ஜவ்வரிசி பக்கோடா 2

தேதி: April 3, 2006

பரிமாறும் அளவு: 2 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

பொடி ஜவ்வரிசி - ஒரு கப்
ரவை - ஒரு கப்
பச்சரிசிமாவு - ஒரு கப்
தயிர் - 2 கப்
வெங்காயம் - அரை கிலோ
முந்திரி பருப்பு - கால் கப்
மல்லி இலை - சிறிதளவு
மிளகாய் - 3
இஞ்சி - சிறு துண்டு
உப்பு - தேவையான அளவு


 

தயிரில் ஜவ்வரிசியை 2 மணி நேரம் ஊற விடவும். ரவை, அரிசி மாவுடன் ஜவ்வரிசியை சேர்த்து நன்றாக பிசையவும்.
அத்துடன் நறுக்கின வெங்காயம், முந்திரிபருப்பு, மிளகாய், கொத்தமல்லி, இஞ்சி போட்டு தயிர் சேர்த்து கெட்டியாக பிசைந்து கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் மாவினை பக்கோடாக்களாக கிள்ளிப் போட்டு சிவக்க பொரித்து எடுக்கவும்.


மேலும் சில குறிப்புகள்