மறைபொருள் ரகசியங்கள்

"சீவாங்க வேதத்தைச் செப்ப வந்தேனே
அவன் அடி நாள்தொறும் சிந்தை செய்து
ஆகமம் செப்ப லுற்றேனே"

திருமுலர்

நேரம் கிடைக்கும் போது மந்திரம், தந்திரம், யந்திரம், ரசவாதம், சோதிடம், வர்மம், நுண் ஆற்றல் எனும் சத்தி மருத்துவம், மூவுலகம், யோகத்தில் ஹதயோகம், கர்மயோகம், இர்ரஜயோகம், ஞானயோகம், சரயோகம், வாசியோகம், தற்காப்புகலையில் வெண்கல உடல், நிஞ்ஜா, கினோசி, சீ குங், தசமகா வித்தை, அட்டகர்மம், பஞ்சபச்ஷி போன்ற சில ரகசிய மறைபொருள்களைபற்றி எனக்கு தெரிந்த சிறிதளவு பகிர்ந்து கொள்ளலாமா??? (365.25 நாட்களுக்கு மட்டும். அது ஒரு சுட்ஷம கணக்கு)

பி.கு: தனிஷா மேடம் திட்டுவது தெரிகிறது? அது என்ன 365.25 நாட்கள் பதில் 27 மார்ச் 2010 இரவு 23:59:59 (IST இந்திய நேரபடி)/ (18:29:59 (UTC/GMT)!!! அல்லது நடுவிலே தவறி சொன்னாலும் சொல்லிவிடலாம்.

ஊக்கம் கொடுத்த திரு அட்மின் அவர்களுக்கு நன்றி. முதலிலேயே நன்றியை கூறி விட்டேன் எதற்கு தெரியுமா? அவசரகாலத்தில் ஓடி வந்து அடிவாங்காமல் காப்பாற்றதான்!!!

அன்பு சகோதரி தனிஷாவிற்கு,

ஆம். "அனிபெச்ன்ட்" அம்மையாரை பற்றி கேள்வி ப்ட்டு இருப்பிர்கள் அவர் ஒரு(Clairvoint) அவரும் திரு லெட்பீட்டர் (Clairvoint)என்பவரும் சேர்ந்து ஒரு புத்தகம் எழதி இருக்கிறார்கள் (The Occult Chemisry) 1895(தீர்கதரிசனத்தில் பார்த்து). அணுவின் உள் அமைப்பை பற்றி அப்போது அணு எண் 2,3 கண்டுபிடிக்க படவில்லை. ஆனால் அவர்கள் சொன்னது அணு எண் 2 அடையாரிய்யம் (அடையாரில் தியானம் பண்ணதினால்) அணு எண் 3 லித்தியம் என்று அது பிறகுதான் கண்டுபிடிகப் பட்டது

இப்படிக்கு,

ஹைஷ்

முகத்தில் சுருக்கங்கள் விழலாம் ஆனால் இதயத்தில் கூடாது.

ஹைஷ்126

ஹைஷ் அவர்களே! எனக்கு இந்த அட்ட சித்து திறமை எல்லாம் இல்லை. ஆனால் ஒரு துன்பம் வரும் முன் எனக்கு கனவில காட்டிவிடும். சந்தோஷமா/சாமி கும்பிட்டு தூங்க போனாலும் சரியா காட்டுது வரப்போகும் துன்பத்தை. என் வீட்டில இறந்து போன மாமா தாத்தா எல்லாரும் ( ஊரில் இருக்க யார் கனவிலயாவது வராம ) இங்க என் கனவில வருகிறார்கள் :)

என் வீட்டில மட்டுமல்ல.. என் தோழியின் குழந்தை பற்றி கனவு கண்டேன்... அடுத்த நாள் போன் செய்து மகன் எப்படி இருக்கிறார்ன்னு விசாரிச்சேன்.. சில வாரங்கள் கழித்து அவர் மகனுக்கு டைப் 1 டயபடீஸ் என்று கண்டு பிடித்தார்கள்.

இது எதனால். நான் அதிகமா ஆன்மீக பற்றில்லாவிட்டாலும் ஓரளவுக்கவது இருக்கும்.
இதே போல என் தந்தை சிறு வயதாயிருக்கும் போது அவருக்கும் பல ரூபங்கள்/அரூபங்கள் கண்ணுக்கு தெரியுமாம்( வரப்போகும் இன்ப துன்ப நிகழ்வுகள்)

இதெல்லாம் ஏன் நடக்குது.

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

அச்சசோ...என்ன இது?

“ எனக்கு கண்ணை கட்டி காட்டில் விட்டது போல் இருக்கு... ” ஒன்னுமே புரியல..
எங்களூக்கும் புரியர மாதிரி சொல்லுங்க...

