குண்டூர் சிக்கன்

தேதி: March 26, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.4 (10 votes)

இந்த குண்டூர் சிக்கன் குறிப்பினை அறுசுவை நேயர்களுக்காக <b> திருமதி. ஆசியா உமர் </b> அவர்கள் செய்து காட்டியுள்ளார். நீங்களும் செய்து பார்த்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளவும்.

 

சிக்கன் – அரை கிலோ
காய்ந்த சிவப்பு மிளகாய் – 4 - 6
முழு மல்லி – 3 தேக்கரண்டி
மிளகு – ஒரு தேக்கரண்டி
சீரகம் – 1 1/2 தேக்கரண்டி
கடுகு – அரை தேக்கரண்டி
வெந்தயம் – கால் தேக்கரண்டி
தேங்காய் துருவல் – 3 மேசைக்கரண்டி
எண்ணெய் – 4 மேசைக்கரண்டி
இஞ்சி பூண்டு விழுது – 3 தேக்கரண்டி
கரம் மசாலா – ஒரு தேக்கரண்டி (ஏலம், பட்டை, கிராம்பு கலவை)
வெங்காயம் – 100 கிராம்
தக்காளி – 150 கிராம்
புளிக்காத தயிர் – 2 மேசைக்கரண்டி
மல்லி இலை – சிறிது
உப்பு – தேவைக்கு


 

சிக்கனை சுத்தம் செய்து கழுவி தண்ணீர் இல்லாமல் வடிகட்டி வைத்துக் கொள்ளவும். வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கி வைத்துக் கொள்ளவும். தக்காளியை சிறுத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
வாணலியில் காய்ந்த மிளகாய், முழுமல்லி, மிளகு, சீரகம், கடுகு, வெந்தயம், தேங்காய் துருவல் சேர்த்து இளஞ்சிவப்பாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
வறுத்த பொருட்களை எடுத்து ஆற வைத்து மிக்ஸியில் போட்டு பொடி செய்துக் கொள்ளவும். அதில் தண்ணீர் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
ஒரு பேனில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நறுக்கின வெங்காயத்தை போட்டு சிறிது நேரம் வதக்கி விட்டு, இஞ்சி பூண்டு விழுது, கரம் மசாலா சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் மற்றும் இஞ்சி பூண்டு விழுது நன்கு வதங்கி வாசனை வந்ததும் தக்காளி மற்றும் உப்பு சேர்த்து வதக்கவும்.
வதங்கியதும் அரைத்த மசாலா மற்றும் தயிர் சேர்த்து கிளறி விடவும்.
அதில் சிறிது தண்ணீர் சேர்த்து கலவையை கொதிக்க விடவும்.
அதன் பின்னர் சுத்தம் செய்து வைத்திருக்கும் சிக்கன் துண்டுகளை சேர்த்து பிரட்டி விடவும்.
கொதி வந்ததும் மூடி போட்டு 20 நிமிடம் தீயை மிதமாக வைத்து வேக விடவும். அடிக்கடி திறந்து பிரட்டி விடவும். எண்ணெய் தெளிந்து கிரேவி கெட்டியாகி இருக்கும்.
சிக்கன் வெந்த பின்னர் மேலே கொத்தமல்லி இலை தூவி இறக்கவும்.
சுவையான குண்டூர் சிக்கன் ரெடி. இதனை ப்ளைன் ரைஸ், புலாவ், சப்பாத்தி, பரோட்டாவுடன் பரிமாறினால் பொருத்தமாக இருக்கும். சுவைப்போரை மயக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. காரம் அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப கூட்டியோ குறைத்தோ கொள்ளலாம். இதில் கொடுத்து இருப்பது சாப்பிடும் அளவு காரம் தான்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

வாவ் ஆசியாக்கா, மேலும் ஒரு சுவையான சிக்கன் குறிப்பு விளக்கப்படங்களுடன்.

indira

This ckicken is looking very nice.. Think that it should be spicey.. Bcos i never use more than 1 redchilli for 1 kg chicken itself... Sh..Sh..Sh..
appa,gundoor karam pola?

