மறைபொருள் ரகசியங்கள்

"சீவாங்க வேதத்தைச் செப்ப வந்தேனே
அவன் அடி நாள்தொறும் சிந்தை செய்து
ஆகமம் செப்ப லுற்றேனே"

திருமுலர்

நேரம் கிடைக்கும் போது மந்திரம், தந்திரம், யந்திரம், ரசவாதம், சோதிடம், வர்மம், நுண் ஆற்றல் எனும் சத்தி மருத்துவம், மூவுலகம், யோகத்தில் ஹதயோகம், கர்மயோகம், இர்ரஜயோகம், ஞானயோகம், சரயோகம், வாசியோகம், தற்காப்புகலையில் வெண்கல உடல், நிஞ்ஜா, கினோசி, சீ குங், தசமகா வித்தை, அட்டகர்மம், பஞ்சபச்ஷி போன்ற சில ரகசிய மறைபொருள்களைபற்றி எனக்கு தெரிந்த சிறிதளவு பகிர்ந்து கொள்ளலாமா??? (365.25 நாட்களுக்கு மட்டும். அது ஒரு சுட்ஷம கணக்கு)

பி.கு: தனிஷா மேடம் திட்டுவது தெரிகிறது? அது என்ன 365.25 நாட்கள் பதில் 27 மார்ச் 2010 இரவு 23:59:59 (IST இந்திய நேரபடி)/ (18:29:59 (UTC/GMT)!!! அல்லது நடுவிலே தவறி சொன்னாலும் சொல்லிவிடலாம்.

ஊக்கம் கொடுத்த திரு அட்மின் அவர்களுக்கு நன்றி. முதலிலேயே நன்றியை கூறி விட்டேன் எதற்கு தெரியுமா? அவசரகாலத்தில் ஓடி வந்து அடிவாங்காமல் காப்பாற்றதான்!!!

அன்பு சகோதரி முனைவர் இந்திரா அவர்களுக்கு,

மனமார்ந்த பாரட்டுதலுக்கு மிகவும் நன்றி

அன்பு சகோதரன்

முகத்தில் சுருக்கங்கள் விழலாம் ஆனால் இதயத்தில் கூடாது.

ஹைஷ்126

அன்பு சகோதரி அதிராவிற்கு,

//நாங்கள் அழுது கண்ணும் காய்ந்து, கேட்டதும் மறந்துபோச்சு, இன்னும் பதிலே இல்லையே:).... ஐயையோ கனவின் பலன்கள் பற்றிக் கேட்டதைத்தான் சொல்கிறேன்... பொறுத்தார் பூமியாழ்வாராம்...:) அதுதான் பொறுமையாக:)......//

கனவுகள் ஏன் வருகிறது ? அதற்கு இரு காரணங்கள் உண்டு.

1. நாம் தூங்கும் போது நமது புருவ மத்தியில் உள்ள “அஞ்னா” சக்கரதின் திரையை விலக்கி நமது சூட்சம உயிர் ஆற்றல் வெளியே சென்று உலா வருவது தான் கனவு. அதில் நாம், காலத்தில் முன் நோக்கி அல்லது பின் நோக்கி சென்று வரமுடியும். உதாரணத்திற்கு நடந்து முடிந்த ஒரு விஷயம், ஆனால் அதில் நமக்கு ஆழ் மனதில் புரியாத சில விஷயங்கள் கேள்வி குறியாக இருக்கும் போது, இந்தகைய கனவு உலா சென்று வரும் போது சிலருக்கு விடை கிடைக்கும். எல்லோராலும் விடை கண்டாலும் அதை மொழி பெயர்க்க முடியாது அல்லது தெரியாது. அதே போல்தான் நடக்கவிருக்கும் விஷயங்களும். அதனால் அவரவர் சென்று வந்த நிலைக்கேற்ப ( அதிர்வு (Different vibrational plane of astral travel ) உலகம்) அதை பொருள் கொள்ள வேண்டும். இருவர் கண்ட ஒரே கனவுக்கும் பதில்(துல்லிய அல்லது சூட்சம பதில்) வேறு வேறாகத்தான் இருக்கும். ஆனால் எல்லா கனவுகளுக்கும் பொதுவான சில பலன்களும் உண்டு.

