முருங்கைக்கீரை பொரியல்

தேதி: March 18, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

ஆய்ந்த முருங்கைஇலை - 2 கப்
மிளகாய் வற்றல் - 2
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
தேங்காய்த்துருவல் - 1/2 கப்
வெங்காயம் நறுக்கியது - 2 டேபிள்ஸ்பூன்
உப்பு - சுவைக்கு


 

வாணலியில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டு வெங்காயத்தை நிறம் மாறாமல் வதக்கவும்.
அத்துடன் மிளகாய் வற்றலை கிள்ளிப்போடவும்.
இதில் கால் கப் நீர், உப்பு சேர்க்கவும்.
கொதித்து பொங்கி வரும் பொழுது மீதமுள்ள எண்ணெயை நீரில் விட்டு கீரையை சேர்த்துக்கிளறி மூடியால் மூடி விடவும்.
அவ்வப்பொழுது கிளறி விட்டு நீர் முழுக்க வற்றியதும் தேங்காய்துருவல் சேர்த்துக்கிளறி இறக்கவும்.
சூடாக சாதத்துடன் சேர்த்து சாப்பிடலாம்.


மேலும் சில குறிப்புகள்