ஹாய் ஜாலியா அரட்டை அடிக்க இங்கே வாங்க (பாகம் 66)

ஹாய் தோழிகளே 65 நூறுவுடன் முடித்து கொண்டு இங்கே தொடருங்க அரட்டையை. எல்லோரும் தனித்தனி ஊராக பிரிந்து அரட்டை அடிக்காமல் அனைவரும் இங்கே வந்து தொடருங்க

இலா... அதை பார்க்கனும்'னு உடனே தேடின உங்க ஆர்வத்தை நான் பாராட்டுறேன். :) எனக்கு இங்க யூ டியூப், ப்லாக்'லாம் பெர்மிஷன் கிடையாது. அதனால் பார்க்க ஆசை பட்ட சூக் தான் போனும்.

ஜெயா... அது எப்படி மறந்திருப்பேன்னு நினைச்சீங்க??? மறக்கறமாதிரியா ஓடுனீங்க??!! :( அந்த சோகமான நாளை நான் என்னன்னு சொல்ல....

செல்வி... நல்லா இருக்கீங்களா??? :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நல்லா இருக்கேன்.நீங்கள்,யாழினி குட்டி நலமா?அருசுவை ஓபன் ஆக லேட் ஆகுது.

சவுதி செல்வி

ஹாய் இலா ஓகே ஆன்லைன்ல வந்தா கண்டிப்பா பேசலாம் பா.

ஹாய் வனிதா அருச்சுவையை சைலண்டா படிக்கலாம் நினைச்சா நிங்க பதிவு போட வச்சுர்ரீங்க....ஓகே ஆமம் அன்னைக்கு தோசை கதை நல்லா ஜாலியாதானே இருந்தது ஏன் சோகம்முனு சொல்றிங்க? ஓழுங்கா இஎதுக்கு வந்து பதில் சொல்லுங்க .....

ஹாய் ஜெயா!!! என்ன இந்த நேரத்தில??!!! ஏன் சைலன்ட்.. வாங்க வந்து இந்த பாட்டி/பேத்தி விஷயத்துக்கு ஒரு பஞ்சாயத்து சொல்லுங்க.

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

இலா, நல்லா இருக்குப்பா இந்த லிங்க். அது தான் எல்லோரும் இவ்ளோ வேகமா டைப் பண்ணுறீங்களா? நானும் அப்ப இந்த பக்கத்தை புக் மார்க் செஞ்சுட்டு இங்க இருந்தே பதிவு போடறேன்.

இப்படிக்கு,
சந்தனா

//"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..//இந்த வரிகள் சூப்பர்.எங்கயிருந்து இந்த வார்த்தையெல்லாம் கண்டுபிடிக்கிறிங்க.சொல்லுங்க இலா.

வனி,கவி,தனீ,ஜெயா,செல்வி,கீதா,ப்ரபா எங்கே?

வனிதா பாவம் பா நீங்க!! எல்லோரும் உங்களை அநியாயத்துக்கு கலாய்க்கறாங்க !! நீங்களும் சளைக்காம பதில் (அடி) குடுக்கறீங்க !!!

எனக்கும் ஒரு சந்தேகம் - எப்படி வனிதாவால பாப்பா வச்சுட்டு இவ்ளோ வால்த்தனம் பண்ண முடியுதுன்னு ?? (ஹீ ஹீ என் பங்குக்கு நானும் கொஞ்சம் ஓட்டிக்கறேன் :))

இப்படிக்கு,
சந்தனா

எல்லோரும் நலமா?

என்ன வனி,
ரொம்ம்ப ஃப்ரீயா? ஒவ்வொருத்தரா வாரிகிட்டு இருக்கே. சிரியா தொடர் ரொம்ப அருமையா இருக்கு. தொடர் முடியறதுக்குள் அறுசுவை தோழியர் நிறைய பேர் உன் வீட்டுக்குத்தான் வருகை. ஜாக்கிரதை.
இலா,
வீட்டில் இருந்தா நல்லா சமைக்கணும். வீட்டை கிளீன் பண்ணனும். எப்பப் பார் அறுசுவையில் யாரை வாரலாம்னு இருக்கக் கூடாது:-)
ஹாய் கீதா,
நலமா? மீன் குழம்பு செய்தாச்சா?
செல்வி,
எங்கப்பா சரியா வரதே இல்லை?

ப்ரபா, நான் நலம், நீ நலமா? தமிழ் தப்பாக வந்தாலும் மாற்றாதேம்மா. உன் ஆர்வம் உன்னை தப்பில்லாம எழுத கொண்டு வரும். நம் ரூபி கூட முன்ன அப்படித்தான். இப்பல்லாம் பதிவு போட்டாலே இத்தனாம் பெரிசுதான்.