2. தூக்கத்திற்கு ஆரம்பித்த சற்று பின், எழுவத்திற்கு முன்னும் மனம் அல்ஃபா நிலையில் இருக்கும். மிக அதிக விழிப்பு உணர்வு நிலை அந்த நிலையில் நமது சமிப்த்திய சில பிரச்சனைகள் அல்லது அருகில் இருந்து யாரவது பேசுவது ஆழ் மனதிற்கு சென்று மேல் மனதிற்கு திரும்பி வருவதும் கனவு போல் இருக்கும். இரண்டுக்கும் நிறைய வித்தியாசம் உண்டு.

இன்னும் ஏதாவது விளக்கம் வேண்டுமானலும் கேட்கவும்.

அன்பு சகோதரன்

முகத்தில் சுருக்கங்கள் விழலாம் ஆனால் இதயத்தில் கூடாது.

ஹைஷ்126

வான்வியலில் நான் மிகவும் அதிசய படுவது எப்போதுமே ஒன்று மட்டும்தான். அது நமது முன்னோர்கள் எழுதிய சூரிய சித்தாந்தம் கி.பி மூன்றாம் நூற்றாண்டில் இதை மேற்கோள் காட்டி இருக்கிறார்கள் அதன் மூலம் யாருக்கும் தெரியாது(எப்போது, யாரால், எதில் எழுதப்பட்டது என்று). ஆனால் கலிலியோ வாழ்ந்ததோ 15 February 1564 – 8 January 1642 அவர் தான் தொலை நோக்கியை கண்டுபிடித்தார் என்பது அனைவரும் அறிந்ததே. சூரிய சித்தாந்ததில் தொலை நோக்கி இல்லாமலே கோள்களின் நிலை, நட்சத்திரத்தின் நிலை பற்றியும் அதன் ஓட்டத்தை பற்றியும் அறிய விதி வகுத்து சொல்லி இருக்கிறார்கள் அதுவும் நுண்கணிதத்தை இல்லை இல்லை அதிநுண்கணிதத்தை பயன்படுத்தி. கணணி வந்த பின் தான் நாம் ஒரு வினாடிக்கும் குறைவான காலத்தை பயன் படுத்துகிறோம். அதாவது மில்லி, மைக்ரோ செக்கண்ட் என்று. சூரிய சித்தாந்த்தில காலத்தை எப்படி அளந்தார்கள் என்றால்:

கலியுகம் =4,32,000 வருடங்கள் (அது ஆரம்பித்தது கி.மு 3012 அதில் 5111 வருடங்கள் முடிந்து விட்ட்து(Till 2009))
த்வபர யுகம் =8,64,000 வருடங்கள்
திரேத யுகம் =12,96,000 வருடங்கள்
சத்திய யுகம் = 17,28,000 வருடங்கள்
ஒரு வருடம் = 12 மாதம்
1 மாதம் = 4 வாரம்
1 வாரம் = 7 நாட்கள்
1 நாள் = 1 இரவு+1 பகல்
1 இரவு அல்லது 1 பகல் = 4 ஜாமம்
1 ஜாமம் =6 அல்லது 7 முகூர்த்தம்
1 முகூர்த்தம் = 2 நாழிகை (This equals the time before water overflows in a six-pala-weight [fourteen ounce] pot of copper, in which a hole is bored with a gold probe weighing four masha and measuring four fingers long. The pot is then placed on water for calculation.)
1 நாழிகை = 15 லகு
1 லகு = 15 கஷ்தா (தோராயமாக 2 நிமிடம்)
1 கஷ்தா = 5 கஷ்னா (தோராயமாக 8 வினாடி)
1 கஷ்னா = 3 நிமிஷா
1 நிமிஷா = 3 லவா
1 லவா = 3 வேதாஸ்
1 வேதாஸ் = 100 துருதிஸ்
1 துருதிஸ் = 3 த்ரதரேனுஸ் (1/1687.5th of a Second)
1 த்ரதரேனுஸ் = 6 பரமாணூ