இந்திரா மிக்க மகிழ்ச்சி.நிச்சயம் செய்து பாருங்க,3 டேபிள்ஸ்பூன் தேங்காய் துருவல்,வெங்காயம்,தக்காளி,தயிர் சேர்ப்பதால் காரம் தெரியாது.சிறிய சிவப்பு மிளகாய் 8 சேர்த்து இருக்கிறேன்,சிவப்பு மிளகாய் அளவு,அதன் காரம் பொறுத்து சேர்த்து கொள்ளவும்.இந்த அளவு காரம் தான் ஒரிஜினல் குண்டூர் சிக்கனுக்கு உபயோகிப்பார்கள்.காரம் குறைவாக சாப்பிடுபவர்கள் குறைத்து போட்டு செய்த்து பார்க்கவும்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

I am the newone here.delicious curry.

God bless you.

குண்டூர் சிக்கன் சூப்பர். பார்த்துமே சுவைக்க தோணுது. நேத்து பண்ணிக் கொடுத்தேன். ஏ ஒன் சுவை. அவருக்கும் பிடித்து இருந்தது

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

புதியவர்கள் பாராட்டும் பொழுது இரட்டிப்பு மகிழ்ச்சி,நன்றி,இனி நீங்க புதியவர் அல்ல.பதிவு போட்டுவிட்டதால் எல்லோருக்கும் பழகியவர் ஆகிவிட்டீர்கள்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

செய்து பார்த்தாச்சா? மிக்க மகிழ்ச்சி.ஒரு மாற்றுக்கு எப்பவாவது செய்து அசத்தலாம்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

hai iam new to this site asiya akka this dish is very nice&tasy ...

7

என்றும் அன்புடன்
சாந்திரவி

உங்க பின்னூட்டம் பார்த்து மிக்க மகிழ்ச்சி,அறுசுவையில் இன்னும் நிறைய இருக்கு,எல்லாவற்றையும் பார்த்தால் உங்களுக்கே தெரிய வரும்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

Asiya, you are emerging a leading contributor in this section and we are proud of you. Maini is elated about your talent like a mother. The prevailing fine weather is good for a hot recipe like Gundur Chicken. You are welcome to our home to taste and certify your own recipe. God bless you.
Maini and Kakka

Asiya, you are emerging a leading contributor in this section and we are proud of you. Maini is elated about your talent like a mother. The prevailing fine weather is good for a hot recipe like Gundur Chicken. You are welcome to our home to taste and certify your own recipe. God bless you.
Maini and Kakka

பதிவு போடுவதாய் சொன்னீர்கள்,உடனே பார்த்தேன்,உங்கள் பதிவு இருந்தது.காக்காவிடம் சொல்லி NHM WRITER DOWNLOAD பண்ணச்சொல்லுங்க.அப்புறம் நீங்க தமிழில் டைப் செய்யலாம்.மைனி உங்க கிட்ட இருந்து தானே நான் சமையல் கற்றுகொண்டேன்,நீங்கள் இருவரும் பார்வையிட்டது மகிழ்ச்சி.இரண்டு தடவை கிளிக் செய்து இருப்பீங்க,அதனால் இரண்டு முறை வந்திருக்கும்.பார்க்கலாம்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

ஆசியாமேடம் நேற்று உங்க குண்டூர் சிக்கன் செய்தேன்,சூப்பரா இருந்தது,காரம் மட்டும் பாதியா போட்டேன்,பையன் சாப்பிடுவதற்காக,ஆனாலும் காரம் எங்களுக்கும் கொஞ்சம் தூக்கலாகவே இருந்தது,நீங்க எப்பவும் இவ்வளவு காரம்தான் போடுவீங்களா!!!

