அகத்திக்கீரை சொதி

தேதி: March 19, 2009

பரிமாறும் அளவு: 6 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

2
Average: 2 (2 votes)

 

அகத்திக்கீரை - 1 கட்டு
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 4
தக்காளி - 2
பால் - 1 கப்
உப்பு - தேவையான அளவு.
கறிவேப்பிலை - சிறிதளவு


 

அகத்திக்கீரையை தண்ணீரில் கழுவி, இலையை காம்பில் இருந்து உருவி வைக்கவும்.
வெங்காயம், மிளகாய், தக்காளியை நறுக்கி வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் எடுத்து நறுக்கிய வெங்காயம், மிளகாய், தக்காளி, உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.
வெங்காயம் பாதியளவு வெந்ததும் அகத்திக்கீரையைச் சேர்க்கவும்.
5 நிமிடத்தின் பின்பு பாலைச் சேர்க்கவும்.
பால் கொதித்ததும் கறிவேப்பிலை சேர்த்து இறக்கவும்.


அகத்திக்கீரையில் இரும்புச்சத்து, கால்சியம், கரோட்டீன், வைட்டமின் ஈ போன்ற சத்துக்கள் இருக்கின்றன. இதற்கு மலச்சிக்கல், வாய்ப்புண், வயிற்றுப்புண்ணை நீக்கக் கூடிய தன்மை உண்டு.
இந்தச் சொதி சோறு, புட்டு, இடியப்பத்துடன் சாப்பிடலாம்.

மேலும் சில குறிப்புகள்


Comments

வத்சலா,
ஏங்க வைக்கிறது இந்தக் குறிப்பு. :( எங்கள் பக்கம் சொதி இறக்கும் முன்பாகத்தான் அகத்திக் கீரை சேர்ப்போம். அதுவும் கழுவி விட்டு முழுதாக நெட்டியோடு சேர்ப்போம். இங்கு எங்கே கிடைக்கிறது இதெல்லாம். :((
அன்புடன் இமா

‍- இமா க்றிஸ்

இமா, நலமாக இருக்கிறீர்களா? உங்களுடன் கதைத்து நீண்ட நாட்களாகிவிட்டது.
அகத்திக் கீரையை நெட்டுடனும் போடலாம். உருவிப் போட்டால் சாப்பிடுவதற்கு இலகுவாக இருக்குமல்லவா.சில காய்கறிகள் இங்கு வாங்குவது என்றால் கடினமாகத்தான் இருக்கிறது.

நன்றி,
"அன்பான சொல் மருந்தாக இருப்பதோடு வாழ்த்தவும் செய்கிறது"