மறைபொருள் ரகசியங்கள்

"சீவாங்க வேதத்தைச் செப்ப வந்தேனே
அவன் அடி நாள்தொறும் சிந்தை செய்து
ஆகமம் செப்ப லுற்றேனே"

திருமுலர்

நேரம் கிடைக்கும் போது மந்திரம், தந்திரம், யந்திரம், ரசவாதம், சோதிடம், வர்மம், நுண் ஆற்றல் எனும் சத்தி மருத்துவம், மூவுலகம், யோகத்தில் ஹதயோகம், கர்மயோகம், இர்ரஜயோகம், ஞானயோகம், சரயோகம், வாசியோகம், தற்காப்புகலையில் வெண்கல உடல், நிஞ்ஜா, கினோசி, சீ குங், தசமகா வித்தை, அட்டகர்மம், பஞ்சபச்ஷி போன்ற சில ரகசிய மறைபொருள்களைபற்றி எனக்கு தெரிந்த சிறிதளவு பகிர்ந்து கொள்ளலாமா??? (365.25 நாட்களுக்கு மட்டும். அது ஒரு சுட்ஷம கணக்கு)

பி.கு: தனிஷா மேடம் திட்டுவது தெரிகிறது? அது என்ன 365.25 நாட்கள் பதில் 27 மார்ச் 2010 இரவு 23:59:59 (IST இந்திய நேரபடி)/ (18:29:59 (UTC/GMT)!!! அல்லது நடுவிலே தவறி சொன்னாலும் சொல்லிவிடலாம்.

ஊக்கம் கொடுத்த திரு அட்மின் அவர்களுக்கு நன்றி. முதலிலேயே நன்றியை கூறி விட்டேன் எதற்கு தெரியுமா? அவசரகாலத்தில் ஓடி வந்து அடிவாங்காமல் காப்பாற்றதான்!!!

சிரிப்பே சிறந்த மருந்து
சகோதரர் ஹைஷ் அவர்களுக்கு!
உங்கள் த்ரெஅட் முதலிலிருந்து இறுதி வரை ஒரே மூச்சில் இன்றுதான் படித்து முடித்தேன். எனக்கு ஒரு சந்தேகம்.
//திருமணத்தில் இருந்து முதல் 7 வருடங்கள் ஒருவர் மற்றவரின் உடலை பற்றி அறிந்து கொள்வது.8 இல் இருந்து 14, இரண்டாவது 7 வருடங்கள் வரை ஒருவர் மற்றவரின் மனதை பற்றி அறிந்து கொள்வது.
15 இல் இருந்து 21, மூன்றாவது 7 வருடங்கள் வரை ஒருவர் மற்றவரின் ஆன்மா பற்றி அறிந்து கொள்வது//
என்று போட்டிருக்கிறீர்கள். திருமணத்திற்குப்பிறகு ஒன்றரை மாதம் இருந்த என் கணவர் வெளி நாடு சென்றுவிட்டார். அதிலிருந்து இரண்டு மூன்று வருடங்களுக்கு ஒருமுறைதான் வருவார். இரண்டு மாதங்கள் மட்டுமே இருப்பார். அதனால் பதினைந்து வருடங்கள் தாண்டி விட்ட நிலையிலும் என்னால் புரிந்து கொள்ள முடிய வில்லை. நீங்கள் சொன்ன பிரிவில் நாங்கள் எந்தவருடப் பிரிவு என்று தெரிய வில்லை.

சிரிப்பே சிறந்த மருந்து

உங்களுடைய எல்லா இழைகளும் மற்றும் பதில்களும் நல்ல பயன் தரக் கூடியதாக உள்ளது மிகவும் நன்றி

BE HAPPY ALWAYS

கண்டிப்பாக மிகவும் பயனுள்ள விஷயங்கள் கூறி இருகிறீர்கள் திரு Haish.
நானும் கனவு பற்றி ஒரு கேள்வி கேட்க வேண்டும்.உங்களுக்கு ஈமெயில் அனுப்பி இருக்கிறேன்.
பாராட்டுக்கள்

அன்பு சகோதரர் அவர்களுக்கு,
// சைலண்டாக படிக்கும் சகோதரிகளுக்கு, பராட்டு வேண்டாம், ஆனால் பதிவு போட்டால் தானே இந்த இழை மேலே வரும்.//
என்னமோ என்னை சொல்வது போல எனக்கு தோன்றியது...உங்கள் பதிவை பார்த்து அதிசயத்து இருக்கிறேன்.. ஆனால் பதில்போட அதைபற்றிய அடிப்படை அறிவு இருக்க வேண்டும் என்பது என்னுடைய கருத்து..அதை தவிர்த்து ஏதாவது கேள்வி கேட்டால் அது சமயக் கேள்வியாக கருதப்படுகிறது..அதனால்தான் அமைதியாக படிப்பது...

