தோழிகளே நீங்களும் எனக்காகவும், அம்மாவிற்காகவும், கடவுளைப் பிரார்த்தியுங்கள் தோழிகளே.

தோழிகளே வரும் ஞாயிறன்று இந்தியா செல்கிறேன், திரும்பி வருவதற்கு இரண்டு மாதம் ஆகும். பாஸ்கர் 10த் என்பதால் லீவெடுக்க முடியாது, எடுத்தால் பாடத்தை பிக் அப் பண்ண முடியாதென்பதால், ஹஸ், அவரே மேனேஜ் பண்ணிக் கொள்வதாகச் சொல்லிவிட்டார். அம்மாவிற்கு உடல்நலம் மிகவும் சரியில்லை. அவர்களிற்கு ஹார்ட் ட்ரபிள் நான்கைந்து வருடமாக உள்ளது.நான்கு வாரத்திற்கு முன் திடீரென்று நடக்கயியலாமல் கஷ்டப்படுவதால் டாக்டரிடம் செக்கப் தேதிற்கு முன்பே அக்கா இருவரும் அழைத்துச் சென்றார்கள், ஹார்ட் என்பதால் எந்த நேரத்திலும் எதுவும் நடக்கலாமென்றும் என்னிடம் சொல்லச் சொல்லியும் டாக்டர் சொல்லிவிட்டாராம். அப்படியெதுவும் நேராது என்று நானும் தைரியமாக இருந்தேன், ஆனால் இந்தப் பத்து நாட்களாக அக்கா சொல்வதையும், அம்மா ஒவ்வொருவருக்கும் அறிவுரை சொல்வதையெல்லாம் பார்க்க எனக்கு பயமாக உள்ளது. போன ஞாயிறன்று பாஸ்கருக்கும், அம்மா அறிவுரை போனிலேயே சொல்லிவிட்டார்கள். அதைக் கேட்டவுடன் எனக்கு உடனே அம்மாவைப் பார்க்கவேண்டும், அவர்களோடு இருக்கவேண்டும் எனத் தோன்றிவிட்டது. இவரிடமும், பாஸ்கரிடமும் சொன்னதும் சம்மதித்து, இவர் ஃப்ளைட் டிக்கெட்டிற்கு நேற்று அரேன்ஞ் பண்ணிவிட்டார். ஒருவேளை நான் போய் உடனிருந்தால் நன்றாக ஆவார்களோ என யோசிக்கிறேன். பாஸ்கரும் அப்படித்தான் சொல்கிறான், நீ உடனிருந்தால் கண்டிப்பாக சரியாகி விடுவார்கள், சென்று வா என்று ஹஸ்ஸூம் சொல்கிறார். இதுவரை பாஸ்கர் ஸ்கூல் கேம்ப் தவிர என்னைப்பிரிந்து இருந்ததில்லை, பரவாயில்லை நீங்கள் இங்கிருந்து கஷ்டப் படுவதைவிடப் போய் பாட்டியுடன் இருந்துவிட்டு வாங்க என்கிறான். கடவுள் பிரார்த்தனையோடு செல்கிறேன். நேற்று இரவு அம்மாவிடமும் வருவதாகச் சொல்லவும், அவங்களுக்கு சந்தோசம், "நானே சொல்லவேண்டும் என்று நினைத்தேன், ஆனால் இப்பொழுதான் வந்து சென்றீர்கள் என்பதால் சொல்லவில்லை" என்று அம்மா சொன்னார்கள். அம்மாவோடு இருக்கவேன்டும் என்று தோன்ற வைத்த கடவுளுக்கு கோடானுகோடி நன்றிகள். முன்று வருடங்களுக்கு முன் இதேமாதிரித் தோன்றியவுடன் சென்றதால் அப்பாவின் கடைசி நேரத்தில் நான்குநாட்கள் அவரோடு இருந்தேன். இந்தமுறை அந்தமாதிரி இல்லாமல் அம்மாவோடு சந்தோசமாக இருந்து வர மனம் ஏங்குகிறது. கடவுள் என்ன நினைக்கிறாரோ தெரியவில்லை. அம்மாவிற்கு நாளையதினம் 80ஆவது பிறந்தநாள். அம்மா தெளிவாகப் பேசுகிறார்கள், ஆனால் தன் உடல்நலம் சாதகமான நிலையில் இல்லை எதுவந்தாலும் நீங்கள் எல்லோரும் ஏற்றுக் கொள்ளவேண்டும் என்று அக்கா இருவரிடமும் சொல்கிறார்களாம், நான் இங்கு இருப்பதால் பயந்துவிடுவேன் என்று என்னிடம் மட்டும், தான் நன்றாக இருப்பதாகவும் தனக்கு ஒன்றும் நேராது பயப்பட வேண்டாம் என்கிறார்கள். அப்படியே இருக்கவேண்டுமென்று நானும் கடவுளிடம் வேண்டுகிறேன். தோழிகளே நீங்களும் எனக்காகவும், அம்மாவிற்காகவும், கடவுளைப் பிரார்த்தியுங்கள் தோழிகளே.

