டிஷ் வாஷர் பற்றி யாருக்காவது தெரியுமா?

நான் டிஷ் வாஷர் வாங்கலாம் என்று கடைக்குப் போனேன். அவர்கள் IFB ஒரு கம்பெனி தான் உள்ளது. விலை 23,000-28,000 வரை மாடல் பொறுத்து என்றார்கள். ஆனால் எந்த கடையிலும் பீஸ் இல்லை. ஆர்டர் பண்ணினால், வாங்கித் தருவோம் என்றார்கள். அது பற்றி எனக்கு எதுவும் தெரியாததால், தெரிந்தவர்கள் சொல்லுங்களேன், ப்ளீஸ்.

1.எப்படி உபயோகிப்பது?
2.நன்றாக கழுவுகிறதா?
3.என்ன டிடெர்ஜண்ட் போடணும்?
4.குக்கர் போன்ற பெரிய பாத்திரங்கள் கழுவ முடியுமா?

வாங்கலாம் என்று இருப்பதால், சரியான நேரத்தில், சரியான பதில் தந்தால் உபயோகமாக இருக்கும்.

சுமஜ்லா

அன்பு சுஹைனா! நலமா? என்னைத்தவிர எங்க சொந்தக்காரங்க அநேக பேர் வீட்டிலும் டிஷ் வாஷர் யூஸ் பண்ணுகிறார்கள். அதை வாங்கும் முன் அதனால் உடல் உழைப்பு இன்னும் குறையுமே என்று யோசித்தே ரொம்ப நாட்கள் வாங்காமல் இருந்தவர்கள், வாங்கிய பிறகுதான் அதன் அருமை தெரிகிறது என்று சிலாகித்துதான் சொல்கிறார்கள். நம் ஃபிரெண்ட்ஸ் சொல்வதுபோல் இதில் ஒருசில மைனஸ் பாயிண்ட்ஸ் இருந்தாலும், எனக்கு தெரிந்த ஒரு சிலவற்றை கூறுகிறேன்.

1)அலுமினிய பாத்திரங்கள் போட்டால், அதிக டெம்ப்ரேட்சரில் வரக்கூடிய சூடான தண்ணீருடன் நாம் அதற்காக யூஸ் பண்ணும் க்ளீனிங் பவுடர் மற்றும் லிக்யூடுகள் சேர்ந்தவுடன் அதன் வெண்மையான நிறம் மாறி, அவை கறுத்து போய்விடுகின்றன. அலுமினிய குக்கரும் அப்படிதான். சில்வர் குக்கர் என்றால் பிரச்சனையில்லை.

2) பால் பாத்திரங்கள் மற்றும் அடிபிடித்த எந்த பாத்திரமாக இருந்தாலும், சோப்பில்லாமல் வெறும் கம்பி பிரஷ் போட்டு தேய்த்துவிட்டுதான் போடவேண்டும்.

3) அடிபிடிக்காத சில்வர் பாத்திரங்கள் மற்றும் பீங்கான் பாத்திரங்களை, உணவுப்பொருட்கள் ஏதும் ஒட்டியிருந்தால் அவற்றை மட்டும் வழித்து போட்டுவிட்டு பாத்திரங்களை கழுவாமல் அப்படியே போடலாம். கறிவேப்பிலை, முட்கள், புளியங்கொட்டை, பேரீத்தங்கொட்டை என்று எதுவாக இருந்தாலும் அவை தண்ணீர் செல்லும் பாதையில் அடைத்துக்கொண்டு மெஷினை பழுதாக்கிவிடும். நாம் போடாவிட்டாலும் பிள்ளைகள் போட்டுவிடாமல் அதில் கவனமாக இருக்கவேண்டும். மற்றபடி கழுவியெல்லாம் போடத்தேவையில்லை. எவ்வளவு எண்ணெய் பிசுக்காக இருந்தாலும் சூப்பராக க்ளீன் பண்ணிவிடும்.

4) ஸ்பூன், டம்ளர், ப்ளேட்களுக்கு அதற்கென கொடுக்கப்பட்டிருக்கும் ஏரியாவில் வைத்துவிடலாம். மற்ற பாத்திரங்களை தண்ணீர் உள்ளே சென்று கழுவுவதற்கு ஓரளவு இடம் விட்டு அடுக்கவேண்டும்.