திரு ஹஸ்,

ஆசையை பற்றி எழுதுவதாக கூறிவிட்டு அதை எழுதவில்லையே? அதைப்பற்றி தெரிந்து கொள்ள ஆவல்.

அன்பு சகோதரி அதிரா: மிகவும் நன்றி. உயிர் உள்ளது என விளக்கியமைக்கு. உங்களின் கேள்வி என்னவோ? கேட்டுவையுங்கள், கூடிய விரைவில் பதில் அளிக்கிறேன்.

அன்பு சகோதரி திவ்யா அருண்: தங்களின் பாரட்டுதல்களுக்கு மிகவும் நன்றி.

அன்பு சகோதரி ரபியா சர்ஃபூதீன்: புள்ளியிலில்(Statistic) ”நார்மல் டிஸ்டிரிபூஷன்- Normal distribution” அதாவது எல்லோருக்கும் சில பொதுவான கருத்து என்பது. அதில் எக்‌ஷப்ஷன் இருபுறமும் உள்ளது(Exceptions are always there, in the lower and higher ends) . அதைதான் ஊழ்வினை பதிவுகள் என்பது.
உதாரணத்திற்கு ஐ. க்யூ (I.Q) என்று எடுத்து கொண்டால் பொதுவாக 90% மக்கள் சராசரி அறிவு உள்ளவர்களாக இருபார்கள். அதே போல் பெல் கர்வின் (Both the edges of the Bell curve) இருபுறமும், ஒருபுறம் ஜீனியஸில் இருந்து பிராடிஜி வரையும்(Genius to Prodigy), மறுபுறம் அடி முட்டாளில் இருந்து முட்டாள் வரையும் இருப்பார்கள் (Naturally Challenged (imbecile) people to Moron).

அதனால் உங்களின் வாழ்கை அனுபவத்தில் ஊழ்வினை பதிவை குறைப்பதற்கா இருக்கலாம் என நினைக்கிறேன்.

அன்பு சகோதரி அனாமிகா 9902: தங்களின் பாரட்டுதல்களுக்கு மிகவும் நன்றி.

அன்பு சகோதரி RSMV: மின்னஞ்சல் பதில் கிடைத்து இருக்கும் என நினைக்கிறேன். மின்னஞ்சலில் வேறு பெயர் இருப்பதால் இணைத்து பார்த்து பதில் சொல்லமுடியவில்லை. (நீங்கள் தானா அவர் என்று)

அன்பு சகோதரி ஷர்மி: // ஆனால் பதில்போட அதைபற்றிய அடிப்படை அறிவு இருக்க வேண்டும் என்பது என்னுடைய கருத்து..அதை தவிர்த்து ஏதாவது கேள்வி கேட்டால் அது சமயக் கேள்வியாக கருதப்படுகிறது..அதனால்தான் அமைதியாக படிப்பது...// நீங்கள் அடிப்படை அறிவு என்று குறிப்பிடுவது எது? அப்படி அடிப்படை இல்லாமலா நாம் எல்லாம் பள்ளி, கல்லூரி சென்று படித்தோம். அப்படியே நீங்கள் ஏதாவது இந்த இழையில் சமயம் சார்ந்த கேள்விகள் கேட்டாலும், சமயம் கலக்காமல்தான் என்னிடம் இருந்து பதில் வரும். அதனால் தயக்கம் வேண்டாம்.

1. சிறு வயதில் ஆல்பர்ட் ஐயின்ஸ்டின் ஏதோ மாடின் வாலை நட்டுவைத்தாராம் அதில் இருந்து மாடு மூளைக்கும் என்று. அப்போது அவருக்கு எவ்வளவு அடிபடை அறிவு இருக்க வேண்டும், அதன் பின் அவர் என்ன என்ன கண்டுபிடித்தார் என தாங்கள் அறிவீர்கள்.

2. நான் விமானம் பயிற்றுவிக்கும் ஆசிரியாரக பணிபுரிந்த போது, என் கருந்து என்னவென்றால், என்னிடம் வந்த மாணவர்கள் அனைவரும் அறிவில் சிறந்தவர்கள் அவர்கள் சரியாக விமானம் ஓட்டவில்லை என்றால், எனக்கு அவர்களுக்கு புரிகிறமாதிரி கற்று கொடுக்க தெரியவில்லை என்றே கருதுவேன். அதனால் இன்னும் அவர்களுக்கு புரிகிறமாதிரி எப்படி கற்று கொடுக்கலாம் என யோசித்து சொல்லி கொடுப்பேன். இந்த முறையை அனவருமே பயன் படுத்தி பார்கலாம்.

