குருணை வெண் பொங்கல்

தேதி: March 20, 2009

பரிமாறும் அளவு: 2

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

குருணை அரிசி - 1 கப் (பச்சரிசி)
சிறுபருப்பு - 1/4 கப்
பச்சைமிளகாய் - 2 (இரண்டாக கீறியது)
பால் - 1/2 கப்
இஞ்சி - 1 டீஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
நல்லமிளகு - 1/2 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
முந்திரிப்பருப்பு - 10
நெய் - 2 டேபிள் ஸ்பூன்
கறிவேப்பிலை - 1 கொத்து
உப்பு - தேவைக்கேற்ப


 

குக்கரில் அரிசி குருணையும், பருப்பையும் கழுவி போட்டு அதில் சீரகம், 2 ஆக கீறிய பச்சைமிளகாய், இஞ்சி, தேவையான அளவு உப்பு, பால் மற்றும் 2 1/2 கப் தண்ணீர் விட்டு குக்கரில் 5 விசில் விட்டு இறக்கவும்.
ஒரு வாணலியில் நெய் விட்டு அது காய்ந்ததும் நல்லமிளகு, கறிவேப்பிலை, முந்திரிப்பருப்பு போட்டு நன்றாக வறுத்து பொங்கலில் கொட்டி கிளறி சூடாக இருக்கும் போதே சாம்பாருடன் பரிமாறவும்.


மேலும் சில குறிப்புகள்