உத்தமி (ஞாபகமா கூப்பிட்டுட்டேன்)
பாஸ்கர் எக்ஸாம் எப்ப? மேல் படிப்பு எங்கே?

உத்ரா,
நலமா? அப்பப்ப வந்து போறே.

கவி,
நலமா?(கேட்டுட்டேன்). சாம் நலமா?

ஜலீலா,
இனி ரொம்ப ஃப்ரீயா? நான் சொன்னதை யோசிச்சீங்களா? டென்ஷன் இல்லாம பசங்களை எங்காவது கூட்டிப் போங்க.

தனீ,
அப்ரா நலமா? என்ன ஹாஸ்பிடலுக்கு? யாருக்கு உடம்பு சரியில்லை? மெயில் பார்க்கலையா?

ஜெயா,
நலமா? கொஞ்சம் அப்பப்ப சமைத்து அசத்தலாம் பகுதிக்கும் எட்டிப் பாரேன். (சமைச்சாத்தானேன்னு சொல்றது காதில் விழுது).

இமா,
எங்க ஆளையே காணோம்? குறிஞ்சா கண்டு பிடிச்சதும் பயந்திட்டீங்களோ? மணத்தக்காளிக்கு அலர்ஜி வராதுன்னு ஹோமியோ டாக்டர் சொன்னார்.

சுரேஜ்,
நலமா? வாந்தி எப்படி இருக்கு? மாதுளம் ஜூஸ் நிறைய குடி. உனக்கு தெரியாதா மனசுக்குள் சமைப்பது எப்படின்னு? நீ இந்தியா வரும் போது சொல்லித் தர்றேன்:-)

மேனு,
ஷிவானியும், நீயும் நலமா? சாப்பாடு கொடுக்க ஆரம்பிச்சிட்டியா?

ரூபி,
உடம்பு பரவாயில்லையா? நல்லா சாப்பிடு. உடம்பை பார்த்துக்கோ.

ஆசியா,
ஸாதிகாவை இன்று போனில் கூப்பிட்டேன். அவங்க கொஞ்சம் பிசி. அதனால பேச முடியலை. நீங்களும் பின்னூட்டத்திற்கு பதில் கொடுத்து முடியுங்க.

சுகன், நலமா? பேசி ரொம்ப நாளாச்சு.

தீபு,
எங்கே ஆன்லைனில் வரவே இல்லை. விரதம் நல்லாப் போறது சந்தோஷம்.

வானு, மாலி, மைதிலி, கீதாச்சல், ஹுசைன், சுஸ்ரீ,
ஜெயந்தி, அஸ்மா, மனோகரி எல்லோருக்கும் விசாரிப்புகள்.
யாரும் விடுபட்டுப் போனா கோபம் வேண்டாம்.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

மேனு! செல்வி! நேத்து என் பிரெண்ட் கிட்ட பேசிகிட்டு இருக்கும்போது ரொம்ப கவிதையா ( வாழ்க்கை/முன்னேறுவது பற்றி ) சொல்லிட்டு இருந்தாங்க. இது யாரோ எழுதியது தான் ஆனாலும் அவங்க மனதை தொட்டதுன்னு சொன்னாங்க. அதுதான் அவங்ககிட்ட சொல்லிட்டு காப்பி அடிச்சுகிட்டேன்.
மிசஸ் சேகர்! நான் இன்னும் எழுத்துதவிதான் பயன்படுத்தறேன். இது யாரோ சொல்லி தான் தெரியும். அதில அண்ணஞ் என்று எழுதினால் அண்ணன் என்று திருத்தும். பல வார்த்தைகள் அதுவும் திருத்துவதில்லை.பாவம் சாப்ட்வேர் என்ன செய்யும்.. தமிழ் பிறந்ததில இருந்து பேசி/படித்து/எழுதி இருக்கும் நமக்கே இப்படின்னா....

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

இலா, எழுத்துதவி ல டைப் அடிக்க வசதியா இருந்தாலும் பெரிய பதிவு போட கஷ்டமா இருக்கு. நாலு வரி டைப் பண்ணிட்டா தமிழ் fonts பார்க்க முடியறதுல்ல. ஒவ்வொருவாட்டியும் cursor வச்சு இழுக்க வேண்டியதா இருக்கு. இதுல நெறைய இடம் இருப்பதால் எளிதாக உள்ளது.

இப்படிக்கு,
சந்தனா

மேலும் சில பதிவுகள்