3. உங்கள் கணவரோ அல்லது (வரபோகும்) குழந்தைகளொ நீங்கள் சொல்வதை ஏற்கவில்லை என்றால் அவர்களிடம் தவறு இல்லை. உங்களுக்கு அவர்கள் எற்று கொள்ளுமாறு சொல்ல தெரியவில்லை என்று தானே அர்த்தம்??? இதில் முக்கியமான் பிரச்சனை என்னவென்றால் தன்முனைப்பு என்னும் ”ஈகோ” தான்.

அன்பு சகோதரி கவின்: எனக்கும் நிறைய எழதவேண்டும் என்ற ஆவல்தான். ஆனால் அத்தி பூத்த மாதிரிதான் எப்போதாவது நிறைய நேரம் கிடைக்கும் அல்லது கிடைக்கவே கிடைக்காது. கிடைக்கும் போது கண்டிப்பாக ஆசை சீரமைப்பு பற்றியும், அருங்குண சீர்ரமைப்பு பற்றியும் பகுதி இரண்டில் (23 மே க்கு பிறகு) எழுதுகிறேன்.

அன்பு சகோதரன்

முகத்தில் சுருக்கங்கள் விழலாம் ஆனால் இதயத்தில் கூடாது.

ஹைஷ்126

அன்பு சகோதரர் அவர்களுக்கு,
அடிப்படை அறிவு என்று நான் குறிப்பிடுவது நீங்கள் எழுதியுள்ள "மறைபொருள் ரகசியங்கள்" பற்றி......
1. பள்ளிக்கு 1-ஆம் வகுப்பு,2-ம் வகுப்பு அப்படி படிபடியாகத்தான் செல்கிறோம் அல்லவா....வயது ஆகிறது என்பதற்காக முதலிலியே பத்தாம் வகுப்பு சென்று விடுவதில்லையே...
2.உதாரணமாக,B.E,diplamo படித்து 8 வருடமாக பனிபுரியும் இருவர்க்கும் வேலை செய்யும் சூட்சமும் பொதுவாகத்தான் தெரிகிரது...அவர்கள் மேற்படிப்புக்கு செல்லும் போது அதாவது MBA படிக்க வேண்டும் என்று நினைத்தால்,Engineering படித்தவர்கள் நேரடியாக சேரலாம்..ஆனால் Diplamo படித்தவர்கள் அப்படி சேர முடியாது..
3.இதனால் அவர்களுக்கு புரியாது என்பதும், இல்லை ஆசிரியர்களுக்கு புரிகிற மாதிரி சொல்லி தர முடியாது என்பதும் கிடையாது...
அதாவது படிபடிப்படியாக பயில வேண்டும் என்பதுதான்..

அதைதான் அடிப்படை அறிவு என்று நான் சொல்கிறேன்..
அதனால் நீங்கள் புரிகிற மாதிரி சொல்லவில்லை என்பது இல்லை..
படிபடியாக அதை பற்றிய தெளிவு வந்தால்தான் அதை பற்றிய சந்தேகங்களும் வரும் ...
சரிதானே..

இதன் தொடர்சி பகுதி இரண்டில் அதன் லிங் கீழே உள்ளது.

http://www.arusuvai.com/tamil/forum/no/12522

மறைபொருள் படங்களின் லிங் இதன் கீழ் உள்ளது

http://picasaweb.google.co.in/haish12

முகத்தில் சுருக்கங்கள் விழலாம் ஆனால் இதயத்தில் கூடாது.

ஹைஷ்126

சிரிப்பே சிறந்த மருந்து
இதைப் படிக்கும்போது மனதில் ஒரு அமைதி கிடைக்கிறது. உலக இச்சைகளில் ஒரு வெறுப்பு ஏற்படுகிறது. ஆரம்பத்தில் இருந்து எல்லா பதிவுகளையும் படித்துக்க் கொன்டிருக்கிறேன்.

சிரிப்பே சிறந்த மருந்து

இன்று தான் உங்கள் முதல் பதிவு முழுவதும் படித்து முடித்தேன். மிகவும் இன்ரஸ்டிங்க்கா இருந்தது.மேலும் தொடருங்கள்.நன்றி
சதாலட்சுமி

சதாலட்சுமி

மேலும் சில பதிவுகள்