என்று கி.பி 3 ஆம் நூற்றாண்டுக்கு முன் நம் முன்னோர்கள் நட்சத்திர, கோள்களின் அசைவுகளை கணித்தனர் என்றால் அது எனக்கு மாபேரும் வியப்பைத் தருகிறது.
சோதிடத்தின் முதல் நூல் ஆசிரியர்கள்: (மனிதர்களின் பெயர்தான்)
சூரியன், பிரமன், வேதவியாசர், பராசர், அத்திரி, உரோமகர், வசிட்டர், மரிசி, பௌவசர், யவனர், சௌனகர், மது, பிருகு, சனகர், ஆங்கிரசர், காசிபர், கார்க்கியர், நாரதர் என்ற பதினெண்மர் எழுதிய மொத்த ஜாதக ஸ்லோகங்கள் நான்கு லட்சத்து ஐம்பதினாயிரம்.

பின்பு வந்த காலங்களில் வடமொழில் இதில் இருந்து உருவானவைகள்:

ஓரா சாரம், சாராவளி, பாரசரியம், சந்தானதீபம், பிருகத் ஜாதகம், ஜாதக அலங்காரம். இதன் மொழி பெயர்ப்புகள் தமிழில் ஜாதக சிந்தாமணி, குமாரசுவாமியம், நாரதர் சோதிடம், கார்கேயர் சோதிடம், ஜாதக அலங்காரம், கணித முருகசேகரம், மாணிக்க கணித சோதிடம், நந்திவாக்கியம் என்பன.

கடந்த நூற்றாண்டில் சி.ஜி.ராஜன், கடலங்குடி நடேச சாஸ்திரி, கே.எஸ்.கிருஷ்ணமூர்த்தி, பி.வி. ராமன் சிறப்புக்கு உரியவராவர்.

இது வரை 24 பல்கலை கழகங்களில் சோதிடத்திற்கு என்று தனி துறை உள்ளன. மேலும் பல்கலை கழக மானியக் குழு (University Grant Commission of India) குறு ஆய்வு திட்டம் செய்பவருக்கு தொகை கொடுத்து வருகிறது. இது வரை 5 பேருக்கு மேல் முனைவர் பட்டமும் பெற்று இருக்கின்றனர்.

மேலும் அடுத்ததில்

அன்பு சகோதரன்

முகத்தில் சுருக்கங்கள் விழலாம் ஆனால் இதயத்தில் கூடாது.

ஹைஷ்126

ஜாதகம் என்பது வானிலை அறிக்கை போன்றது. இன்று வெயில் அடிக்கும், மேகமூட்டம், மழை பெய்யும், பலத்த காற்று அடிக்கும் அல்லது சூறாவளி காற்றுடன் மழை, அல்லது புயல் அடிக்கும் என்று சொல்லும் போது நாம் என்ன செய்கிறோம். வெளியே போகலாமா அல்லது வீட்டிலே இருக்கலாமா அப்படி போனால் குடை எடுத்து செல்வோமா? என்று யோசித்து செயல் படுகிறோம் அல்லவா. அதே போல் தான் ஜாதகத்தில் பலன் கேட்டாலும், என்ன பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து கொள்ள வேண்டும்.

பொதுவாக ஒருவருக்கு நேரம் சரியில்லை என்றால் தான் ஜாதகம் பார்த்து ஏதாவது பரிகாரம் செய்தால் எல்லாம் சரியாகுமா? என்ற எண்ணம் வரும். இரண்டாவது திருமண பொருத்தம் பார்பார்கள். மூன்றாவதாக குழந்தை எதும் பிறந்தால். மற்ற சமயத்தில் பார்பவர்கள் மிக சிலரே.

உதாரணத்திற்கு ஒரு குழந்தை கொடி சுற்றி பிறந்தால் தாய் மாமனுக்கு ஆகாது என்பது தான் பொதுவாக் தெரிந்த விஷயம். ஆனால் உண்மை அது வல்ல. அதன் சூட்சம் என்ன வென்றால்:

3 முறை சுற்றி இருந்தால் குழந்தைக்கும்
2 முறை சுற்றி இருந்தால் தாய்க்கும்
1 முறை சுற்றி இருந்தால் தாய் மாமனுக்கும்
பக்கங்களில் என்றால் தந்தைக்கும்
வல கையானால் சகோதரர்க்கும்
இட கையானால் குழந்தைக்கும்

இதை நம்புவோர்க்கு, இதை கண்டு பயபட தேவையில்லை. அனைத்துக்கும் பரிகாரங்கள் உண்டு. எப்படி பாம்பின் விஷத்திற்கு அதுவே முறிவாக இருக்கிறது போல்தான். அது தான் இந்த உலகின் ”டூயல் நேச்சர்” அல்லது இரட்டை விதி, இரவு – பகல்; ஆண் – பெண் என்பது போல.

