சங்கீதாவுக்கு பெண் குழந்தை

நம்ம சங்கீதா சிவகுமாருக்கு மார்ச் மாதம் மூன்றாம் தேதி பெண் குழந்தை பிறந்துள்ளதாக எனக்கு மெயில் அனுப்பி உள்ளார்.
சங்கீதாவுக்கும், குழந்தைக்கும் எனது அன்பான வாழ்த்துக்கள். விரைவில் பூரண சுகத்துடன் அறுசுவைக்கு வர வேண்டுகிறேன்.
அன்புடன்,
செல்வி.

பெண்குழந்தை பிறந்தது ரொம்ப சந்தோஷமா இருக்கு.உங்களிருவருக்கும் வாழ்த்துக்கள்!!.பாப்பாக்கு என்ன பெயர்?சீக்கிரம் சுகமாகி அறுசிவைக்கு வாங்க.போன வாரம் தான் உங்களை நினைத்தேன்,இந்த வாரம் செல்விமா பதிவு போட்டுட்டாங்க.தகவல் தெரிவித்த செல்விமாக்கு நன்றி!!

உங்களுக்கு என் அன்பான வாழ்த்துக்கள் சங்கீதா. குட்டிப் பாப்பா என்ன சொல்றார்? :-)
இமா

‍- இமா க்றிஸ்

உங்கள் மகள் எல்லா நலமும் வளமும் பெற்று வாழ வாழ்த்துக்கிறேன்.நல்ல ரெஸ்ட் எடுத்து விட்டு அறுசுவையில் வந்து கலந்து கொள்ளுங்கள்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

ஹாய் சங்கீதா சிவக்குமார் உங்கலுக்கு மனப்பூர்வமான வாழ்த்துக்கள்.

அன்புடன்
ஜெயலக்‌ஷ்மிசுத்ர்சன்

ஹாய் சங்கீதா,

சிங்கப்பூர் தோழிகள் சார்பில் எங்களது வாழ்த்துக்கள்......தாயும், சேயும் என்றும் நலமுடன் இருக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம்.......

அன்புடன்,
ஸ்ரீ
ஜெயஸ்ரீ
சுஜிபாலாஜி
பிரபாதாமு

சங்கீதா வாழ்த்துக்கள்.
பெண்குழந்தை பிறந்ததை அறிந்து மகிழ்ச்சி,உங்க பொண்ணு யாரு மாதிரி இருக்காங்க, என்ன பேர் வைக்கலாம்னு இருக்கீங்க.

சங்கீதா உங்களுக்கும், குட்டிப் பாப்பாவுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள். நீங்கள் இருவரும் எல்லா வளமும் நலமும் பெற்று வாழ வாழ்த்துக்கள். உடம்ப நல்லா கவனிச்சுக்கோங்கப்பா, குட்டியோட பேரென்னனு உடம்பு நல்லான பிறகு வந்து சொல்லுங்க.

அன்புடன் :-).......
உத்தமி :-)

நான் தலைப்பைப் பார்த்ததுமே, யாராக இருக்கும் என நினைத்துக்கொண்டிருந்தேன், சங்கீதா சிவகுமார் என்றதும் தான், இங்கே படம் பார்த்தது நினைவுக்கு வந்துவிட்டது. குழந்தையும் நீங்களும் நலமே இருக்க வாழ்த்துக்கள். குழந்தைகளுக்குத்தான் பல பல வடிவங்களில் ஆடைகள் கிடைக்கிறதே, கடையில் பார்த்தால் அத்தனனயும் வாங்கும் ஆசை வந்துவிடும். எல்லாம் வாங்கி அழகுபார்த்து மகிழுங்கள்.

குழந்தை கிடைத்ததும் எல்லோரும் முதல் மெயில் செல்வியக்காவுக்குத்தான் அனுப்புகிறார்கள் போலும், அதன் ரகசியம் என்ன செல்வியக்கா?:)

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

ஹாய் சங்கீதா!
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் எங்கள் அனைவரின் இதயம் கனிந்த நல்வாழ்த்துக்கள்!
இதற்கு முன்பு உங்களிடம் நான் பேசியதில்லை. அறுசுவையில் அனைவரும் என்னுடைய ஆத்மார்த்தமான தோழிகளே!
குட்டிப்பாப்பாக்கு என் அன்பான முத்தங்கள்!
அன்புடன்,
சாய்கீதாலக்ஷ்மி & குடும்பத்தினர்!

ஹாய் சங்கீதா உங்கல்லுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்ப்பா.......

நீங்கலும் குழந்தையும் நோய் நெடி இன்றி வாழ வாழ்த்துக்கள்ப்பா.....

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*

மேலும் சில பதிவுகள்