*நம்பிக்கையொடு இருந்தால்,இறைவன் நேர்வழி காட்டுவான்.*

நம்பிக்கையொடு இருந்தால்,இறைவன் நேர்வழி காட்டுவான்.
*அன்புடன் ஃபஜீலா*

அன்பு சகோதரி இலா அவர்களே,

அதன் பெயர் அஸ்ட்ரல் பயணம். அது நமது உயிர் துகளின் சுழற்சியினால் எற்படும் காந்த பயணம். எப்படி ஜனரேட்டரில் உள்ள காந்த புலதின் உள் சுற்றும் செப்பு கமபியில் மின்சாரம் உண்டாகிறதோ அது போல். பெண்களுக்கு இயற்கையாக இது அதிகம். ஒரு பாதுகாப்புக்காக. அதை நிறைய தடவை நீங்களே உணர்ந்து இருப்பீர்கள் - யாரவது உங்களை எங்கிருந்தாவது பார்த்தாலும்.
இப்படிக்கு,

ஹைஷ்

முகத்தில் சுருக்கங்கள் விழலாம் ஆனால் இதயத்தில் கூடாது.

ஹைஷ்126

எனக்கு சுத்தமா ஒன்னுமே புரியல.நீங்க புதுச்சேரியா?உங்க மனைவி புதுச்சேரி 1989 வரைனு போட்டிருக்கிங்க ஆனா ஒன்னு மட்டும் புரியுது நான் சீக்கிரம் கீழ்ப்பாக்கம் போவேன்னு மட்டும் எனக்கு நல்லாவே புரியுது...

அன்பு சகோதரி மேனகாவிற்கு,

சரியாக படிக்கவும். அதாவது 1989ல் திருமணம் ஆனதில் இருந்து இன்று வரை (என்றால் இன்னும் மனைவியை மாற்றவில்லை என்று அர்த்தம்). இது வரை தின்னமட்டும் தெரிந்த (சமையல் கட்டு பக்கம் எட்டி கூட பார்த்தது இல்லை) எனக்கு கடவுள் சூப்பரா ஆப்பு வைத்து என்னையே சமைக்கவைத்துவிட்டார். அவர்கள் எல்லோரும் புதுசேரில் இருக்கிறார்கள்)

இப்படிக்கு,

ஹைஷ்

முகத்தில் சுருக்கங்கள் விழலாம் ஆனால் இதயத்தில் கூடாது.

ஹைஷ்126

ஒன்னும் மட்டும் புரியுதுங்க - நீங்க மெத்தப்படிச்ச மேதாவி ன்னு !!

ஆனா நீங்க எங்களை மாதிரி சாமானியர்களுக்கும் புரியற மாதிரி சொன்னிங்கன்னா நல்லா இருக்கும் :)) நீங்க சொல்லற எதுவுமே சம்பந்தம் இல்லாம இருக்கற மாதிரி ஒரு feeling :)) இதுக்கு பார்ட் பார்ட்டா கொஞ்சமா subject எழுதி நிறைய விளக்கம் கொடுக்கலாம். பொத்தாம் பொதுவா யாருக்கும் புரியாத மாதிரி chemistry, physics, atom, magnetism எல்லாம் பேசிட்டு இருக்கீங்க. இதெல்லாம் சின்ன வயசில படிச்துங்கோவ் !! இப்ப இருக்கிற மண்டைக்கு இதெல்லாம் புரிய மாட்டேங்குது !!

இப்படிக்கு,
சந்தனா

ஒரு ஊருல ஒரு தம்பி இருந்தானாம். அவனுக்கு ஒரு நண்பன் (கம்பி) இருந்தானாம். ரெண்டு பேரும் ஒரே இடத்திலே வேலை பாத்தாங்களாம். ஒரு நாள் தம்பி அவன் மனைவி கிட்ட சண்டை போட்டுட்டு (சாப்பாடு எடுத்துட்டு வாரம)வேலைக்கு வந்தானாம் . அப்போ கம்பி கேட்டானாம் தம்பி கிட்ட என்னடா சாப்பாடு எடுத்து வரலன்னு. அவன் காரணத்தை சொன்னாம். பிறகு கம்பி தம்பி கிட்ட் சொன்னாம் நான் தயிர் சாதம், எலுமிச்சை ஊறுகாய் எடுத்து வந்து இருகிறேன் ரெண்டு பேரும் சாபிடலாம்ன்னு, தம்பிக்கு பசி வேற எலுமிச்சை ஊறுகாய் பற்றி நினைததும் வாயில் எச்சில் ஊற ஊற வேகமா வா அநத தயிர் சாதத்தையும் எலுமிச்சை ஊறுகாயும் சாப்பிடலாம்ன்னு கம்பிய கூட்டான்னாம். ரெண்டு பேரும் நல்லா தயிர் சாத்தையும், எலுமிச்சை ஊறுகாயும் வழிச்சு அடிச்சாங்களாம்.

இப்ப நீங்களே சொல்லுங்க உங்களுக்கும் தயிர் சாதம், எலுமிச்சை ஊறுகாய் சாபிடதோணலை. வாயில் கூட எச்சில் ஊறி இருக்குமே.

