சில பதிவுகள்