மைக்ரோவேவ் மைசூர் பாகு

தேதி: March 23, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 4 (2 votes)

 

கடலை மாவு – ஒரு கப்
நெய் – ஒரு கப்
பொடித்த சர்க்கரை – 2 கப்
ஏலக்காய் தூள் – அரைத் தேக்கரண்டி
பால் – 1/8 கப்


 

மைசூர் பாகு செய்ய தேவையானவற்றை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் கடலை மாவை எடுத்துக் கொண்டு அதனுடன் நெய்யை சேர்த்து நன்றாக கிளறி விடவும்.
கலந்து வைத்திருக்கும் இந்த கடலை மாவு கலவையை அவனில் ஒரு நிமிடம் வைக்கவும்.
பிறகு அதனை வெளியில் எடுத்து அதனுடன் பொடித்த சர்க்கரை சேர்த்து மேலும் 2 நிமிடம் வைக்கவும்.
2 நிமிடம் கழித்து இந்த கடலை மாவு கலவையை மைக்ரோவேவ் அவனிலிருந்து வெளியில் எடுக்கவும்.
இப்பொழுது அதில் பால் மற்றும் ஏலக்காய் தூள் சேர்த்து நன்றாக கிளறி 2 நிமிடம் வைக்கவும்.
ஒரு தட்டில் நெய் தடவி அதில் இந்த கலவையை கொட்டி சமப்படுத்தி விடவும்.
பிறகு துண்டுகள் போடவும். சுவையான எளிதில் செய்யக் கூடிய மைசூர் பாகு ரெடி. இந்த குறிப்பினை <b> திருமதி. கீதா ஆச்சல் </b> அவர்கள் அறுசுவை நேயர்களுக்காக வழங்கியுள்ளார். இவரது பெரும்பாலான குறிப்புகள் குழந்தைகளுக்கான, மிக எளிதில் தயாரிக்கக்கூடிய உணவுக்குறிப்புகளாக இருக்கும்.

கடலை மாவினை கடாயில் போட்டு வறுத்து கொள்ளவும். இல்லை என்றால் சில சமயம் மாவின் வாசம் வரும். அவரவர் மைக்ரோவேவ் திறன் பொருத்து சமைக்கும் நேரத்தினை கூட்டியோ அல்லது குறைத்தோ செய்யலாம்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

lakshmi ravindran
my microoven is lg convection what mode and how long can i keep, my kids and my hubby love mysorepak, thanks for good recipe

lakshmi ravindran

லக்ஷ்மி.. என்னுடையது அதே தான்... HI'ல் வைங்க. இவங்க சொன்ன இதே நேரம். ஆனா 2 நிமிஷம்'னு சொல்லும் போது 1 நிமிடம் விட்டு எடுத்து கிளறி வைங்க. இல்லை என்றால் அங்கு அங்கு தீயும். மற்றபடி இவர்கள் சொன்னதையே அப்படியே செய்யுங்கோ.... ரொம்ப நல்லா வரும், நான் ஏற்கனவே செய்திருக்கேன். :) செய்துட்டு சொல்லுங்கோ... கீதா ரொம்ப சந்தோஷ படுவாங்க. அவங்க பார்க்கலைன்னு நினைக்கிறேன், அதன் பதில் போடலை... வருவாங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

lakshmi ravindran

thankyou for your immediate reply and iwill try immidiatly and later i inform you and geetha

lakshmi ravindran

hi

totally 6 min pothuma mysorepak seivatharuku.

வாழ்க வளமுடன்

hi

totally 6 min pothuma mysorepak seivatharuku.

வாழ்க வளமுடன்

வனிதா மிகவும் நன்றி.
லக்ஷ்மி, கண்டிப்பாக செய்து பாருங்கள். நன்றாக வரும். செய்வது மிகவும் ஈஸி.
ஷாலினி,
உங்களுடைய மைக்ரேவேவ் திறனினை பொருத்து நீங்கள் டைமினை கூட்டியோ அல்லது குறைத்தோ செய்யுங்கள்.. ஆனால் பெரும்பாலும் 5 – 6 நிமிடம் போதும் .
அன்புடன்,
கீதா ஆச்சல்.

hi
simply superb I try all ur recipes. My husband enjoyed it.
came out very well as per your instructions.
Keep giving good receipes.
Happy ugadhi to you and your family
gayathri

மைசூர் பாகு ட்ரை பண்ணினேன் ரொம்ப நல்ல வந்தது ,ஈசி method சொன்னதுக்கு மிக்க நன்றி .

kavitha

மைசூர் பாகு ட்ரை பண்ணினேன் ரொம்ப நல்ல வந்தது ,ஈசி method சொன்னதுக்கு மிக்க நன்றி .

kavitha

காயத்ரி
மிகவும் நன்றி . இப்பொழுது தான் நான் பதிவினை பார்த்தேன். யுகாதி பண்டிகையிற்கு வாழ்த்தியதற்கு மிகவும் நன்றி.
அன்புடன்,
கீதா ஆச்சல்

கவிதா,
மிகவும் நன்றி . அருசுவை உருப்பினர் ஆனவுடன் இந்த ஸ்வீட்டினை செய்துவிட்டு உடனே பின்னுட்டம் அனுப்பியதற்கு மிகவும் நன்றி.
அன்புடன்,
கீதா ஆச்சல்

realy it come very super and very dastey now only i prepare and taste it
வாழ்க வளமுடன்

வாழ்க வளமுடன்

தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி ப்ரியா.
அன்புடன்,
கீதா ஆச்சல்

அன்பின் கீதா அக்கா,இந்த குறிப்பை உடனே செய்து பார்க்க ஆசையாக உள்ளது.பால் 1/8 என்றால் எந்தளவு வரும்?அதாவது எத்தனை மே.கரண்டி வரும் என்று கூறமுடியுமா?

busy has no time 4 tears