காரட் கேக்

தேதி: March 25, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 3 (1 vote)

டயட்டில் இருப்பவர்களுக்கு இந்த கேக் மிகவும் நல்லது. ஏனெனில் இதில் ப்ரெளன் சுகர் மற்றும் ராப்ஸ் எண்ணெய் சேர்ப்பதால் கொழுப்பு சத்து மிகவும் குறைவாக உள்ளது.

 

காரட் - 380 கிராம் (தோல் சீவிய பின்பு 380 கிராம் இருக்க வேண்டும்)
ப்ரெளன் சுகர் - 300 கிராம்
முட்டை - 4
மைதா - 300 கிராம்
ராப்ஸ் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் - 200 மி.லி
கறுவாத்தூள் - 2 தேக்கரண்டி
ஆப்ப சோடா - ஒரு தேக்கரண்டி
பேக்கிங் பவுடர் - 2 தேக்கரண்டி
வெனிலா எசன்ஸ் - 2 தேக்கரண்டி
உப்பு - ஒரு சிட்டிகை


 

மைதா மாவுடன் பேக்கிங் பவுடர், ஆப்ப சோடா சேர்த்து நான்கு முறை சலித்துக் கொள்ளவும். காரட்டை துருவியில் உள்ள சின்ன கண்ணில் வைத்து துருவிக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் சீனி மற்றும் முட்டையை உடைத்து ஊற்றி நன்றாக அடித்துக் கொள்ளவும்.
அந்த கலவையில் ராப்ஸ் எண்ணெய், சலித்து வைத்திருக்கும் மைதா கலவை, கறுவாத்தூள் மற்றும் உப்பு சேர்த்து அடிக்கவும்.
அதன் பிறகு துருவிய காரட் மற்றும் வெனிலா எசன்ஸ் சேர்த்து கரண்டியால் கலந்து கொள்ளவும். (இப்பொழுது அடிக்கக் கூடாது கரண்டியால் கலக்க வேண்டும். அப்பொழுது தான் கேக் மிருதுவாக இருக்கும்.)
அவனை முற்கூட்டியே சூடுப்படுத்தி வைக்கவும். கேக் ட்ரேயில் பட்டர் தடவிக் கொள்ளவும் அல்லது பேக் பேப்பர் விரித்து வைக்கவும்.
பட்டர் தடவிய கேக் ட்ரேயில் காரட் கலவையை ஊற்றி அவனில் வைத்து 175f டிகிரியில் 30 நிமிடம் பேக் செய்து எடுக்கவும்.
நன்கு ஆறியதும் அளவான துண்டுகளாக நறுக்கி பரிமாறவும். சுவையான காரட் கேக் ரெடி. அறுசுவை நேயர்களுக்காக இந்த காரட் கேக்கை செய்து காட்டியவர் <b> திருமதி. வத்சலா நற்குணம் </b> அவர்கள். செய்து பார்த்து உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளுங்கள்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

ஹாய் வற்சலா ரொம்ப அருமையாக இருக்கு, அது என்ன பா ராப்ஸ் எண்ணை.

ஜலீலா

Jaleelakamal

ராப்ஸ் என்பது ஒரு மஞ்சள் நிறப் பூ. அதில் இருந்து தான் எண்ணெய் செய்வார்கள்.இங்கு அதைத் தான் முதலில் பயிரிடுவார்கள்.

நன்றி,
"அன்பான சொல் மருந்தாக இருப்பதோடு வாழ்த்தவும் செய்கிறது"

Canola Oil??

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

Rapeseed (Brassica napus), also known as rape, oilseed rape, rapa, rapaseed and (in the case of one particular group of cultivars) canola, is a bright yellow flowering member of the family Brassicaceae (mustard or cabbage family)

Canola is just a trade name (Canadian Oil Seed Growers Association), the oil comes from the seed of a plant of the turnip/rudavaga family, actually this variety does not form the roots/bulbs but produces oil rich seeds. The plant is call RAPE, (Raps in German) the seeds are called rapeseed

கேக்கில் கனோலா ஆயில் சேர்த்தால் ஒருவித வாடை வராதா?

அப்படியே எடுத்து சாப்பிடனும் போல இருக்கு.அருமை.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

பதில் வழங்கிய வனிதா,பிரபா மிக்க நன்றி.
ஆசியா சாப்பிட வேண்டும் போல் இருக்குதா? ஒரு பாசல் அனுப்பி விடுகிறேன்.

நன்றி,
"அன்பான சொல் மருந்தாக இருப்பதோடு வாழ்த்தவும் செய்கிறது"

பிரபா, நான் கேரட் கேக், பனானா கேக் எல்லாத்துக்கும் கனோலா ஆயில் பயன்படுத்தி இருக்கேன். வாடை வராது. செய்து பாருங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

பிரபா,அப்போது அவசரத்தில் பதிவு போட்ட படியால் உங்கள் கேள்விக்கு பதில் அளிக்கவில்லை மன்னிக்கவும்.
ராப்ஸ் (கனோலா) ஒயில் கேக்கிற்குப் சேர்க்கும் போது வாடை வராது. பயப்படாமல் செய்து பாருங்கள்.
வனிதா பதில் வழங்கியமைக்கு மிக்க நன்றி.