திருமணப் பொருத்தம். மொத்தம் 21

1. தினம் : ஆயுள், ஆரோக்கியம்
2. கணம் : மனப்பான்மை
3. மகேந்திரம் : நலம்
4. ஸ்திரி தீர்கம் : பெண்ணின் ஆயுள்
5. யோனி : இணை விழைச்சு
6. இராசி : இருவரின் இணைந்த ஆயுள்
7. இராசி அதிபதி : மன ஓற்றுமை
8. வசியம் : கவர்ச்சி
9. ரச்சு : மாங்கல்ய விருத்தி
10. வேதை : துக்க நாசம

முகூர்த்த தருபணம் என்ற நூலில் உள்ளது

11. சாதி பொருத்தம்
12. நாடி பொருத்தம்
13. கணித பொருத்தம்
14. ஆயில்யம்
15. பஞ்ச பட்சி
16. யோகினி
17. இலிங்கம்
18. பஞ்சபூதம்
19. சந்திர யோக கூடம்
20. கோத்திரம்

700 ஆண்டுகளுக்கு முன் சேர்த்த்து (வீமேசுர உள்ளமுடையான்)

21. விருட்சப் பொருத்தம்

ஆகிய 21 பொருத்தங்கள் என காலமிர்தம் என்னும் நூல் கூறுகிறது.

“எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள்
மெய்பொருள் காண்பது அறிவு”

முகத்தில் சுருக்கங்கள் விழலாம் ஆனால் இதயத்தில் கூடாது.

ஹைஷ்126

நால்வகை ஆற்றல் வரவு

வயிறானது எப்பொழுதுமே நிறைந்திருக்க வேண்டும் என்பது தவறான எண்ணம். இந்தப் பழக்கத்திதனால் என்ன ஆகும் என்றால் உணவு கொஞ்சம் குறைந்து விட்டாலும் ஏதோ இழந்து விட்டது மாதிரி இருக்கும். அதைப் போட்டு நிரப்பி விட்டுத் தவிக்கிற வரைக்கும் மனதுக்குத் திருப்தி இருக்காது.