கொடுக்கும் பொழுது ஒரிஜினலை கொடுத்தேன்,நான் குறிப்பிட்டதை கவனிக்க வில்லையா ?அவரவர் காரம் தகுந்தபடி சேர்க்கவும்,என்று சொல்லி இருந்தேனே.நன்றி.ஒரு சமயம் என் மிளகாய் காரம் இல்லையோ என்று தெரியலை.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

ஆசியா மேடம்,அவரவர் காரத்திற்கு தகுந்த படி போட சொல்லியிருந்தீங்க அதனை நான் பார்த்தேன்,இதில் கொடுத்திருப்பது சாப்பிடும் அளவு காரம்தான்'னு சொல்லியிருந்தீங்க,அதனாலதான் உங்க வீட்டில் போடும் அளவோனு கேட்டேன்,தப்பா நினைச்சுக்காதீங்க.

ஹாய் ஆஸியா அக்கா உங்களின் குண்டூர் சிக்கன் இன்று மதியம் செய்தேன், சூப்பராக இருந்தது,என் கணவர் விறும்மி சாப்பிட்டார்,[குழந்தைகளுக்கு குருமா]அடுத்த இலக்கு உங்க நெல்லை தம் பிரியாணி நன்றி, நன்றி,அக்கா,

உங்கள் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி.நெல்லை தம் பிரியாணி மைல்டாக இருக்கும்.குழந்தைகளும் சாப்பிடலாம்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

உங்களுடைய குண்டூர் சிக்கன் மற்றும் நெல்லை தம் பிரியாணி செய்தேன். மிகவும் நன்றாக இருந்த்து.. இன்று தான் பல நாட்கள் கழித்து நல்ல பிரியாணி சாப்பிட்ட திருப்தி.
அதுவும் முதல் முறையாக தம் பிரியாணி செய்தேன்..எப்படி இருக்கேமே…தண்ணீர் அளவு கரட்டாக இருக்குமா…திறந்து பார்கலாமா என்று எகபட்ட குழப்பங்கள்..ஆனால் எதுவும் செய்யாமல்..சுமார் 20 – 25 நிமிடம் தம் போட்டு திறந்து பார்த்தேன்…மிகவும் சூப்பராக இருந்த்து..
மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன்..சாப்பிட உடன் பதிவு போடுகிறேன்.
நன்றி.
அன்புடன்,
கீதா ஆச்சல்

மிக்க மகிழ்ச்சி.உங்க பின்னூட்டம் பார்த்து.அடிக்கடி செய்தால் expert ஆகிடுவீங்க.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

சலாம் நலமா?

உங்க இந்த குண்டூர் சிக்கன் செய்தென் செம சூப்பர் ரொம்ப தேங்ஸ்......

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

ஹாய் ஆசியா madam
இன்று இரவு உங்களுடைய குண்டூர் சிக்கன்
செய்தேன் சுவை அருமையாக இருந்தது
எனக்கும் என் கணவருக்கும் மிகவும் பிடித்திருந்தது
நன்றி

செய்து பார்த்து பின்னூட்டம் அனுப்பியமைக்கு மிக்க மகிழ்ச்சி.நன்றி.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

ஆசியா குண்டூர் சிக்கின் கறி செய்தேன்(போனகிழமை) மிகவும் சுவையாக இருந்தது. ஆனால் உங்கள் கறியின் கலர் எனக்கு வரவில்லை. கொஞ்சம் கறுப்பாகிவிட்டது. பதில் போட நினைத்து இன்றுதான் எப்படியும் போட்டிட வேண்டும் என போடுகிறேன்.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

ஆசியா மேடம் இன்று மதியம் குண்டூர் சிக்கன் செய்தேன் ரெம்ப நல்லா இருந்தது.எனக்கும்,என்னவருக்கும் காரம் ரெம்ப பிடிக்கும் அதனால் நீங்க கூறியிருந்த அளவு மிளகாய் சேர்த்தேன் நல்லா இருந்தது.

பார்க்கவே ரொம்ப அழகா இருக்கு. கண்டிப்பா செய்து பின்னூட்டம் அனுப்புகிறேன். பிரபா.

I Tried Your recipe today, It came out very well'ka Thanks fr ur post.

ஆசியா ,, உங்க டிஷ் ட்ரை பண்ணிணேன் ....
நல்லா வந்தது .. தேங்க் யூ .........