5) கழுவி, காயவைத்த பிறகு அப்படியே யூஸ் பண்ணக்கூடாது. எப்போது யூஸ் பண்ண எடுக்கிறீர்களோ அப்போது மட்டும் தண்ணீர்விட்டு வெறும் கையால் கொஞ்சம் தேய்த்துவிட்டுதான் யூஸ் பண்ணவேண்டும். அதற்காக போடும் கெமிக்கல் அதில் மென்மையாக படிந்திருக்கும், அதனால்தான்!

6) ஒரு நாளிலேயே பலமுறை யூஸ் பண்ணும் பாத்திரங்களை மட்டும் 2 செட் வைத்துக்கொண்டால், மெஷினில் 1 செட் ஓடிக்கொண்டிருக்கும்போது முதலில் கழுவி கொடுத்தவற்றை யூஸ் பண்ணிக்கொள்ளலாம். அதில் போட முடியாத சற்று பெரிய பாத்திரங்கள் மற்றும்(முன் சொன்னதுபோல்) அலுமினிய பாத்திரங்கள் இவற்றை மட்டும் நாம் கழுவிக்கொள்ளவேண்டியதுதான்.

7) ப்ளாஸ்டிக் பாத்திரங்களாக இருந்தால், மைக்ரோ அவனில் வைப்பதற்கு தகுதியானதான பொருட்களை மட்டும் டிஷ் வாஷரில் போடலாம். ஒரு முறை ஹாட் பேக்கில் டிஃபன் வைத்து ஒரு வீட்டிற்கு கொடுத்தனுப்பினேன். திரும்பி வரும்போது, மூடி மூன்று பார்ட்டாகவும் பாக்ஸ் மூன்று பார்ட்டாகவும் இனப்பெருக்கமாகி வருகிறது :-) ஸாரி, டிஷ் வாஷரில் போட்டு இப்படி ஆகிவிட்டது என்று சொல்லி தந்தார்கள்.

மற்றபடி நம்மூர் சமையல், நம்மூர் பாத்திரங்கள் என்று பிரித்தெல்லாம் பார்க்கவேண்டியதில்லை. நான் நேரில் பார்த்தவரை, யூஸ் பண்ணிய சொந்தங்கள் சொன்னவரை இது மிகவும் பயனுள்ளதுதான். கையில் ஏற்படும் சோப்பின் பாதிப்புகளிலிருந்து பெரும்பாலும் தவிர்ந்துக்கொள்ளலாம். விருந்து சமயங்களில் சேரக்கூடிய அதிகப்படியான பாத்திரங்களை கழுவி கரை சேர்க்கவும், எத்தனையோ நேரங்களில் தண்ணீரில் கைவைக்க முடியாமல் கஷ்டப்படும்போதெல்லாம் இது பெரும் உதவியாக இருக்கும். இதிலுள்ள ப்ளஸ் & மைனஸ் பாயிண்ட்களை எனக்கு தெரிந்தவரை சொல்லியுள்ளேன். என்னைப் பொறுத்தவரை அதிகமான ப்ளஸ் பாயிண்ட்ஸ்தான் ! :)

அன்புள்ள சுஹைனா
அஸ்மா எலுதிய கருத்துக்கள் அனைத்தும் சரியே.அலுமினிய பாத்திரங்கள்,அலுமினிய குக்கர் நான் போடுவதில்லை.குப்பகளை எடுத்துவிட்டு அடுக்கி வைத்திடுவேன்.ஒரு முறை தெரியாமல் ஹாட் பேக் மூடீ வைத்து விட்டேன் அஸ்மா சொல்லிய்யது போல குண்டாக வெளியே வந்தது.பீங்கான் பாத்திரங்கள்,சில்வர் பாத்திரங்கள் மிண்ணல் அடிக்கும்.அடிபிடித்த பாத்திரங்கள் இலேசாக தேய்த்து விட்டு டிஷ் வாஷரில் வைத்திடுவேன்.நான் நம்ம ஊர் சமையல் தான் செய்கிறேன்.அஸ்மா சொல்லியது போல இரண்டு செட் தட்டுகள்,ஸ்பூன்,டம்ளர் அப்படித்தான் வைத்துக் கொள்கிறேன்.வெளிநாட்டில் தண்ணீர் பிரச்சனையும், கரண்ட் போகும் பிரச்சனையும் கிடையாது.இங்கு குளிர் காரணமாக எனக்கு டிஷ் வாஷர் ஒரு உற்ற தோழி.

அன்புடன் பர்வீன்.

