ஹாய் ஜாலியா அரட்டை அடிக்க இங்கே வாங்க (பாகம் 66)

ஹாய் தோழிகளே 65 நூறுவுடன் முடித்து கொண்டு இங்கே தொடருங்க அரட்டையை. எல்லோரும் தனித்தனி ஊராக பிரிந்து அரட்டை அடிக்காமல் அனைவரும் இங்கே வந்து தொடருங்க

ப்ரபா என்னை உத்ரானு கூப்பிடுங்க.

இல்லை அமர்/AAA/அஅஅ தான் அதை விட பிடிச்சிருக்குன்னா அப்படியே கூப்பிடுங்க.உங்க இஷ்டம்.
Patience is the most beautiful prayer!!

Patience is the most beautiful prayer!!

உத்ரா எப்படியிருக்கீங்க? நானே ப்ரபா கிட்ட சொல்லலாம்னு இருந்தேன், அதுக்குள்ள நீங்களே சொல்லீட்டீங்க.

ப்ரபா நலமாப்பா?

அன்புடன் :-))
உத்தமி :-))

உத்தமி அக்கா நான் நலம். நீங்க பாஸ்கர் நலமா இருக்கிங்கலா?

உத்ரா தவறாக என்ன வேண்டாம். அந்த பெயர் எனக்கு கடினமா இருந்தாது. அதனால் தான் கேட்டேன். உத்ரா உங்க பெயரா நல்ல இருக்குப்பா.

" வாழ்க வளமுடன் "
பிரபாதாமு

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*

ப்ரபா நாங்க நலம்ப்பா. எங்க ரெண்டு மூனு நாளா ஆளையே காணோம், பிசியா. ஏன், சமைத்து அசத்தலாம் பகுதிக்குள்ள மட்டும் எட்டியே பாக்குறதில்லை?

அன்புடன் :-))
உத்தமி :-))

என் பெயர் பிடித்ததில் சந்தோஷம் ப்ரபா.அதானே ஏன் கொஞ்ச நாளா ஆளே காணோம் உங்களை?

உத்தமி நான் நலம்.நீங்க எப்படி இருக்கீங்க?

Patience is the most beautiful prayer!!

Patience is the most beautiful prayer!!

உத்ரா நாங்களும் நலம்ப்பா. எனக்கும் உங்க பேரோட சேர்த்து உங்களையும் பிடிக்கும், ஏன்னா நீங்களும் என்ன மாதிரியே சாதப் பார்ட்டியாச்சே. எனக்கு, எதுன்னாலும் தயிரோட சேர்த்துச் சாப்பிட மிகவும் விருப்பம்.

அன்புடன் :-))
உத்தமி :-))

ஹாய் நெட்டு ரொம்ப ஸ்லேவா ஓப்பன் ஆகுதுப்பா. அதனால கஷ்டமா இருக்கு அதான் அந்தமாதிரி சமைத்தல நான் வரது இல்ல.

சமைத்து அசத்தலாம் பகுதிக்குள்ள மட்டும் எட்டியே பாக்குறதில்லை?
எனக்கு அந்த அலவுக்கு சமையல் வராது. ஓரலவுக்கு செய்வேன்.

அதுமட்டும் இல்ல அதுல என்ன பதில் போடுரது தெரியாது.

என் அஸ்க்கு கொலஸ்ரால் இருக்கிரது. அதனால் சாப்பட்டி கன்ரேல்லா இருப்பதால் இதில் ஒருசிலது செய்வேன்.

நல்லா செய்யனும் ஆலைதான் ஆனால் முடிய வில்லை. பார்த்து செய்தாலும் ஏதாவது செதப்பல் வந்துடுது. எனக்கு சரியா வரலை. சரியா வந்தா கட்டயம் நான் அதர்க்கு கீழ் பதில் போடுவேன். ஒருசிலது போடனும் நினச்சு மரந்துருவேன். அதனால் தான் வரமாட்டேன்.

அங்க என்ன செய்யனும் செல்லுங்க்கா நான் வந்து கலந்துக்குரேன்.

இதை படித்து யாரும் தவறாக எனனா வேண்ண்டாம்.

" வாழ்க வளமுடன் "
பிரபாதாமு.

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*

ப்ரபா அறுசுவையப் பத்தி அட்டகாசமா எழுதி இருக்கீங்களே :-))

அப்படியா உத்தமி.என்ன தான் விருந்துல வகை வகையா சாப்பிட்டாலும் எதுவும் நம்ம தயிர் சாதம்+ஊறுகாய்க்கு இணை ஆகாது.சில சமயம் பார்ட்டிகளில் தயிர் சாதம் இல்லையேனு ஏங்கும் ஆள் நான்.Ha ha.

சோத்துக் கட்சி ஆரம்பிச்சிடலாம் நம்ம.யாரெல்லாம் உறுப்பினர்களா வர்றீங்க?

நான் இப்போ கிளம்பறேன்.இன்னொரு நாள் பாக்கலாம்.Tata.

Patience is the most beautiful prayer!!

Patience is the most beautiful prayer!!

உத்ரா, ஆமாப்பா நானும் அதே கேஸ்தான். ஆனா எங்க போனாலும் தயிர் நானே அவங்க ஃப்ரிட்ஜ்ல இருந்து எடுத்து சாப்பிட்டிருவேன்ப்பா, அப்பத்தான் பினிசிங் டச் திருப்தியாயிருக்கும். எல்லாத் தோழிகளுக்கும் தெரியும், அதனால 90 பர்சென்ட் அவங்களே எடுத்து வச்சிருவாங்க.

அன்புடன் :-))
உத்தமி :-))

ப்ரபா, இந்த வாரம் யாரோட சமையல்னு நம்ம அதிரா சொல்வாங்க, அவங்களொட சமையல் குறிப்பு பகுதீல போய் உங்களுக்கு பிடித்ததாவும், உங்க ஹஸ்ஸோட கொலஸ்ட்ராலுக்கு தகுந்ததாவும் குறிப்புக்களை நோட் பண்ணி சமைச்சுட்டு, சமைத்து அசத்தலாம் பகுதிக்குப் போய் நம்ம அதிரா, ரேணுகிட்ட சொன்னா அவங்க பார்த்துப்பாங்க உங்கள எப்படி மேற்கொண்டு சமைக்க வெக்கறதுன்னு, ஒவ்வொரு நாளும் நீங்க சமைக்கறத அவங்ககிட்ட சொல்லனும்ப்பா. அங்க போய் படிச்சுப் பாருங்க இன்னும் நல்லாப்புரியும்.

அன்புடன் :-))
உத்தமி :-))

மேலும் சில பதிவுகள்