தேதி: March 20, 2009
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
சின்ன வெங்காயம் – கால் கிலோ
காய்ந்த மிளகாய் – 10
பூண்டு – 2 பல்
நல்லெண்ணெய் – 2 தேக்கரண்டி + 1 தேக்கரண்டி
உப்பு – 1 தேக்கரண்டி
புளி – சிறிதளவு
கடுகு – 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை – 5 இலை
பெருங்காயம் – அரைத் தேக்கரண்டி
வெங்காயத்தை தோல் உரித்து வைத்துக் கொள்ளவும். மற்ற அனைத்து தேவையான பொருட்களையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.

கடாயை அடுப்பில் வைத்து காய்ந்த மிளகாயை போட்டு வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.

அதே கடாயில் ஒரு தேக்கரண்டி நல்லெண்ணெய் ஊற்றி வெங்காயத்தினை போட்டு வதக்கி எடுத்துக் கொள்ளவும்.

வெங்காயத்தினை சிறிது நேரம் ஆற வைக்கவும். அதன் பிறகு மிக்ஸியில் வெங்காயம், காய்ந்த மிளகாய், பூண்டு, புளி மற்றும் உப்பு சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்.

ஒரு கடாயில் 2 தேக்கரண்டி நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு சேர்த்து தாளித்து அதில் கறிவேப்பிலை மற்றும் பெருங்காயம் சேர்க்கவும்.

இதனை அரைத்து வைத்துள்ள வெங்காயத்துடன் சேர்த்து கிளறி விடவும்.

சுவையான வெங்காய கார சட்னி ரெடி.

இந்த சட்னியை இட்லி, தோசையுடன் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும். இந்த குறிப்பினை <b> திருமதி. கீதா ஆச்சல் </b> அவர்கள் அறுசுவை நேயர்களுக்காக வழங்கியுள்ளார். இவரது பெரும்பாலான குறிப்புகள் குழந்தைகளுக்கான, மிக எளிதில் தயாரிக்கக்கூடிய உணவுக்குறிப்புகளாக இருக்கும்.

Comments
சூப்பர்ர்
பார்க்கும் போது சாப்பிடத் தோனுது கீதாச்சல்.தோசையை அழகா சுட்டு எடுத்திருக்கிங்க.எனக்கு இதுபோல அழகா வராது கோணலமானலா வரும்.
எப்படி இப்படி?
நிறைய ரெசிப்பி அனுப்பி அசத்துகிறீர்கள் ?எனக்கும் ஆசைதான்,அவசரமாக சமைக்கும் போது எனக்கு போட்டோ எடுப்பது சிரமமாக தெரியும்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.
aritha venkayathayum
aritha venkayathayum thalithathudan potu kilara venduma ellai thatlithu venkayathudan potal manum pothuma
மேனகா
மேனகா,
மிகவும் நன்றி பா. இது ஒரு பெரிய விஷயமே இல்லை பா…பழக பழக வடிவமாக வரும்..
அன்புடன்,
கீதா ஆச்சல்
நன்றி
ஆசியா அக்கா,
மிகவும் நன்றி.
நிம்மி,
கண்டிப்பாக செய்து பாருங்கள்.
அன்புடன்,
கீதா ஆச்சல்
ஹாய் நிம்மி,
ஹாய் நிம்மி,
நலமா? உங்களை பற்றி சொல்லுங்களேன்.தமிழ்நாட்டில் எந்த ஊர்?
அன்புடன்,
சுபத்ரா.
with love