ஹாய் சுஹைனா!
இன்னும் ஏன் தாமதம்? புயலென புறப்பட்டு போய் டிஷ் வாஷர் வாங்கி யூஸ் பன்ணீட்டு நீங்களும் எனக்கு அதன் நன்மை, தீமைகள் பற்றி சொல்லுங்க சீக்கிரம். இங்கு கரண்ட், தன்ணீர் எல்லாமே வாடகையுன் சேர்த்துதான்.
இப்பதான் எனக்கும் கொஞ்சம் தெளிவு கிடைத்திருக்கு. நீங்களும் சொல்லிட்டா நிம்மதியாய்டும்.
பாத்தீங்களா, என்ன ஒரு அக்கறை உங்கமேல எனக்கு(:-)

டிஷ் வாஷர்
எல்லோருடைய கருத்துக்களும் ஒவ்வொரு விதத்தில் எனக்குச் சரியாகவே படுகிறது. ஆனால் என்னைப் பொறுத்து வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு இந்த டிஷ் வாஷர் மிகவும் பயனுள்ளதாகவே இருக்கு. ஆனால் ஊரில் இருப்பவர்களுக்கு இதனால் பெரிதாக நன்மை என்று சொல்ல முடியாது.

அஸ்மா கூறிய 3 ஆவதிலுள்ள வரிகள் அப்படியே என்னுடைய கருத்தோடு ஒத்துப்போகிறது. வெளிநாட்டில் தண்ணிக்கு பில் என்பதால் (முக்கியமாக சுடுநீர்) நேரே பைப்பைத் திறந்துவிட்டுக் கழுவுவதை விட மெஷினில் கழுவும்போது தண்ணிச் செலவு குறைவாகிறது. அதாவது நாம் பைப்பில் தனிய பச்சைத்தண்ணீர் மட்டும் பாவித்து கழுவமுடியாது. சுடுநீர் பைப்பும் திறக்க வேண்டும்.

ஊரில் இந் நிலை இல்லையென்பதால், கையால் கழுவுவதால் இச் செலவு மிச்சம். அடுத்து எந்த மணக்கும் பாத்திரமானாலும், மணத்தைப் போக்கித் தரும்(சில வகை மீன் மணங்கள்....) ஊரில் என்றால் கழுவி ஒரு தடவை வெயிலில் வைத்தால் சரி.

அடுத்து முக்கியமாக விருந்தினர் வந்து போனால் இது பெரிதும் கை கொடுக்கிறது. பரிமாறும் பாத்திரம் தொடங்கி கறண்டி வகைகள், டிசேட் கப்ஸ் இப்படியானவற்றை விருந்தினர் போனதும் மெசினில் தூக்கிப் போட்டுவிட்டு ஓடிப்போய்ப் படுத்து ஓய்வெடுக்கலாம்:), ஓரளவான பாத்திரங்களே அடுக்கலாம். அதிகம் கறைப் பிடித்ததென்றால் கழுவித்தான் போடவேண்டும், ஏனையவற்றை கழுவத் தேவையில்லை. அஸ்மா சொன்னதுபோல் உணவு எதுவும் இல்லாமல் , சும்மா துடைத்துப் போட்டால் போதும். அதற்கென மெஷினில் ஒரு வடி தட்டு இருக்கு, அதை இடைக்கிடை சுத்தம் செய்தால் சரி.

கையால் எப்படிக் கழுவினாலும் பழபழக்காது, ஆனால் மெஷினில் பழபழப்பாகும். அதற்கென உரிய சோப்பை மட்டுமே பாவிக்க வேண்டும். அந்தர அவசரத்துக்குக்கூட வேறு பாவிப்பது நல்லதல்ல.

சிலபேர் என்ன செய்கிறார்களென்றால், காலைமுதல், பாத்திரங்களை பாவித்தவுடன் உள்ளே அடுக்கி விடுகிறார்கள், மாலையில் ஒன்றாகச் சேர்த்து மெஷினைப் போடுகிறார்கள். ஆனால் இது என்னைப் போன்றவர்களுக்கு கஸ்டமே. நான் உடனுக்குடன் கையால் கழுவிவிடுவேன். இடைக்கிடைதான், மினுங்கட்டுமே என மெஷினைப் போடுவேன். ஊரில் அதுவும் தண்ணி வசதி இருப்பவர்களுக்கு இது உகந்ததல்ல.

சிலசமயம் கபேட்டாகப் பாவிக்கவும் இது கை கொடுக்குதல்லோ:)

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

மேலும் சில பதிவுகள்