அப்படி என்னால் 5 தடவை எலுமிச்சை ஊறுகாய் என்று சொன்னவுடன் ந்மது உடலில் ரசாயன மாற்றம் நம்து கட்டளை இல்லாமலே எச்சில் ஊறியது அல்லவா? அது தான் 5 எழுத்து (ஊறுகாய்) செய்யும் வேலை. அதே போல்தான் 5 எழத்து மந்திரமும். அது சொல்ல சொல்ல நம் உடலில் மாற்றங்கள் எற்படும்.

மந்திரங்கள் இறையாற்றலின் ஒலி வடிவம். அல்லது வைப்ரேஷ்ன் என்றும் சொல்லாம். அதற்க்கு சமையங்கள் ஏதும் இல்லை.

அதை எப்படி பயன்படுத்தாம் என்று பிறகு சொல்கிறேன்.
இப்படிக்கு,

ஹைஷ்

முகத்தில் சுருக்கங்கள் விழலாம் ஆனால் இதயத்தில் கூடாது.

ஹைஷ்126

திரு ஹைஸ் அவர்களே
உங்களைப்பற்றிச் சொன்னதற்கு நன்றி. அது என்ன அர்த்த சாஸ்திரம்? அப்படியும் இருக்கிறதா?.

நான் கேட்டது, உங்கள் நண்பனின் தந்தை பற்றி போனிலேயே, 11 மணிக்கு ஒபரேஷன் முடிந்துவிடும் எனச் சொல்லியிருக்கிறீங்களே, அதனால், நினைத்த காரியம் சொல்பவரோ என கேட்டேன், அப்படிச் சொல்ல முடியுமா?

மேலே தலைப்பில், மகிழ்ச்சி - வாயு, பித்தம் இப்படி நிறையக் கொடுத்திருக்கிறீங்களே... அது என்ன புரியவில்லையே? மகிழ்ச்சியாக இருந்தால், வாயுத் தொல்லை, பித்தம் உருவாகுமா? சற்று முடிந்தால் விளக்கிச் சொல்லுவீங்களா?

இலா, நானும் உங்களைப்போல்தான், எனக்கும் நிறையத் தடவை கனவு பலித்திருக்கிறது, நிறைய நிறையத் தடவைகள் பலிக்காமல் போயிருக்கிறது:).

முந்தநாள் இரவு ஒரு கனவு, நான் ஊருக்குப் போகிறேன், எங்கள் மாமா திருநீறு பூசி, குங்குமப் பொட்டோடு பளீர் என நிற்கிறார், என்ன மாமா எனக் கேட்டேன், அவர் சொல்கிறார் "இப்பத்தான் அம்மனைக் கும்பிட்டுவிட்டு வந்தேன், அதன்பலன் நீ வந்திருக்கிறாய்" என்கிறார். காலை எழும்பியதும் அம்மாவோடு போனில் இக் கனவைச் சொல்லி இது ஏன் இப்படிக் கண்டேன் எனக் கேட்டேன், உடனே அம்மா சொன்னா, ஐயையோ இப்பொழுது அம்மன்கோயில் கொடியேற்றம் வரவேண்டுமே ஒருக்கால் கலண்டரைப் பார் என்றா, உடனே பார்த்தேன் இன்று "சனிக்கிழமை" கொடியேற்றம் என இருந்தது. நாங்கள் மறந்துவிட்டோம், அதை நினைவுபடுத்தவே இக்கனவா? அல்லது ஏன் இப்படிக் கனவு வருகிறது? ஏனெனில் சிலருக்கு கனவில் நம்பிக்கை இல்லை. ஆனால் எங்கள் வீட்டில் நான் காணும் கனவுகள் பலித்திருக்கிறது.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

ஹைஷ் என்னதான் இவ்வளவு நாளூம் நீங்கள் அறிவுபூர்வமான விடயங்களை எங்களுக்குத்தந்தாலும் என் மரமண்டைக்கு இந்த தம்பியும் கம்பியும் கதைதான் நல்லா விளங்கியிருக்கு.தயிர்சாதமும் தேசிக்காய் ஊறுகாயும் உடனே சாபிடுற அளவுக்கு விளங்கியிருக்கெண்டா பாருங்களேன்.
கவலைப்படவேண்டாம் தொடருங்கள் இயலுமானவரை விளங்கிக்கொள்ள முயற்சிக்கிறேன்.

எனக்கு ஒரு உதவி கர்ப்பமாக இருக்கும் போது என்ன மந்திரம் உச்சரித்தால் விஞ்ஞான பூர்வமாக குழந்தைக்கு நல்லது?
இளையராஜா திருவாசகம் மருத்துவரீதியாய வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு நலம்பெறச்செய்கிறது என்று ஜேர்மனியர்கள் கண்டுபிடித்திருக்கிறார்களாமே உண்மையா?

சுரேஜினி

மேலும் சில பதிவுகள்