முருங்கைக்காய் மாங்காய் சாம்பார்

தேதி: March 24, 2009

பரிமாறும் அளவு: 6 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 3 (2 votes)

 

முருங்கைக்காய் - 2
மாங்காய் - 1
துவரம் பருப்பு - 1 கப்
சின்ன வெங்காயம் - 150 கிராம்
பச்சை மிளகாய் - 3
தக்காளி - 3
மிளகாய்த்தூள் - 2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
பெருங்காயத்தூள் - 1/4 தேக்கரண்டி
புளி - எலுமிச்சை அளவு
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
வறுத்து அரைக்க :
காய்ந்தமிளகாய் - 6
சீரகம் - 1 தேக்கரண்டி
மிளகு - 1 தேக்கரண்டி
வெந்தயம் - 1 தேக்கரண்டி
துவரம் பருப்பு - 1 தேக்கரண்டி


 

துவரம் பருப்பை மஞ்சள், உப்பு, பெருங்காயம் சேர்த்து வேகவைத்து எடுக்கவும்.
அரைக்க கொடுத்த பொருட்களை வறுத்து அரைக்கவும். புளியைக் கரைத்து வைக்கவும்.
முருங்கைக்காய், மாங்காய், வெங்காயம், தக்காளியை நறுக்கி வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு கடுகு போட்டு, அது வெடித்ததும் வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் தக்காளியைச் சேர்த்து வதக்கவும்.
தக்காளி வதங்கியதும் முருங்கைக்காய், மாங்காயைப் போட்டு 2 நிமிடம் வதக்கவும்.
பின்பு மஞ்சள், மிளகாய்த்தூள், உப்பு போட்டு கலந்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து வேக விடவும்.
காய் வெந்ததும் வேக வைத்த பருப்பை சேர்த்து, புளிக்கரைசலையும் விட்டும் கொதிக்கவிடவும்.
கொதித்ததும் அரைத்து வைத்துள்ள மசாலாப் பொடியைச் சேர்த்து 2 நிமிடம் கொதிக்கவிட்டு கறிவேப்பிலை தூவி இறக்கவும்.


இது இட்லி, தோசை, சோறு, புட்டுக்கு மிகவும் சுவையாக இருக்கும்.

மேலும் சில குறிப்புகள்


Comments

இன்று இந்த முருங்கைக்காய் மாங்காய் சாம்பார் (கூட இன்னும் சில காய்களும்-‍ அவரைக்காய், கத்திரிக்காய், குடை மிளகாய் சேர்த்து கதம்ப சாம்பாராக‌) செய்தேன். சாதத்துடன் சாப்பிட சுவையாக இருந்தது. நன்றி!

அன்புடன்
சுஸ்ரீ

அன்புடன்
சுஸ்ரீ

ஹாய் சுஸ்ரீ, நீங்கள் முருங்கைக்காய் மாங்காய் சாம்பார் செய்து பின்னூட்டம் அனுப்பியதற்கு மிக்க நன்றி.

நன்றி,
"அன்பான சொல் மருந்தாக இருப்பதோடு வாழ்த்தவும் செய்கிறது"

MANGAI SAMBAR SEIYA AASAI.NANDRI!

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...