நன்றி,
"அன்பான சொல் மருந்தாக இருப்பதோடு வாழ்த்தவும் செய்கிறது"

வத்சலா... வத்சலா...வத்சலா...
ஒவ்வொரு முறையும் உங்கள் குறிப்பு, படத்தோடு வரும்போது மிகவும் ஆசைப்பட்டுப் பார்ப்பேன், பதில் போட வருவேன் ஏதோ காரணத்தால், தடைப்பட்டுவிடும்(அதுக்கும் காலநேரம் சரியா வரோணுமோ என்னவோ:)).

முகப்பில் இருக்கும்போது பார்ப்பேன் உள்ளே போனால் தேடிப் பார்ப்பது குறைவு. இன்று எப்படியும் ஒருகை பார்த்துவிட்டுத்தான் மிச்சம் என களம் இறங்கிவிட்டேன். அறுசுவையும் கொஞ்சம் எனக்கு ஒத்துழைக்கிறது.

உங்கள் குறிப்புக்கள் உண்மையிலேயே பாராட்டப்படவேண்டும். கேற்றறிங் செய்கிறனீங்களோ? இப்படியானவை சிலரால் மட்டுமே முடியும். ஸ்பைடர்மான் கேக் பார்த்தேன் மிகவும் அழகாகச் செய்திருக்கிறீங்கள். கரட் கேக் சூப்பர். என் கணவருக்கு இது விருப்பம் கடையில் கண்டால் வாங்காமல் வரமாட்டார்.

நேரம் வரும்போது செய்கிறேன். எனக்கு சமைத்து அசத்தலாம் தொடங்கிவிட்டாலே, அக் குறிப்புக்கள் செய்யவே நேரம் சரியாக இருக்கும், அதிலும் இலகுவானதைத்தான் தெரிவு செய்கிறேன்.

புடிங் வகைகளும் தெரியுமென்றால் செய்து போடுங்கோ. ஏன் நீங்கள் அங்கு இருக்கிறீங்கள் அதிராக்கு கிட்ட வந்திருக்கலாமெல்லோ?:) தப்பாக எடுக்கக்கூடாது.. ஒரு அக்கறையிலதான் சொல்கிறேன்.:) (இப்படி மயக்கினால்தானே பார்ஷல் வரும்:))

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

அதிரா, உங்கள் பாராட்டிற்கு மிக்க நன்றி.இலங்கையில்
இருக்கும் போது அக்கா ஐஸிங் செய்து கொடுப்பா. அத்துடன் 2,3 பேர் அவாவிடம் கேட்டு ஐஸிங் பழகினார்கள். சில வேளைகளில் அக்கா ஐஸிங் போடும் போது நின்று பார்த்திருக்கிறேன்.அத்துடன் சரி நான் ஒரு நாளும் செய்து பார்த்ததில்லை. இங்கு வந்த பின்பு தான் தெரியாத சிலவற்றை அக்காவிடம் கேட்டு செய்து பழகினேன்.
நீங்களும் பக்கத்தில் இருந்தால் உங்களுக்கும் செய்து தருவேன்.

நன்றி,
"அன்பான சொல் மருந்தாக இருப்பதோடு வாழ்த்தவும் செய்கிறது"

karuva powder yendraal yenna?athu enge kidikum?...naan USA vil enge vangalaam?pls reply pannu ga.....atharu pathil vera use panna mudiyuma?

கறுவா பவுடர் என்றால் Cinnamon Powder இது Super market கிடைக்கும்.

நன்றி,
"அன்பான சொல் மருந்தாக இருப்பதோடு வாழ்த்தவும் செய்கிறது"

கருவா பவுடர் சேரிக்காமல் செய்யலாமா.

என்றும் உங்கள் நினைவில்
சோனியா

என்னோட அவன்லா கிர்ல்டு மேல இருக்கு. அவன் கீழ இருக்கு. அப்பம் கேக் கீழ வெந்து மேல வேகமா இருக்குமா. நிறைய தடவை எனக்கு அப்படி தான் ஆச்சி. கிரில்டும் அவன்னும் ஓரே நேரத்து தீ வைக்கு ஆப்சன்ஸ் என் கிட்ட இல்ல. என்ன பன்ன.

என்றும் உங்கள் நினைவில்
சோனியா

hai vathsala,
unga cake romba arumai, neenga germanya nanum germany than neenga germanyla enga irukeenga

Raihana

Hi Vathsala,

Naan ungal Carrot cake seithu parthen. Arumaiyaka vanthathu. Nanri.