நமக்கு வரக்கூடிய உயிர்ச்சக்தி தினம்தோறும் செலவாகிக் கொண்டே இருக்கிறது. வந்துகொண்டேயும் இருக்கிறது. அது உணவிலே இருந்து ஒரு பகுதி, காற்றில் இருந்து இன்னொரு பகுதி, கோள்களில் இருந்து வரக் கூடிய அலைகளாக (Astronomical radiations) சேர்ந்து வர அவை துகள்களாகி அது ஒரு பகுதி, பூமியின் நடு மையத்திலிருந்து (Atomic fission) அணுக்கள் உடைகிற போது அதிலிருந்து தெறிக்கக் கூடிய அந்தத் துகள்கள் எல்லாம் பூமியினுடைய மேல்பக்கம் தான் நோக்கி வரும். அதிலேயிருந்து ஒரு பகுதி - ஆக நான்கு வகையிலே நம் உடலில் உள்ள சிற்றறைகள் (cells) நமக்குத் தேவையான உயிர்ச் சக்தியை அவ்வப்போது தேவையான அளவுக்கு ஏற்றிக் கொள்ளும். இந்த நான்கில் ஒவ்வொன்றுக்கும் ஒருவிதமான கனம் (density) உண்டு. அறிவுக்கும் உடலுக்கும் உகந்த விகிதத்திலே இவை ஈர்க்கப்பட வேண்டும். உணவை மாத்திரம் எப்போதும் நிரப்பி வைத்துவிட்டால் மற்ற மூன்று வகையில் இருந்து வருவதைத் தடுத்து விடுகிறோம். அப்படித் தடுத்து விடுவதனால் சில குறைபாடுகள் விளைகின்றன. சிலருக்குக் கால்சியம் சத்துக் குறைவாகவுள்ளது. இரும்புச் சத்துக் குறைவாகவுள்ளது (Calcium deficiency, iron deficiency) என்றெல்லாம் நீங்கள் கேள்விப்பட்டு இருப்பீர்கள். பலவிதமான உலோகச் சத்துக்கள், இரசாயனங்கள் எல்லாம் உடலுக்குத் தேவை. அவை குறைந்துவிட்டால் நோய் வரும். அதனால் எந்த உணவு சாப்பிட்டாலும் அது சுத்தமாயும் நல்ல சத்துடையதாகவும் இருக்க வேண்டும். போஷாக்கு என்பது உணவின் அளவைப் பொறுத்ததன்று. நீங்கள் ஜீரணம் செய்து பழகிய உணவாக இருக்க வேண்டும். அதே நேரத்தில் அடுத்த முறை உணவு எடுக்கும் போது ஒரு மணி நேரம் முன்னதாகவே பசி இருக்க வேண்டும். அதுதான் அளவு, முறை. ஒரு மணி நேரம் தினந்தோறும் இரண்டு வேளையும் பசி இருந்தால் அந்த நேரத்தில் உணவில் இருந்து ஜீவகாந்த சக்தியை இழுக்க முடியவில்லை என்றால் உடல் தானாகவே காற்றில் இருந்து, கோள்களின் அலை வீச்சிலிருந்து சக்தியை எடுத்துக் கொள்ள முடியும். அப்பொழுதுதான் அறிவுக்கு விருந்தாக, சிந்தனைக்கு ஏற்ற விருந்தாக நல்ல சக்தி நமக்குக் கிடைக்கும். வயிற்றை மட்டும் நாம் நிரப்பிக் கொண்டிருந்தால் உலக விவகாரங்களில் உழைக்கிறது என்ற வரைக்கும் தான் வரும். அதற்கு மேலே சிந்தனை ஆற்றல் நமக்கும் பெருகுவது சிரமம். சிந்தனைஆற்றலே மனிதனின் சிறப்பு.

முகத்தில் சுருக்கங்கள் விழலாம் ஆனால் இதயத்தில் கூடாது.

ஹைஷ்126

ஆஹா..இது வேதாத்திரி மகரிஷி அடிக்கடி கூறும் கருத்து. திரு. ஹைஸ் அவர்களே..என்னால் பொறுமை காக்க முடியவில்லை.

அன்பு சகோதரி கவின்,

மின்னஞ்சல் கிடைத்தா? அதில் சில விளக்கம் கொடுத்திருந்தேன்.

நல்லது யார் சொன்னாலும், அன்னபறவை பாலும் தண்ணீரும் கலந்து இருக்கும் போது அதில் இருந்து பாலை மட்டும் அருந்துவது போல்தான்.

அன்பு சகோதரன்.

முகத்தில் சுருக்கங்கள் விழலாம் ஆனால் இதயத்தில் கூடாது.

ஹைஷ்126

அன்பு சகோதரிகளே,

இ.பி.கோ 498(அ), ஏன் திருமணமான 7 வருடங்கள் மட்டும் தான் வரதட்சணை கொடுமைக்கான வழக்கு பதிவு செய்ய முடியும்.
மறைபொருளின் பதில்:

திருமணத்தில் இருந்து முதல் 7 வருடங்கள் ஒருவர் மற்றவரின் உடலை பற்றி அறிந்து கொள்வது.

8 இல் இருந்து 14, இரண்டாவது 7 வருடங்கள் வரை ஒருவர் மற்றவரின் மனதை பற்றி அறிந்து கொள்வது.

15 இல் இருந்து 21, மூன்றாவது 7 வருடங்கள் வரை ஒருவர் மற்றவரின் ஆன்மா பற்றி அறிந்து கொள்வது.

“சுவர் இருந்தால் தானே சித்திரம் வரைய முடியும்”

அதனால் தான்.

பி.கு : சைலண்டாக படிக்கும் சகோதரிகளுக்கு, பராட்டு வேண்டாம், ஆனால் பதிவு போட்டால் தானே இந்த இழை மேலே வரும். உயிருக்கு எப்படி சுவாசம் முக்கியமோ அதே போல், இந்த இழை உயிரோடு இருக்கிறது என்று எப்படி தெரிந்து கொள்வது. சுவாசம் போன்ற உங்களின் பதிவு இருந்தால் தானே உயிர் உள்ளது என்று தெரியும்.