என்னால் இதற்கும் மேல் எழுத இயலவில்லை. உங்களிடமெல்லாம் சொல்லாமல் போக மனம் இடம் தரவில்லை, வேறு எப்படிச் சொல்லிச் செல்வது என்றும் தெரியவில்லை. அதனால் தான் இப்படி ஒரு இழை ஓபன் பண்ணினேன். அதுமட்டுமில்லாமல் கூட்டுப் பிரார்த்தனை மூலமாக ஏதாவது ஒரு நன்மை கிடைக்கும் என்ற நம்பிக்கையிலும் தான் இதை ஆரம்பித்தேன்.

தவறாகயிருந்தால் அட்மின் அவர்கள் என்னை மன்னிக்கவும், இந்தமாதிரி இழை ஓபன் பண்ண உங்களிடம் அனுமதி வாங்க வேண்டுமோ, இல்லையோ தெரியவில்லை, அதற்காகவும் சாரி கேட்கிறேன்.

அன்புடன் :-)
உத்தமி :-)

உத்தமி அக்கா! கவலை படாதீங்க! அம்மாவுக்கு உடல் நலம் நல்லபடியாக மாற இறைவனை பிரார்த்திக்கிறேன். நீங்க கவலைபடாமல் சென்று அம்மாவை பார்த்து அவர்களுக்கு அருகில் இருந்து கவனித்துக்கொண்டு வாருங்கள்.அட்மின் இதற்க்கு ஒன்றும் சொல்ல மாட்டார். உங்களுக்காக அருசுவையில் நாங்க அனைவரும் பிரார்த்திக்கிறோம்.

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

தோழிகளே மற்ற இடத்தில் இதுபற்றி சொல்லி அனைவரையும் சங்கடப்படுத்த வேண்டாமென்றுதான் எங்கும் இதுபற்றி சொல்லவில்லை யாரும் தவறாக நினைக்க வேண்டாம்.

அன்புடன் :-)
உத்தமி :-)

செல்விக்கா, இதனால்தான் உங்களுக்கு பின்னூட்டத்தில் ரிப்ளை போட முடியவில்லை, தவறாக எண்ணவேண்டாம்.

அன்புடன் :-)
உத்தமி :-)

உத்தமி அக்கா,

அம்மாவிற்கு நல்லபடியாக உடல்நிலை தேறிவிடும். கவலைப்படாமல் ஊருக்கு போய்ட்டு வாங்க. கண்டிப்பாக உங்கள் அம்மாவுக்காகவும், உங்களுக்காகவும் கடவுளை வேண்டிக்கொள்கிறேன். விரைவில் குணமடைவார்கள்.
மற்றும் நம் அறுசுவை தோழிகளின் பிரார்த்தனையும் நிச்சயம் இருக்கும். மனவருத்தம் கொள்ளவேண்டாம்.

அன்புடன்
சுஸ்ரீ

அன்புடன்
சுஸ்ரீ

அறுசுவை தளமும், நீங்கள் அனைவரும் இருந்ததால் தான், இந்தப் பத்துப் பதினைந்து நாட்களை என்னால் எப்படியோ ஓட்ட முடிந்தது, உங்கள் அனைவருக்கும் எண்ணிலடங்கா நன்றிகள்.

அன்புடன் :-)
உத்தமி :-)

உத்தமி அக்கா நீங்கள் தைரியாமாக சென்று வாருங்கள். பாஸ்கரும், அண்ணாவும் (உங்க அஸ்) செல்வது சரிதான். நீங்கள் சென்றால் கட்டயம் உங்கலை பார்த்ததும் அவர் பாதி குணம் அடையைவார்கள். நீங்கள் கூட இருப்பதால் அவர் கட்டயம் முழுமையாக குணம் அடைவார்கள். தைரியமாக இருங்கள்.

நான் இறைவனை வேண்டிக் கொள்ளுகிரேன். கூட்டு பிரத்தனை என்றும் தேற்று போனது இல்லை. நீங்கள் தைரியாமா சென்று வாருங்கள்.

******நல்லாம் நன்மைக்கே.******

உங்கள் அம்மா உடல் தேரி வர வாழ்த்துக்கள்.

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*

கூட்டுப் ப்ரார்த்தனை நிச்சயம் நன்மை தரும்.நல்லதே நடக்கட்டும்.

Patience is the most beautiful prayer!!

Patience is the most beautiful prayer!!

உத்தமி அவர்களுக்கு, உங்களுக்காகவும், அம்மாவிற்காகவும் ப்ராத்தனை செய்கிறேன். நல்லபடியாக ஊருக்கு சென்று வாருங்கள்.

கவலை படாம போய் வாங்க... அம்மா கண்டிப்பா குணம் ஆயிடுவாங்க. அம்மா மனசுக்கு தைரியம் குடுங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நல்ல படியாக ஊர் போய்விட்டு வாங்க.அம்மா உடல் நலம் தேறி வர எல்லாம் வல்ல இறையோனை வேண்டுகிறேன்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

மேலும் சில பதிவுகள்