கறுப்பு கொண்டைக்கடலை குருமா

தேதி: March 26, 2009

பரிமாறும் அளவு: 6 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 3 (1 vote)

 

கறுப்பு கொண்டைக்கடலை - 1 கப்
வெங்காயம் - 2
தக்காளி - 2
கடுகு - 1/2 தேக்கரண்டி
பெருஞ்சீரகம் - 1 தேக்கரண்டி
கறுவா - சிறு துண்டு
கிராம்பு - 3
மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி
மிளகாய்தூள் - 2 தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
மசாலா அரைப்பதற்கு :
கசகசா - 2 தேக்கரண்டி
பொட்டுக்கடலை - 1 மேசைக்கரண்டி
தேங்காய்ப்பூ - 1 மேசைக்கரண்டி
இஞ்சி - சிறிய துண்டு
பூண்டு - 5 பல்
பச்சை மிளகாய் - 5


 

கடலையை 7-8 மணி நேரம் ஊறவைக்கவும்.
ஊறவைத்த கடலையை உப்பு சேர்த்து வேகவிடவும்.
வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி வைக்கவும்.
அரைக்கக் கொடுத்த பொருள்களை விழுதாக அரைத்து வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு கடுகு போட்டு அது வெடித்ததும், கறுவா, கிராம்பு, கறிவேப்பிலை போட்டு பின்பு வெங்காயம், பெருஞ்சீரகம் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.
தக்காளி வதங்கியதும் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.
பின்பு அரைத்த விழுதைச் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
வேகவைத்த கடலையை தண்ணீருடன் சேர்த்து 5-10 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கவும்.
இது இட்லி, தோசை, இடியப்பம், சப்பாத்திக்கு மிகவும் நல்லது.


மேலும் சில குறிப்புகள்


Comments

இரவு சப்பாத்திக்கு கறுப்பு கொண்டல் கடலை குருமா செய்தேன். டிபஃரெ‌ண்டான சுவையுடன் நன்றாக இருந்தது. நன்றி!

அன்புடன்
சுஸ்ரீ

அன்புடன்
சுஸ்ரீ

அக்காஉங்களுடையகுறிப்பில்இருந்த கறுப்புகொண்டல் கடலைகுருமா மிகமிகசுவையாக இருந்தது அத்துடன் இப்படிப்பட்ட சுவையான குறிப்பை தந்ததிற்கு உங்களுக்கு என்நன்றியை தெரிவிக்கின்றேன் .

அன்புடன்
துஷ்யந்தி கலைவேந்தன்

"முயற்சியுடையோர் இகழ்ச்சியடையார்"

சுஸ்ரீ,துஷ்யந்தி உங்கள் இருவரது பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி.

நன்றி,
"அன்பான சொல் மருந்தாக இருப்பதோடு வாழ்த்தவும் செய்கிறது"