அன்பு சகோதரன்

முகத்தில் சுருக்கங்கள் விழலாம் ஆனால் இதயத்தில் கூடாது.

ஹைஷ்126

ஹைஷ் அண்ணன், உயிர் இருக்கிறது,
எங்கேயோ உங்கள் பதிவில் 65 வயது என்று பார்த்தேன், உங்களுக்காகிவிட்டதோ என வந்தேன், அது பைலட்டாக இருக்கும் வயதென்று போட்டிருக்கிறீங்களென நினைக்கிறேன். இருந்தாலும் நீங்கள் அனுபவம், வயது , அறிவு அனைத்திலும் என்னைவிட மூத்தவர்தான் எனத் தெரிந்துகொண்டேன்.

என் கனவிற்கு, உங்கள் தாமதமான பதிலுக்கு மிக்க நன்றி:). மனிஷனின் உயிருக்கே உத்தரவாதமில்லாத இந்தக் காலத்தில இழைக்கு உயிரில்லையே என கவலைப்படுறீங்கள்:), அப்படியெல்லாம் நினைக்கக்கூடாது, நாம் மற்றவர்களுக்கு நல்லது செய்தால், அவர்கள் மூலம் பலன் வராவிட்டாலும், எமக்கு ஏதோ வழியில் அதற்கான பலன் உண்டு. அப்படித்தான், இதைப் படித்துவிட்டு இழையை யாரும் மறந்துவிட்டார்களே என நினைக்க வேண்டாம். எங்கள் தோழிகளுக்கு கொஞ்சம் பஞ்சிக்குணம் உண்டு, 100 பதிவைத்தாண்டினாலே திறந்து படிக்க மாட்டார்கள், அதிலும் இப்போ எங்கள் அட்மின், ஓடி உடம்பையாவது கொஞ்சம் இளைக்க வையுங்கோ என்று, 30, 30 தாக இருந்ததை 10,10 தாக்கிப்போட்டார். அதுதான் சங்கதி.

நீங்கள் பகுதி 2 ஆரம்பியுங்கோ.... எனக்கொரு கேள்வி இருக்கு, பிறகு கேட்கிறேன். எழுதியதில் தவறிருந்தால் அனைவரும் என்னை மன்னிக்கவும்.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

அன்பு சகோதரரே,
நல்லா கதை சொல்றீங்க.அறுசுவை அக்காக்களை எல்லாம் சேர்த்தது நல்ல ரசனை.ரசித்து படித்தேன்.நல்ல கருத்துள்ள கதை.

// இல்லாதவன் இருப்பவரிடம் பிச்சை கேட்கிறான். நாம் எல்லாம் என்ன பிச்சைகார்ர்களா? நம்மிடம் மற்றவர் (அப்பா, அம்மா, அண்ணன், அக்கா, தம்பி, தங்கை, கணவன், மனைவி, பிள்ளைகள், உற்றார் உறவினர், நண்பர்கள்) அன்பு காட்டவில்லை என்று ஏங்கி அன்பை அவர்களிடம் இருந்து பிச்சை எடுப்பதற்கு, நம்மிடம்தான் அன்பு ஏராளமாக இருக்கிறதே பின் ஏன் எதையோ எதிர்பார்த்து மற்றவர்க்கு அன்பு காட்ட தயங்குகின்றோம். எதையும் எதிர் பார்காமல் அன்பை அள்ளி வழங்கி வள்ளாக மாறினால் அந்த அன்பு பல் மடகாக நம்மிடம் திரும்பி வரும், நாம் பிடித்து வைத்து கொள்ள அல்ல இன்னும் அதிகமாக் கொடுக்கதான்.//
எவ்வளவு அழகா சொல்லியிருக்கீங்க.ஒவ்வொருவர் மனதிலும் பதிய வேண்டிய வாசகம்.

விழாமல் இருப்பது பெருமையன்று. விழும் போது எல்லாம் எழுவது தான் பெருமை.

மேலும் சில பதிவுகள்